" பரிவர்த்தனை " படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.


" பரிவர்த்தனை " படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

M S V புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படத்திற்கு " பரிவர்த்தனை " என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.

வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே  தொடரில் நாயகியாக  நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரின் வில்லன் பாரதி மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்களோடு இளம் வயது நாயகர்களாக  விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன் மற்றும்  இளம் வயது நாயகிகளாக 
 சுமேகா, ஹாசினி  நடித்திருக்கிறார்கள். இவர்களுடன்  ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இணை  இயக்குனராக வி இளமாறன் பணியாற்றியுள்ளார்.
ஒளிப்பதிவு - K. கோகுல் 
இசை - ரஷாந்த் அர்வின்.
நடனம் - தீனா
எடிட்டிங் - பன்னீர் செல்வம் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது....

காத்திருந்தால் காலம் கடந்தாலும்  காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் எதை எதையோ பரிவர்த்தனை செய்கிறோம் அது போல இந்த காதல் பரிவரித்தனையும் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்றார்.

படம் முழுவதும் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும்  இடமான புளியஞ்சோலையில் படமாக்கியிருக்கிறோம்.

இறுதி கட்ட பணியில் இருக்கும் இத்திரைப் படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் மணிபாரதி.

Comments

Popular posts from this blog

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்*

Maasoom Shankar- The Anastasia Steele of south cinema

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '