தென் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் " நெல்லை பாய்ஸ் "


" அருவா சண்ட "   படத்தை தயாரித்த V. ராஜா தனது அடுத்த படைப்பாக  முற்றிலும் புது முகங்களை வைத்து 
தற்போது தென் தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கும் ஆணவ படுகொலையை மையமாக வைத்து  " நெல்லை பாய்ஸ் " என்ற படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி எஸ். தாணு அவர்கள் 

இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை  சமூகத்தில் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

அதுவும் ஆணவ படுகொலை என்றால் நிச்சயமாக தென் தமிழகம் அதில்  முக்கிய பங்குவகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும்  இந்த " நெல்லை பாய்ஸ் " படம். காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் வெட்ட வெளிச்சமாக காட்டும் இந்த நெல்லை பாய்ஸ் நண்பர்கள்.

நெல்லை நட்புக்கு தனி தரம் உண்டு அவை இப்படத்தில் தெரியும். படத்தின் படத்தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக்  வெளியிட்டதிலிருந்து பல்வேறு விமர்சனங்களை இத்திரைப்பட தலைப்பு பெற்றாலும், விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வரும் பணிகளை விருவிருப்பாக செய்துகொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் V ராஜா.

கதையின் நாயகனாக அறிவழகனும் நாயகியாக ஹேமா ராஜ்குமார் அவர்களும் நடிக்க வில்லனாக வேலராம மூர்த்தி மிரட்டியிருக்கிறார்.
மற்றும்

ரஷாந்த் அர்வின் இசையில் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி எடிட்டிங் பணிகளை செய்துள்ளார் கமல் ஜி.

அக்டோபர் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் " நெல்லை பாய்ஸ் " படத்தை  படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நேரடியாக உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Comments