Saturday, July 30, 2022

Gulu Gulu Movie Review:

Gulu Gulu Movie Review:

 


In the direction of Rathna Kumar Gulu Gulu was a full-fledged comedy mixed action movie, which was carried out by Santhanam had been executed the script in his formidable manner. In the movie worthiness with Santhanam, Athulya Chandra, Pradeep Rawat, George Maryan, Namita Krishnamurthy, Harish Kumar, Kavi Sundaram, Bipin and TSR were exerted in the film. The music was composed by Santhosh Narayanan made assertive to the script. The production company of the film is Circle Box Entertainment and the distribution had been indicted by Red Giant Movies.

 

Gulu Gulu compressed with all commercial aspects and it has been given in a distinctive devising. As the guy Santhanam named Google (Gulu Gulu) that he has habits of helping everyone with genuinely, Gulu and his friends hitting for a lasting travel. With their utmost voyage all were facing the consequences. At least the film Gulu Gulu how they were resolved the toughest situation in a worthiness scenario is the climax.

 

Gulu Gulu an adequate attempt by the director Rathna Kumar, as the earlier comedian now upcoming hero Santhanam has given the brainpower to the film, Santhosh Narayanan music was auxiliary bolster to the film. The title "Gulu Gulu" and Sanatham both grasp the attention of the audiences. Sure, the film entertains the viewers on the big screen.

Actress Sneha celebrated her father’s birthday with special children!!!

 Actress Sneha celebrated her father’s birthday with special children!!!







Actress Sneha’s biggest birthday surprise for her father!!!


The smiling beauty! The Queen of Smile! Ennobled with these graceful acclaims, actress Sneha owns a precious stature in the movie industry. She decided to take a break from the acting profession, during the peak of her career, with sheer decision towards settling into family life, thereby entering wedlock with actor Prasanna, and are now the most adorable parents to two loveable children. She is back into the industry, by choosing good content-driven roles and scripts. 


Today, actress Sneha’s father Rajaram turned 70, and marking the auspicious occasion of his birthday, she wanted to give him a delightful surprise. As a sweet gesture of expressing it, she took her father to Shelter Home at Red Hills and celebrated his birthday along with special children there. Witnessing such a heart-warming surprise, Sneha’s father Rajaram was in emotional glee. 

  

He celebrated the occasion by cutting the birthday cake amidst the cheerful wishes of the special children. They also served delicious Biriyani to the children and made this occasion lovelier. 


Both the grandchildren of Rajaram, Sneha’s children – Son Vihaan and Daughter Aadhyantaa were present for the occasion as well. Both of them served the Biriyani to the children out there, and also gifted books to them.

பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு அவர்கள் இந்திய நாட்டின் 15 - வது குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களை | மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து தமிழக பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் என்ற. புத்தகத்தை வழங்கினார

 பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு அவர்கள் இந்திய நாட்டின் 15 - வது குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களை | மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து தமிழக பாரம்பரியம் மற்றும்  கலாச்சாரம் என்ற. புத்தகத்தை  வழங்கினார


இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது தான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.



இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.  

இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.

Thursday, July 28, 2022

தர்மம் செய்யுங்கள்: நடிகர்களுக்கு கே. ராஜன் வேண்டுகோள்!

தர்மம் செய்யுங்கள்: நடிகர்களுக்கு கே. ராஜன் வேண்டுகோள்!








சினிமாவில் சின்ன ஆள், பெரிய ஆள் என்று இல்லை: இயக்குநர் கே. பாக்யராஜ் பேச்சு!


'செஞ்சி' திரைப்படம்: ஒரு இயக்குநரின் கனவு நனவான கதை!


சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் 'செஞ்சி'.


தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று  பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் 'செஞ்சி'. 


இதை  வழக்கமான வணிக சினிமா சூத்திரங்களுக்கு  உட்படாத வகையில் தனது விருப்பத்துக் கற்பனையைக் காட்சிகளாக்கி ஒரு கனவுப் படமாக  'செஞ்சி' என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.


இப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.


விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகிய திரையுலகப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.


 இந்த விழாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கணேஷ் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது,


''எனது மனதில்  சினிமா கனவு இருந்தது. அந்தக் கனவை நிறைவேற்ற நான் எனது வாழ்க்கைக் கடமைகளை நிறைவேற்றிய பின் குடும்பத்தின், பிள்ளைகளின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் இதில் இறங்கினேன். அப்படித்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்கு இரண்டு வருடம் நாங்கள் தேடி அலைந்தோம். அந்த அளவிற்கு ஒரு தேடலுடன் இதில் ஈடுபட்டோம். இதுவரை கேமரா போகாத பல இடங்களில் இந்தப் படத்திற்காக நாங்கள் பயணப்பட்டு படப் பதிவு செய்துள்ளோம்.   காலை 6 மணிக்கு கிளம்பி 2 மணி நேரம் மலையில் காடுகளில் என்று நடந்து 8 மணிக்குச் சென்றடைந்து, வனத்துறை அனுமதி கொடுத்த நேரமான காலை 11 மணி முதல் 3 மணி வரை படப்பிடிப்பு  நடத்தியிருக்கிறோம். நாங்கள் போன சில நிமிடங்களில் யானை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும்  சூழலில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வனத்துறை மிகவும் பாதுகாப்பாக உதவியாகவும் இருந்தது.

