இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !! 
ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !! 


தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, 
பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.  

தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் வர் நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,   அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார். 

நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வெற்றி பெற்றன. நாயர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது.  அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா.   20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய  திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா. 

தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 


 தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர்

Comments

Popular posts from this blog

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்*

Maasoom Shankar- The Anastasia Steele of south cinema

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '