ஹெச்.எம்.எம் (அக்கு மீ மோர்) திரைவிமர்சனம்: பேஷன்ஸ் மோர்

ஹெச்.எம்.எம் (அக்கு மீ மோர்) திரைவிமர்சனம்: பேஷன்ஸ் மோர்

 


ஹெச்.எம்.எம் (H.M.M) படத்தில் கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் ஆகிய தொழில்நுட்பங்களை கையாண்டுள்ளவர்  நரசிம்மன் பக்கிரி சாமி. பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.

 

சுமிரா  என்கின்ற சுமி  ஒரு மலைப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் தனியாக இருக்கிறாள். அன்று இரவு ஷர்மிளா என்கின்ற ஷர்மி சுமியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நள்ளிரவில் சுமியின் வீட்டிற்கு வருகிறாள். பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தனியாக இரவு நேரத்தில் செல்லும் வழியில் ஒரு மர்ம மனிதன் முகமூடி அணைந்து கொண்டு ஷர்மியை கொடூரமாக கொலை செய்து விடுகிறான்

 

இரண்டாம்


பாதியில் சுமியை கொலை செய்வதற்காக பூட்டிய  கதவை சுற்றி சுற்றி வருகிறான். அந்த முகமூடி மனிதன், இந்த நிலையில் சுமியின் உறவுகளை கொன்று விடுகிறான், அந்த மர்ம மனிதன். இதை கண்டு சுமி  பயந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கின்றாள். அந்த மர்ம மனிதன் யார்  எதற்காக சுமியை கொலை செய்ய முயற்சி செய்கிறான். ஐந்தே கதாபாத்திரங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் நிறைந்த படம் ஹெச். எம் எம்.

 



அக்கு மீ மோர் என்று டைட்டில் வைத்துவிட்டு கொலைகள் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக அமைந்துள்ளது. படம் தொடக்கத்தில் மெதுவாக நகர்கிறது, குறிப்பாக சமைப்பதற்கே 10 நிமிடம் எடுத்துக் கொள்ளும் சுமி நம் பொறுமையை சோதித்து இருக்கிறாள்.

 

சுமி என்னும் கதாபாத்திரம் தொடக்கத்தில் முதல் இறுதி வரையில் ஆங்கிலமே அதிகம் பேசி நடித்துள்ளார். இதற்குக் காரணம் இப்படத்தில் சுமி என்பவர் வெளிநாட்டைச் சார்ந்தவர் என்பதினால்.

 


முதல் பாதையில் அழகு நிறைந்த பதுமையாக வலம் வரும் சுமி, இரண்டாம் பாதியில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி உள்ளார்.  மற்ற நால்வரின் நடிப்பு, மிகவும் நேர்த்தியாகவும் இயல்பாகவும் நடித்திருந்தார்கள். புரூஷ் இசை அருமை அதிலும் அக்கு மீ மோர் பிஜிஎம் திகில் நிறைந்ததாக அமைந்திருந்தது. சண்டைக் காட்சிகள் இயல்பாகவே இடம்பெற்றது. "ஸ்டண்ட் சுரேஷ”  சண்டை காட்சிகள் எந்தவித  சினிமா தனம் இல்லாத சண்டைக் காட்சியாக அமைந்திருந்தது. மொத்தத்தில் அக்கு மீ மோர் - Hug Me More, Patience more. 

- Deepa Vijendra Rao 

Comments