காட்டில் மட்டுமல்ல கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டுடியோவிலும் எடுத்திருக்கிறோம் . பாண்டிச்சேரி, மலேசியா என்றும் பயணம் செய்து எடுத்துள்ளோம்


சினிமா நாடு, மொழி ஆகியவற்றுக்காக மட்டும்  போராட வேண்டும் என்பதில்லை. இந்தப் பூமிக்காகவும் போராட வேண்டும் என்கிற கருத்து இதில் சொல்லப்பட்டுள்ளது. சினிமா என்பதை இரண்டாவது கல்வி என்று நான் நினைக்கிறேன். 


சினிமாவில் ஒரு சிறு விஷயம்  வெளிப்படுத்தினாலும் கூட அது மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடும்

சினிமா மூலம் சொல்லப்படும் கருத்துகள் மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக இதை எடுத்திருக்கிறேன்.  .


இதில் யார் நடிப்பது  என்று பார்த்த போது பிரபல கதாநாயகர்கள் என்றால் நிபந்தனைகள் போடுவார்கள். அது சரிப்பட்டு வராது என்று நினைத்தேன். தயாரிக்கும் தயாரிப்பாளர் யார் என்றால் அதுவும் அப்படித்தான்,கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நானே நடித்து இயக்கித் தயாரித்தேன்.

 நான் சினிமா எடுக்கும்  விஷயத்தை அப்படியே குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லிவிட்டு அவர்கள் ஆதரவுடன் இந்தக் களத்தில் இறங்கினேன். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் நடித்திருக்கும் ரஷ்ய நடிகை கெசன்யா இரண்டு மாதம் வந்து தங்கியிருந்து அழகாக நடித்துக் கொடுத்தார்


இது வழக்கமான சினிமா போலிருக்காது. ஆக்சன் சென்டிமென்ட், போன்ற வியாபார நோக்கத்தில் இருக்காது .இவற்றையும் தாண்டி சினிமாவில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக்கொண்டு படமாக்கி இருக்கிறேன்.அதே சமயம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையை வித்தியாசமான களத்தில் உருவாக்கி இருக்கிறோம்.  ஊடகங்கள்  ஆதரித்து ஊக்கப்படுத்தி விட வேண்டும். ஏனென்றால் ஊடகங்கள் தான் விடியலுக்கான சூரியக் கதிர்கள் என்று நான் நம்புகிறேன். ஆதரவு தர வேண்டும்'' என்று கூறினார்.



இயக்குநர் பேரரசு கூறும்போது,


" சினிமா எத்தனையோ பேரைப் பார்த்து இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு புத்திசாலியை, கெட்டிக்காரத்தனம் உள்ளவரைப் பார்த்ததில்லை.


சினிமாக் கனவோடு வந்து திருமணமாகாமல் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருக்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் சிரமப்பட்டு சம்பாதித்துக் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். இது புதிதாக  இருக்கிறது.  இப்படியும் சினிமாத்துறைக்கு வரலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.


செஞ்சி என்பது என்னுடைய தலைப்பு .அதைப் புதுப்பிக்காததால் இவர் எடுத்துக் கொண்டு விட்டார்.ஒரு படம் எப்படி இருக்கும் என்பதை அதன் தலைப்பைப் பார்த்தாலே அதில் உள்ள வடிவமைப்பைப் பார்த்தாலே தெரிந்து விடும். இவர் செஞ்சி என்பதைச் சாதாரணமாக அந்தப் பெயரைப் போடாமல் அதில் மெனக்கட்டு செய்துள்ளார். நானும் ஊர்ப் பெயர்களில் படங்கள் எடுத்துள்ளேன்.


திருப்பாச்சியில்  பழுக்கக் காய்ச்சிய  அரிவாளை அந்தத் தலைப்பில் வைத்திருப்பேன். சிவகாசியில் பட்டாசை வைத்து வடிவமைத்திருப்பேன். திருண்ணாமலையில் லிங்கங்களாகக் காட்டி இருப்பேன். இவர்   தலைப்பில் செஞ்சிக் கோட்டையை நினைவூட்டும்படி  வடிவமைத்துள்ளார்.


செஞ்சி என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று ஞாபகங்கள் தான். செஞ்சியின் அரசன் தேசிங்கு ராஜா கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவரை வீழ்த்த முடியாத போது அவர் சவாரி செய்த குதிரையை வீழ்த்தினால் அவரைக் கொன்று விடலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். எனவே அவரது  குதிரை நீலவேணியை வெட்டிச் சாயத்தார்கள் .பிறகு ராஜாவைக் கொன்றார்கள்.செஞ்சியில் மன்னருக்குச் சமாதி இருப்பது போலவே அவரது நண்பன் அகமத்கானுக்கும்  அவர் சவாரி செய்த குதிரையான நிலவேணிக்கும் சமாதி உள்ளது .இதன்மூலம் விலங்குகளுக்கு வரலாற்றில் உள்ள இடத்தை நம்மால் அறிய முடியும்.


