"மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!
"மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!
டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.
துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
"மதராஸி" படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,
நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு "சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்…,
“மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை. மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்.
டைம்ஸ்/ஜங்லீ மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மந்தர் தாக்கூர் கூறுகையில்..,
“அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக்திவாய்ந்த மிகப்பெரிய கூட்டணி. "சலம்பல" என்பது மீண்டும் மீண்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். இது முதல் நொடியிலேயே உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான பாடலுடன் "மதராஸி" படத்தின் இசையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”
மேலும் ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் “மதராஸி” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. "சலம்பல" இப்போது அனைத்து தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. முழு வீடியோவையும் YouTube ல் பாருங்கள்.
Watch it on YouTube: https://youtu.be/vB7Y2wcBAZw?si=Ve-iweqBWv-7L4zN
Comments
Post a Comment