இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும். இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.
Comments
Post a Comment