ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் இயக்குநர் என்.டி. நந்தா !!


ஏஐ மூலம் உருவான வீடியோ பாடல், ஆச்சரியப்படுத்திய இயக்குநர் என்.டி. நந்தா !! 

வல்ல தேசம் படம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா, புதுமையான முறையில் ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி அசத்தியிருக்கிறார். 

இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி அசத்தியிருக்கிறார்.  

சிறு வயது முதலே சினிமா துறை மீது காதல் கொண்டு அதில் சாதிக்க வேண்டும் என இயங்கி  வரும் நந்தா தனது படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.

தமிழ் திரைப்படத்துறையில் இயக்குநராகத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், 2017-ல் வெளிவந்த “வல்ல தேசம்” எனும் அதிரடித் திரில்லர் திரைப்படத்தின் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். இந்த படத்தில் அவர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் ஒளிப்பதிவாளர் (DoP) எனப் பல பொறுப்புகளை ஏற்று தனது பன்முகத் திறமையையும் நிரூபித்துள்ளார். 

தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த  புதிய வீடியோ ஆல்பம் பாடலை  உருவாக்கி அசத்தியிருக்கிறார். 

“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை இன்பத்தை வெகு அழகாகச் சொல்கிறது.  இப்பாடல் You Live Only Once எனும் பெயரில் சிற்சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். 

இன்று வெளியாகியிருக்கும் இப்பாடல் இசை ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தற்போது, நந்தா “120 ஹவர்ஸ்” எனும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

Comments