Posts

Showing posts from November, 2022

*என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம்*

Image
*என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில்  மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம்* ப்ரைமில் விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தான் 'வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்கு குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக் களத்தை 'வதந்தி' தரும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். தமிழகத்தில் குமரன் தங்கராஜன் நன்கு பரிச்சியமான நடிகர்தான். அவரை 'வதந்தி' ட்ரெய

*உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

Image
*உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* *சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, 'நந்தன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு,

கெத்துல' சினிமா விமர்சனம்

Image
கெத்துல' சினிமா விமர்சனம் திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியிருக்கிறது 'கெத்துல.' கதை... அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி தனது 'அந்தரங்க ஆசை'க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அணுகுகிறார். அவரை, அந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்...  இப்படி பயணிக்கும் கதையில் ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்? ஸ்ரீஜித்தை பழிவாங்கத் துடிக்கிற சலீம் பாண்டா என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார் என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் சிலபல திருப்பங்களோடு விரிகிறது. ஸ்ரீஜித் யார் என்ற முன்கதையில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் இருக்க

*ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு*

Image
*ஸ்ரீராமரின் ஆசி பெறுவதற்காக அயோத்தி சென்ற ‘ஹனு-மேன் படக்குழு* விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தனர். படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு 'ஹனு-மேன்'. இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி, வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. 'ஹனு-மேன்' படத்தின் டீசருக்கு கிடைத்த ஆதரவால் மனம் மகிழ்ந்த பட குழுவினர்,  ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் படக்குழுவினர் ஈடுபட்டனர். இவர்களின் இந்த ஆன்மீக பயணம், அடுத்தக்கட்ட விளம்பரத்தை தொடங்குவதற்கானது என தயாரிப்பு தரப்பு  தெரிவித்திருக்கிறது. வளர்ந்து வரும் முன்னணி

*விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

Image
*விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இந்தப்படம் இளையதலைமுறையினரிடத்தில் கனவு காணவேண்டியதன் அவசியத்தை கற்றுத் தருகிறது.* - *இயக்குநர் ரிஷிகா சர்மா* *மஞ்சள் வண்ண லாரியின் மகத்தான் சரித்திரம் தான் ‘விஜயானந்த்’* - *பாடலாசிரியர் மதுரகவி* *“சினிமா என்பது கலை. வியாபாரமல்ல”* - *நாயகன் நிஹால்.* சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத்  தழுவி தயாராகியிருக்கும் 'விஜயானந்த்'எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீலதா பிரகலாத், பரத் போப்பண்ணா, அனந்த் நாக், வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர

சந்திரபாபுவின் பேரன் நடித்து,இயக்கிய ‘தெற்கத்திவீரன்’ டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது

Image
சந்திரபாபுவின் பேரன் நடித்து, இயக்கிய  ‘தெற்கத்திவீரன்’  டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது  ‘தெற்கத்தி வீரன்’ திரைப்படமான தூத்துக்குடி உண்மை சம்பவம்  ஆக்‌ஷன் விருந்து படைக்கும்  சாரத்தின் ’தெற்கத்தி வீரன்’  ’தெற்கத்தி வீரன்’ படத்தில் பட்டையை கிளப்பும் ”கடலம்மா..” பாட்டு விறுவிறுப்பையும் பரபரப்பையும் பற்ற வைக்கும் ‘தெற்கத்தி வீரன்’ ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த முனைந்து ‘தெற்கத்தி வீரன்’ படம் மூலம் அறிமுகமாகிறார் சாரத். சந்திரபாபு பிலிம் ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் அறிமுக நாயகன் சாரத், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, தயாரித்து, நாயகனாக  அறிமுகம் ஆகும் படம் ‘தெற்கத்தி வீரன்’. இப்படத்தில் சாரத்தின் நண்பர்களாக ’முருகா’ அசோக், ‘நாடோடிகள்’ பரணி, ’மாரி’ வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயண

’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங்

Image
’பாம்பாட்டம்’ ரெக்கார்டிங்  ஸ்டூடியோவுக்குள் புகுந்த நிஜ பாம்பு -டிரைலர் வெளியீட்டு விழாவில் அம்ரிஷ் பேச்சு ”குடியால் கெடும் குடும்பங்கள்” முதல்வருக்கு கே.ராஜன் வேண்டுகோள் ”100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால்  சினிமா நல்லா இருக்காது” ’பாம்பாட்டம்’ விழாவில் போட்டு தாக்கிய கே.ராஜன் ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’,  ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள  ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார். விழாவில் இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசியபோது, “இந்தப் படத்தில் பெரிய அனிமேஷன் பாம்பு வருகிறது. பாம்பு வரும் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்தபோது அந்த சத்தத்தை கேட்டுவிட்டு என ஸ்ட

ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம்

Image
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’  120 அடி நீள ராட்சத  பாம்பு செய்யும் அட்டகாசம்  இந்திய சினிமாவில்  பார்க்காத ஆச்சரியம்               “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பற்றவைத்துள்ளது. “கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.  வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு  சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’,  ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார்.  ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்த

*இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி*

Image
*இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின்  'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' தொடரின் பிரத்யேக காட்சி* கோவாவில் நடைபெற்று வரும் 53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் திரில்லர் வலைதள தொடரான 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி', வருகை தந்த பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி 'தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர்- காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த தொடரில் எஸ்.ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொடரின் முதன்மையான கதாபாத்திரமான வெலோனி எனும் வேடத்தில் புதுமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், விவேக் பிரச

*"வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது" - புஷ்கர்- காயத்ரி !!*

Image
*"வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது" -  புஷ்கர்- காயத்ரி !!* வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர்  பிரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக  சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில்  தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது.  வதந்தி தொடர், இளமமையும்  அழகுமான  வேலோனியின் உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இந்த தொடரில் சஞ்சனா, வேலோனி பாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இந்த தொடரின் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். வெலோனி பாத்திரத்தின் கதை வதந்திகளால் நிறைந்துள்ளது. அதை கண்டுபிடிக்கும் உறுதி மிகுந்த  போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார்.  பொய்களின் வலையில் சிக்கியிருக்கும், உண்மையைக் கண

Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies.

