*விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!*
*விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!* இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதி...




