KALAIGNAR TV – GOWRI SERIAL
அம்மனின் அருள்வாக்கு பலிக்குமா - கும்பாபிஷேகத்துக்கு முன் அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, கும்பாபிஷேக நாள் நெருங்கி வரும் நிலையில், உண்மையான அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா என்கிற பரபரப்பில் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.
முன்னதாக, கோயிலில் அம்மன் சிலை மாற்றப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக சிலை கோயிலுக்கு கொண்டு வரப்படும் என்று துர்கா ரூபத்தில் அம்மன் அருள்வாக்கு கொடுத்திருப்பார்.
அதன்படி, கும்பாபிஷேக நாளும் நெங்கி வரும் நிலையில், உண்மையான அம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்படுமா என்கிற பரபரப்போடும், துர்கா வருகை மற்றும் கனகாவின் வெளியேற்றம் என தொடர் முக்கிய கட்டத்தில் சூடுபிடித்திருக்கிறது.
Comments
Post a Comment