Image
  Eco Friendly Electric Scooters   launched  to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap  Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. In an event held at a commercial complex in Nungambakkam ,  Chennai ,   BGauss Auto Private Ltd., a leading company in the manufacture of electric scooters has signed an agreement with  Go Zap to implement this project. According to this  agreement  it has been decided to promote electric scooters to the employees of private companies that deliver food and vegetables and 50 scooters have been provided in the first phase. It is planned to provide 3000 scooters across Tamilnadu soon. An app has also been developed to avoid the problem of battery charging due to long distance driving by delivery workers. If you post and report when the battery is finished charging   Go  Z ab will provide the battery immediately and ensure that their work is not affected. For this branches of Go Saab are operating at variou

*“சல்லியர்கள் கதையை புரிந்துகொள்ளவே ஒரு மாதம் ஆனது” ; இசையமைப்பாளர் கென் கருணாஸ்*

Image
*“சல்லியர்கள் கதையை புரிந்துகொள்ளவே ஒரு மாதம் ஆனது” ; இசையமைப்பாளர் கென் கருணாஸ்* *153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” ; நெகிழ்ந்த கருணாஸ்* *மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம் ; வியந்த இயக்குநர் கிட்டு* *சல்லியர்கள் பட இயக்குநர் கிட்டு வித்தை தெரிந்த ஆள் தான் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *கொடூர வில்லனாக நடித்துவிட்டு கதறி அழுத களவாணி திருமுருகன்*  *மருத்துவர்களை பெருமைப்படுத்திவிட்டார் கருணாஸ் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *என் மகனை நடிகனாகவே பார்க்க விரும்புகிறேன் ; கருணாஸ்* ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.  சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்பட

ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : 'பட்டத்து அரசன்' பட அனுபவம் பற்றிக் கூறுகிறார் நடிகர் 'களவாணி' துரை சுதாகர்!

Image
ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : 'பட்டத்து அரசன்' பட அனுபவம் பற்றிக் கூறுகிறார்  நடிகர் 'களவாணி' துரை சுதாகர்! தஞ்சாவூரில் உள்ள  கபடி வீரர் குடும்பம் பற்றிய படம் .உண்மை சம்பவங்களை தழுவி எடுத்த படம் நட்சத்திரக் கூட்டங்கள் நடுவே நடித்த அனுபவம் : வியந்து கூறுகிறார்   'களவாணி' துரை சுதாகர்! தேசிய விருது இயக்குநர் ஏ.சற்குணம் இயக்கிய 'களவாணி 2 'படத்தின் மூலம் அழுத்தமாகத் திரை ரசிகர்கள் மனதில் பதிந்த நடிகர் துரை சுதாகர். அவர் இப்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்  தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்து கொள்கிறார் . "நான் களவாணி 2 படத்தின் நடித்ததன் மூலம் எனக்குப்   அழுத்தமான அறிமுகமும் பெரிய அங்கீகாரமும் கிடைத்தன.என்னை களவாணி துரைசுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள். அதற்காக இயக்கு

*நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு*

Image
*நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு* நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா - இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஜெய் பாலையா..' எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் 'ஜெய் பாலையா..' எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்... ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்... என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.

*நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ' தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு*

Image
*நடிகர் விஷ்வக் சென் நடிக்கும் ' தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு* தெலுங்கு திரை உலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமான விஷ்வக் சென் நடிப்பில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படமான 'தாஸ் கா தம்கி' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஃபலக்னுமா தாஸ்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷ்வக் சென் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தாஸ் கா தம்கி'. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராவ் ரமேஷ், ஹைப்பர் ஆதி, ரோகிணி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அன்வர் அலி கவனிக்க பிரசன்ன குமார் பெசவாடா வசனம் எழுதியிருக்கிறார். அழகான காதலுடன் கூடிய திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வன்ம

*'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெறும் 'பாஸ் பார்ட்டி..' பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு*

Image
*'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெறும் 'பாஸ் பார்ட்டி..' பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியீடு* *'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி- நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து நடனமாடியிருக்கும் 'பாஸ் பார்ட்டி..' பாடல் வெளியீடு* ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே. எஸ். ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ 'மெகா ஸ்டார்&#

*குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ; காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அதிரடி பதில்*

Image
*குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ; காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அதிரடி பதில்* *குதிரைப்பந்தய நுணுக்கங்களை ஜல்லிக்கட்டில் பயன்படுத்திய சசிகுமார்* *ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத்தானே தவிர யாரையும் எதிர்க்கும் வசனங்கள் இல்லை ; காரி பட இயக்குனர் ஹேமந்த்* *ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு சரியான திசையில் நகர்கிறது ; நடிகர் சசிகுமார்*  ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம்.. வாழ்வியல்.. ஆனால் இதுபற்றி எதுவுமே தெரியாத சில விலங்கு நல ஆர்வலர்களும் வெளிநாட்டை சேர்ந்த பிராணிகள் நல அமைப்புகளும் ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் நாம் காளைகளை துன்புறுத்துவதாக கூறி அதை தடைசெய்யும் அளவுக்கு துணிந்தனர். கடந்த 2018-ல் தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி போராடி மெரினா புரட்சி மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். கடந்த சில வருடங்களாக எந்த பிரச்சினையுமின்றி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில், தற்போது பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கு இன்றுமுதல் (நவ-23) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு