“நேர்படப் பேசு”மதிக்கப்படும் நம்பர்1 விவாத நிகழ்ச்சியாக “நேர்படப் பேசு” தேர்வு
“நேர்படப் பேசு”
மதிக்கப்படும் நம்பர்1 விவாத நிகழ்ச்சியாக “நேர்படப் பேசு” தேர்வு
சமகால அரசியல் போக்குகளை கட்சிப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்டு விவாதித்து பிரச்சனையின் பல கோணங்களையும் வெளிக்கொண்டு வருகிறது நேர்படப் பேசு நிகழ்ச்சி. அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள் என பல்வேறு தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகின்றன. நெறியாளர்களின் துல்லியமான கேள்விகள் கூடுதல் சிறப்பாகும். நான்கு பங்கேற்பாளர்கள் மட்டும் பங்கேற்பது நேர்படப் பேசுவின் நடுநிலையை வெளிப்படுத்துகிறது. 13 ஆண்டுகளைக் கடந்தும் மக்களால் அதிகம் பார்க்கப்படும், மதிக்கப்படும் நம்பர் 1 விவாத நிகழ்ச்சியாக நேர்படப் பேசு விளங்குகிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்படப் பேசு நிகழ்ச்சி தினமும் இரவு 8:00 மணிக்கு நேரலையிலும், மறு ஒளிபரப்பு அடுத்த நாள் மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாகின்றன. கார்த்திகேயன், விஜயன், திலகவதி, வேதவள்ளி ஆகியோர் நேர்படப் பேசு நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார்கள்.
Comments
Post a Comment