 இந்தப் படத்தை அங்கே எடுத்துள்ளார்கள் .அந்தக் காட்சிகள் நன்றாக உள்ளன. இந்தப் படம் வெற்றிபெற்று  செஞ்சியில் வெற்றிக் கொடியும் பறக்க வேண்டும்" என்று வாழ்த்தினார்.



தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,


"நான் ஒவ்வொரு மேடையிலும் ஏதாவது பரபரப்பாக பேசுவதாகச் சொல்வதுண்டு. இப்போதெல்லாம் நான் பேசிவிட்டு வீடு செல்வதற்குள் யூடியூப் சேனல்களில் அது வந்து விடுகிறது.


நான் வாழ்த்தவும் செய்வேன். நல்ல காரியங்கள் செய்யும்போது வாழ்த்துவேன். தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுவேன். தவறுகளை சுட்டிக்காட்டி காட்டுவது தானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவது தர்மம்.


தவறான வழியில் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் என்று நான் நடிகர்களை மட்டும் சொல்லவில்லை. லஞ்சம், ஊழல், மோசடிகள் செய்து தவறான வழிகளில் கோடிக்கணக்கில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியாமல் வெறும் காகிதக் குப்பைகளாக போட்டுவிட்டு செல்லும் பலருக்கும் நான் சொல்கிறேன். நீங்கள் கடவுளைத் தேடி கோவில் கோவிலாக அலைய வேண்டாம். அன்றாடம் சிரமப்படும் ஏழைகளைக் கண்டு அவர்களுக்கு உதவுங்கள் .அவர்கள் உங்களைக் கடவுளாக நினைப்பார்கள். தர்மம் செய்யுங்கள்.அலெக்சாண்டர் இறந்தபோது  சவப்பெட்டியில் இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு வெறுங்கையோடு தான் சென்றான். தர்மம் செய்யுங்கள்.


 ரோட்டரி சங்கத்திலிருந்து நன்றாகச் சேவை செய்துவிட்டுத் தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறார். ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துவிட்டு ரோட்டோரத்திற்கு சென்றிருக்கிறார்கள். நடு ரோட்டுக்குச் சென்று இருக்கிறார்கள்.


நான் மாநகராட்சி பள்ளி ஆசிரியராக இருந்தவன்.  என்னை ஒருத்தர் ஏமாற்றி சினிமாவுக்கு இழுத்து விட்டார். 1983ல் பிரம்மச்சாரிகள் என்ற படம் எடுத்தேன். 7 லட்சம் செலவானது 5 லட்சம் இழப்பு, 2 லட்சம் கடன் .மொத்தமும் காலி. 1990-ல் நம்ம ஊரு மாரியம்மா என்ற படம் எடுத்தேன். சரத்குமாரை வில்லனாக நடிக்க வைத்தேன். அந்தப் படத்தில் லாபம் கிடைத்தது. பிறகு தங்கமான தங்கச்சி என்று சரத்குமாரை நாயகன் ஆக்கி படம் எடுத்தேன்.10 லட்சம் லாபம் கிடைத்தது. 


பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் படம் எடுத்து,75 லட்சம் இழப்பு வந்தது. பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை  படம் எடுத்தேன்.ஒன்றே கால் கோடி இழப்பு. 

இப்படி ஒன்பது படங்களை எடுத்தேன். நாலரைக் கோடி காலி.


சினிமா உலகம் நாணயம் இல்லாமல் இருக்கிறது .நான் இப்போது பைனான்ஸ் செய்து வருகிறேன். கொடுத்த பணத்தை வாங்குவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.


தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டிய சங்கத்தில் யார் இருக்கிறார்கள்?முதல் திருடனே தயாரிப்பாளர் சங்கத்தில்தான் இருக்கிறார். இதெல்லாம் சரியானால்தான் தான் சினிமா வளரும்.


தமிழ்ப் படங்கள் எல்லாம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கின்றன. இப்படி நடக்கும் தவறுகளை எல்லாம் நான் சுட்டிக்காட்டினால் என்னை விமர்சிக்கிறார்கள்.


நான் விஷாலை பல முறை விமர்சித்து இருக்கிறேன். லத்தி படத்தின் விழாவுக்காக விநியோகஸ்தர் சங்கத் தலைவர் என்கிற முறையில் என்னை அழைத்தார்கள். போனேன், அப்போது விஷாலை நான் பாராட்டிப் பேசினேன். அப்போது அவ்விழாவில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைகளை விஷால் வழங்கினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படிச் சமூகத்திற்கு நல்லது செய்யும் போது அவர்களை பாராட்டத் தானே வேண்டும்? விஷாலின் இப்போதைய போக்கு சரியாக உள்ளதாக நான் நம்புகிறேன் .அதனால் நான் அவரைப் பாராட்டினேன் அவர்கள் பெற்றோர்களுக்கெல்லாம்  இத்தனை நாள் விமர்சனம் செய்து கொண்டிருந்தவர் பாராட்டுகிறார் என்று மகிழ்ந்தார்கள். தவறுகளை சுட்டிக்காட்டவும் நல்லது நடக்கும்போது பாராட்டவும் தயங்க மாட்டேன் .


தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதானே ஆண்மை? நல்லது நடக்கும் போது பாராட்டுவதுதானே தர்மம்?


இந்தப் படம் வெற்றிகரமான படமாக அமைய வேண்டும். கணேஷ் சந்திரசேகர் இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும்" என்று வாழ்த்தினார்.


படத்தில் நடித்துள்ள ரஷ்ய நடிகை கெசன்யா பேசும்போது,


"இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடித்து இருந்தது.நான் இந்தப் படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அனைவருக்கும் நன்றி." என்றார்.


இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது,


"இப்பதெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. 


வெற்றிகரமான மூன்றாவது நாள்,

வெற்றிகரமான ஐந்தாவது நாள் என்று போடுகிறார்கள். ஒரு காலத்தில் வெற்றிகரமான 25வது நாள், 100வது நாள் ,125 வது நாள் 175 வது நாள் என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது. இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா என்று  ஒன்றும் புரியவில்லை. அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா என்றெல்லாம் போய் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமா என்று பேசுகிறார்கள். இப்படி ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. 

 அப்படிப்பட்ட சூழலில் தான் இவர் இந்த  செஞ்சி படத்தை உருவாக்கி இருக்கிறார் .நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள் .இவர் ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார்.அதே நேரத்தில் குடும்பத்தின்  தொந்தரவுகள் இல்லாமல் எல்லாம் செட்டில் செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறார்.


இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான்  சினிமாவுக்கு வர முடியும் என்று   நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. இவரது விடாமுயற்சி பாராட்டுக்குரியது.

ராஜன் சார் தன் வாழ்க்கைக் கதை முழுவதையும் கூறினார்.

இவ்வளவு  இழப்பு என்று ஆன போதும் அதே நேரம் அவர் சினிமாவில் வட்டிக்கு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை.

இதிலிருந்து சினிமாவில் விழுந்தாலும் , முடிந்தால் எழவும் முடியும் என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு ராஜன் தான் உதாரணம்.


இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது அவர் மைத்துனர் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார். ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும் தானே? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம்.


படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது .இப்போது கூட கேரளாவில் பல கோயில்கள்  திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப்  பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் முத்து கணேஷ், எல். வைத்தியநாதன் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.எல்.வி என்பவர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதன் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு வாழ்த்துகள். படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குநரே   நடித்துள்ளார் .தமிழ் சினிமாவில் பெரிய ஆள் சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை .படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய  முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள்  வரவேற்பார்கள். இந்த செஞ்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.


 இந்த விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஷிண்டே,  இசையமைப்பாளர்கள் முத்து- கணேஷ் ,பாண்டிச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர்  வைத்தியநாதன், மலேசியாவில் இருந்து வந்திருந்த தயாரிப்பாளரின் மைத்துனர் டத்தோ டாக்டர் கமலநாதன் , தயாரிப்பு நிர்வாகி தில்லை நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் தினேஷ் சந்திரசேகரின் மகன் அஸ்வின் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

https://youtu.be/nGoM-w-I-kI

Wednesday, July 27, 2022

Producer T Muruganantham of Rockfort Entertainment presents ‘Kuruthi Attam’ starring Atharvaa Murali in the lead character is directed by ‘8 Thottakkal’ fame director Sri Ganesh is about to hit screens on August 5th.

 Producer T Muruganantham of Rockfort Entertainment presents ‘Kuruthi Attam’ starring Atharvaa Murali in the lead character is directed by ‘8 Thottakkal’ fame director Sri Ganesh is about to hit screens on August 5th.







Yuvan shankar raja has scored the music.


Recently, the first look of the movie’s villain was revealed and it witnessed an incredulously great reception. The viewers are in awe of the gigantic, muscled look of the actor, whom they've started acclaiming as an appealing import from Bollywood. However, it would send a heavy gold rush of excitement to rewind and see that he is none other than a famous actor, who captured our attention in a movie titled ‘Engeyum Eppodhum’. The movie, released nearly a decade ago, produced by A R Murugadoss, and directed by Saravanan, had Jai-Anjali and Sharwanand-Ananya as a couple of lead pairs. Apparently, we come across the third cute pair in the movie among whom, the boy had gained our attention for his Boy next door looks.


His name is Vatsan.


Vatsan kick-started his journey as an actor playing supporting roles and in the next 10 years has scaled a great success of playing a strong villain role. His hard work alone has paved the way for such a great breakthrough in his career. Actor Vatsan got selected through audition for the  role in Engeyum Eppodhum. Impressed with his performance, producer A R Murugadoss not only appreciated his acting skills but also referred him for a significant role in his next production titled ‘Vathikuchi’. Hence, a combination of hard work and talent has favored him in a great manner.


Following this, he continued to be a part of some good movies with prominent characters. He was greatly recognized for a promising role in Lokesh Kanagaraj’s Kaithi as the Courageous college student who stands for Napoleon and has now performed as a antagonist in the movie ‘Kuruthi Aattam’.Already Director Sri ganesh haa started appreciating about Vatsan's hardwork in interviews.


Actor Vatsan says, “I have been sharing a good bonding with director Sri Ganesh from the time of working in a project titled ‘Kalavu’, produced by the same production house that made ‘8 Thottakkal’. When I was shooting for my telugu film Arjun survaram , Sri Ganesh called and offered the opportunity to meet him in person, once I was back. Knowing that he's a man of sincerity, I made sure to honour his request at the earliest. It was then that he unveiled details about Kuruthi Aattam and how he'd penned Sethu, the antagonist of the script, keeping me in mind. I was overwhelmed and agreed to play the part, without any second thoughts.


He suggested that I built my body and go into beast mode to look the part. I went about doing the same,I trained for about five months in gym under Mr.Kumar antony  and it's now seen in the recently released picture.


It’s been a great pleasure and experience to be working with actor Atharvaa Murali, in this movie. What’s an intriguing part here is that I worked in Pre production of his movie ‘Ganithan’ and both of us got acquainted during that time. Later, I lost the touch with him. The next time he saw me was during first day of shoot of Kuruthiattam.


I have shot 35 days for this movie, out of which 25 days involved sequences with Atharvaa. The first day of my shooting was a huge action sequence shot on a grand scale. Director Sri Ganesh banked his trust on me and planned for such a large canvas filming. This instilled in me the urge to deliver the finest output.


While working on this movie, I got an opportunity to perform an important role in Lokesh Kanagaraj’s Master. However, the respective role demanded a well-trimmed beard and hair, which I couldn't afford to lose at that point in time. Considering my commitment to Kuruthi Aattam, Director Lokesh adviced me to continue my focus on the project .


Having said the above, I'm waiting for Lokesh's next, as eagerly as you are and earnestly pray that I get a chance to be a part of the project.


My only desire is to earn peoples love,and i will work very hard to earn.

Tamil trailer of Aamir Khan's Laal Singh Chaddha is all yours now !!






 Tamil trailer of Aamir Khan's Laal Singh Chaddha is all yours now !!


The Hindi trailer of Aamir Khan's Laal Singh Chaddha, after creating a storm across the nation with its inspirational narrative, the Tamil version of the trailer dropped on Monday and went on to immediately resonate well with the audience. With this Aamir Khan enters the Tamil territory as one of the major star attractions with Udhayanidhi Stalin's Red Giant Movies distributing and presenting Laal Singh Chaddha to the Tamil audience on August 11. The company has been handpicking movies that are relevant and important to Tamil cinema since its inception and Laal Singh Chaddha will be another film that will be a feather in Red Giant's cap.


Furthermore, as soon as the trailer of the film released, the global audience is eagerly waiting to watch Aamir Khan play the character of Laal Singh Chaddha. The film is constantly making headlines for its soulful songs that are presently trending all over. While marking it a successful initiative from the maker's end, they have given center stage to the lyricists, musicians, composers, and technicians, by releasing the songs in audio form.


'Laal Singh Chaddha', produced by Aamir Khan Productions, Kiran Rao, and Viacom18 Studios, also stars Kareena Kapoor Khan, Mona Singh, and Chaitanya Akkineni. It is an official remake of Forrest Gump. The film will be released on 11 August 2022.

https://youtu.be/9Rvr2E5Re-A

Tuesday, July 26, 2022

*நகைச்சுவையும், திகிலும் கலந்த 'காட்டேரி'*

 *நகைச்சுவையும், திகிலும் கலந்த 'காட்டேரி'*







*நான் சின்ன வயதில் நடித்த படம் = 'காட்டேரி' படம் குறித்து வரலட்சுமி 'கலகல' பேச்சு*


தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.


இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.


இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது'' என்றார்.


இயக்குநர் டீகே பேசுகையில், '' இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.


படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.


நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.'' என்றார்.


நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், '' சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.


படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது.


படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.'' என்றார்.


நடிகர் வைபவ் பேசுகையில்,'' தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. .


நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன். ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்.'' என்றார்.


தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், '' காட்டேரி படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் 'உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்' என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது. இந்தப் படம் இயக்குநர் டீகே மற்றும் அவரது குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் பெரிய வெற்றி படமாக அமையும். டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகி, பிரபலமான பிறகு ரசிகர்கள் நாங்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். ‘கே. ஜி. எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து, ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது. இயக்குநர் டீகே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரவழைத்து ரசிக்கும் வகையிலான ஹாரர் காமெடி ஜானரில் ‘காட்டேரி’யை உருவாக்கி இருக்கிறார்.


அண்மைக்காலமாக பல பேய் படங்கள் வெளியாகி, சில வெற்றியையும், சில எதிர்பாராத தோல்வியையும் அளித்தது. ஆனால் இயக்குநர் டீகே அவர்களுடைய பிரத்யேக முத்திரையுடன் தயாராகி இருக்கும் ‘காட்டேரி’ ரசிகர்களை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உற்சாகமாக காண வைக்கும். 


‘காட்டேரி’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் டீகேவுக்கு பிறகு பொறுமையுடன் காத்திருந்த நடிகர் நடிகைகளுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பல தடைகளைக் கடந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 


ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ,  பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Monday, July 25, 2022

“வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 “வட்டம்” திரைப்படம் பத்திரிக்கையாளர் சந்திப்பு





ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக,  உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.


இந்நிகழ்வினில்..


தயாரிப்பாளர் SR பிரபு கூறியதாவது.., கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு பிடித்திருந்தது, அதனால் அவரிடம் கதை கேட்டு படம் எடுக்க முடிவு செய்தோம்.  இது ஒரு மெயின் ஸ்ட்ரீம் படம். சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும். நடிகர் சிபி தான் இந்த கதையை எடுத்து செல்ல சரியாக இருப்பார் என நினைத்து இந்த படத்திற்குள் அவரை கொண்டு வர நினைத்தோம். பின்னர் அதுல்யா, ஆண்ட்ரியா இந்த படத்திற்குள் வந்தது மேலும் பலம். படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் இந்த படத்தை மெருக்கேற்ற பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது, பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. ஜூலை 29 இந்த படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது, அவர்களுடன் எங்களுக்கு மூன்றாவது படம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.


நடிகர் சிபிராஜ் கூறியதாவது..,

வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர்.மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.


இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது..,

“இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம்  முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது. நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால்  இந்த சமூகத்தில் அதை விட  பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.


நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது..,

ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்.


நடிகை அதுல்யா ரவி கூறியதாவது..,

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த, தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. வட்டம் திரைப்படம் என் மனதிற்கு நெருக்கமான படம். இந்த படம் கோயம்புத்தூர் பகுதிகளில் படமாக்கபட்டது. நான் நடிக்கும் முதல்  ஓடிடி படம் இது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இப்படம் இருக்கும்


நக்கலைட்ஸ் சசி கூறியதாவது..,

எனக்கும் சிபி சாருக்கும் காம்பினேஷன் குறைவாக தான் இருக்கிறது. ஆனால் அவருடன் பயணித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. நடிக்கும் ஆர்வத்துடன் சுற்றி கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய பேனரில் நடித்தது பெருமையாக இருக்கிறது. இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.


இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா கூறியதாவது..,

இந்த படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இந்த படத்தில் வித்தியாசமான முயற்சிகளை செய்ய நிறைய ஸ்கோப் இருந்தது. தயாரிப்பாளர் பிரபு உடன் இணைந்தது மகிழ்ச்சி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ட்ரீம் வாரியருக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். இது ஒரு முக்கியமான தத்துவத்தை சொல்லும் படமாக இருக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.


ஜூலை 29  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “வட்டம்” நேரடி திரைப்படமாக வெளியாகிறது.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன்

 ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஸ்ருதிஹாசன்




திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்


பதினான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் ஸ்ருதிஹாசன்


நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.


கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், 2009 ஆம் ஆண்டில் நடிகர் இம்ரான் கான் ஜோடியாக 'லக்' எனும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர், சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' எனும் படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3', 'லாபம்' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் திரையுலகில் பணியாற்ற தொடங்கி பதிமூன்று ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.


இதற்காக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது...


'' திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.


என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்.


மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.


வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை.


எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.'' என குறிப்பிட்டிருக்கிறார்.


இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'வால்டர் வீரய்யா' எனும் திரைப்படத்திலும், நட்சத்திர நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 23, 2022

‘பொய்க்கால் குதிரை’ படத்தை இயல்பாக இயக்கியிருக்கிறேன் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்

 ‘பொய்க்கால் குதிரை’ படத்தை இயல்பாக இயக்கியிருக்கிறேன் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்







பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும் பிரபுதேவா உற்சாகம்


வேகமாக செயல்படும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு தேவை பிரபுதேவா கோரிக்கை


நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை


பிரபுதேவா


‘‘ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.


டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர்கள் ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம், இசை மற்றும் ‘பொய்கால் குதிரை’ படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விழா, பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா, இசையமைப்பாளர் டி இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர் வினோத்குமார் பேசுகையில், '' இயக்குநர் சந்தோஷ்  இயக்கியிருக்கும் ‘பொய்க்கால் குதிரை’ ஒரு திரில்லர் திரைப்படம். சந்தோஷ் குமார் என்னை சந்தித்து பிரபுதேவாவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறேன் என்று சொன்னவுடன், எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே பிரபுதேவாவின் ரசிகன். அவர் நடிப்பில் வெளியான ‘முக்காலா முக்காபுலா..’ என்ற பாடலை என்னுடைய சொந்த ஊரில் வருடம் முழுவதும் ஒலிக்க வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர் வட்டாரத்தில் அனைவரிடமும்,‘ பிரபுதேவா அனைவரும் ரசிப்பது போல் ஒரு நடன கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த நடிகரும் கூட. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் திறமையை நிரூபிப்பார்’ என சொல்வேன். அது இந்த படத்தில் நடைபெற்றிருக்கிறது.  ஒற்றைக் காலுடன் அற்புதமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.


நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், '' நடிகர் ஆர்யாவின் பரிந்துரையில் தான் இயக்குநரை சந்தித்து, படத்தின் கதையைக் கேட்டு, நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன். நடிகர் ஆர்யா தான் இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டார். மேலும் இந்த படத்தில் நான் ஒப்புக்கொண்டதற்கு என்னுடைய நடன குரு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவா தான் முக்கிய காரணம். பொதுவாக நான் நடித்த படத்தை உடனடியாக திரையரங்கு சென்று  பார்ப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கிறது என்பதால், படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தவை எல்லாம் இல்லாமல், புதிய பாதையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கிறது. பிரபுதேவா உடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.'' என்றார்.


இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் பேசுகையில், ''  இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்திற்கு பிறகு கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினேன். ‘யூ’ சர்டிபிகேட் படமான அந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதால், எனக்கான அடையாளம் கிடைக்கவில்லை. அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்னுடைய சூழல் என்னை திசை மாறி பயணிக்க வைத்து விட்டது. அதே தருணத்தில் நீண்ட காலமாக திரில்லர் ஜானரில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இது போன்ற வித்தியாசமான ஜானரில் படத்தை இயக்குவதற்காகத் தான் திரையுலகில் அறிமுகமானேன். இனிமேல் இயல்பான கதைகளை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.


கஜினிகாந்த் படத்தில் எனக்கு கிடைத்த ஒரு திரையுலக வழிகாட்டி.. நண்பர் ஆர்யா. முன்பெல்லாம் தொடர்புகளுக்காக ‘யெல்லோ பேஜஸ்’ என்ற ஒரு பத்திரிக்கையை வைத்திருப்போம். என்னுடைய யெல்லா பேஜஸ் ஆர்யா தான். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரது முகவரியும் தொடர்பு எண்ணும் அவருடைய டைரியில் இருக்கும். பிரபுதேவாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன், ஆர்யா, இயக்குநர் ஏ. எல். விஜய்யை தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு ஏ எல் விஜய் மூலமாக பிரபுதேவாவை சந்தித்து, கதையை விவரித்தேன். கதையைக் கேட்டவுடன், ‘பிடித்திருக்கிறது. இணைந்து பணியாற்றுவோம்’ என்றார்.


நிறைய தயாரிப்பாளர்கள் சந்தோஷ், அடல்ட் படத்தை தான் இயக்குவார் என்று என் மீது முத்திரை குத்தினார்கள். இந்த தருணத்தில் தான், ‘பிரபுதேவாவை வைத்து பொய்க்கால் குதிரை என்ற திரில்லர் ஜானரில் படத்தை இயக்குகிறேன்’ என்று வினோத்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். படத்தை இயக்குவதற்கு முழு சுதந்திரமும் அளித்தார். 


இமான் அவர்களிடம் வேறு ஒரு படத்திற்காக சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அது நடைபெறவில்லை. அதன் பிறகு இந்த படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.


பாடலாசிரியர் மதன் கார்க்கி, அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம். பாடல் எந்த சூழலில் இடம் பெறுகிறது என்பதனை ஒரு குறிப்பாக சொன்னால் போதும். அவர் அதனை உணர்ந்து. ஏராளமான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் அமைத்து, கவிதைகளாக்கிக் கொடுப்பார். அதிலிருந்து நாம் தேர்வு செய்வதுதான் கஷ்டமாக இருக்கும்.


‘பொய்க்கால் குதிரை’ படத்தை பற்றி நான் பேசுவதை விட, படம் நிறைய பேசும். நான் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன் என்று சொல்லவில்லை இயல்பாக படமெடுத்திருக்கிறேன். படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக பிடிக்கும்.'' என்றார்.


நடிகர் பிரபுதேவா பேசுகையில், '' இந்தப் படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கும் சதீஷ், 'ஜூன் போனால் ஜூலை..' எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன். இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவருடைய உதவியாளர்கள் நன்கு பயிற்சி எடுத்து, என்னை விட நன்றாக ஆடினார்கள். நாங்கள் ஏழு மாதத்திற்கு ஒரு முறை பாடல் காட்சியில் வரும்போது நடனமாடுகிறோம். மிகவும் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து நடனமாடியிருக்கிறேன். நடன இயக்குநரின் கனவை ஓரளவு நிறைவேற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.


பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் ஏற்கனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியிருக்கிறார். அதிலும் குறிப்பாக ‘சிங்கிள்..’ என்ற பாடலில் 'கால் போனால் கல் கடுக்கும்...'என்றொரு வரி இடம்பெற்றிருந்தது. அதற்கான அர்த்தத்தை கேட்டு வியந்தேன்.


சில காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளை பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும் போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை தான். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டி இமான் இசையமைப்பாளர் என்ற எல்லையை கடந்து, ‘மை டியர் பூதம்’ என்ற படத்தில் இரண்டு புதிய இசைக்கலைஞர்களை பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவருடைய மனிதநேயத்தை அறிந்து வாழ்த்துகிறேன்.


படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். அவருடைய தந்தையுடன் உதவியாளராக பணியாற்றிய அவருக்கு அனுபவம் கை கொடுத்தது.


சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் பொய்க்கால் குதிரை படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். ஏனெனில் நான் கதையை கேட்கும்போதே, ‘இந்த கதை ரசிகர்களுக்கு புரியுமா?’ என்று தான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு படத்தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். இதற்காக படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


நடிகை வரலட்சுமி அழகான பெண் மட்டுமல்ல. திறமையான நடிகையும் கூட. சிலர் திரையில் நடிக்கும் போது தான் அவரது திறமை வெளிபடும். ஆனால் நடிகை வரலட்சுமி திரையில் தோன்றினால் போதும். ரசிகர்களை கவர்ந்து விடுவார்.


தயாரிப்பாளர் வினோத்குமார், தீவிரமான செயல்பாடு உடையவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி எப்படி உத்வேகத்துடன் செயல்படுவாரோ.. அதேபோல் பட குழுவில் அவருடைய செயல்பாடு இருக்கும். இது போன்ற வேகமாகச் செயல்படும் தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரையுலகிற்கு தேவை. அவர் சொல்வதை நிறைவேற்றுவார்.


இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன்னர் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் யாரையும் மதிப்பீடு செய்வதில்லை. சந்தோஷ் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு இயக்குநருக்கு தேவையான ஆளுமை திறன் அவரிடம் இருந்தது. விரைவாகவும், திட்டமிட்ட படியும் படப்பிடிப்பை நடத்தினார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநராக இருந்தார். என்னிடமிருந்து நல்லதொரு நடிப்பை வெளிக் கொணர்ந்தார். ‘பொய்க்கால் குதிரை’ நல்லதொரு திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனைவரும் திரையரங்குகளில் பார்த்து, ரசித்து, ஆதரவு தர வேண்டும்.'' என்றார்.


இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் தயாராகியிருக்கும் பொய்க்கால் குதிரை எனும் திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Telangana Governor Dr. Tamilisai Soundararajan urges counseling and martial arts training for girls at Humanitarian Awards 2022 organized by social activist Apsara Reddy

 Telangana Governor Dr. Tamilisai Soundararajan urges counseling and martial arts training for girls at Humanitarian Awards 2022 organized by social activist Apsara Reddy




HUMANITARIAN AWARDS 2022 was held in AGS PRIMROSE HOUSE . Organised by social activist and politician Apsara Reddy, the awards were presented to social activists, journalists and doctors who work against child sexual abuse. Awards were also given to activists who work with victims of sexual abuse to find careers and vocational skills.

The awards in its second edition draws a large crowd of corporates, celebrities, consulate officials and government officials.

 Humanitarian Awardees are
1. Dr. Usha Sriram,
2. Mr. Kannikovil Raja,
3. Mr. Selvaraj Arunachalam,
4. Mr. Gur Aryeh Emi,
5.K. Ponni,
6. Priya Babu,
7. Mr. Chandran,
8. B. Senthamizh selvi
9.R.Naira,
10.  Rupa Selvanayaki and others.

Apsara Reddy, said, "Most awards these days are given to popular faces and glamourous work. Real hardwork happens at the grassroots where people are trying to build safe communities and support systems. These awards recognise the brave work of activists who have limited resources but bring about huge impact in the lives of children."

The chief guest Governor of Telangana and Puducherry Dr Tamilisai Soundarajan, said, "I applaud Apsara in her initiative to bring to focus some great humanitarian work. These awards will encourage citizens to identify social causes and work towards them.

She also told that children should never give up their happiness. Life is not meant to end just to live...

She concluded that children are like glass cups and teachers should handle them with care, especially girls. Counseling and self-defense training should also be given to girls

Dr J Radhakrishnan, Director Vetrimaaran, Music director Santhosh Narayanan all spoke highly of the awards.

Many women achievers walked the ramp on the theme of innocence, to poetry by Dr Angela David of Radiant Group. NAC Jewellers and Palam Silks put together a fashion show on the theme of 'protecting innocence'.

Performer Santanu Hazarika and singer Dhee performed at the event.

Singer Dhee, said, "I love to perform and bring to focus social issues. I thank Apsara for helping me curate a performance to focus on the girl child."

’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல

 ’பார்த்தா’ சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல









’குலுகுலு’ தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம்”-சந்தோஷ் நாராயணன்


’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்


சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர்  மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும்  பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்..


கலை இயக்குனர் ஜாக்கி கூறியதாவது..,

“இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் டிரீட்டாக இருக்கும். படத்தின் ஸ்கிர்ப்ட் மிக தெளிவாக இருந்தது. கலை இயக்கத்திற்கான அனைத்து விவரங்களும் திரைக்கதை புத்தகத்திலேயே இருந்தது. படத்தின் தரத்தை இசை மேம்படுத்தியுள்ளது. படம் உங்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்”


இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது..,

“ரத்னகுமார் எடுக்கும் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வகையாக இருக்கும். அவருடைய எழுத்து என்னை ஆச்சர்யப்படுத்தும். படத்தின் இசை சிறப்பாக உள்ளது. ஒரு குழுவாக இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். 



லைகா புரொடக்ஷன் தமிழ்க்குமரன் கூறியதாவது..,

“ சந்தானம் எங்களது திரைப்பயணத்தில் பெரிய உதவியாய் இருந்திருக்கிறார். இந்த படத்தை விநியோகம் செய்யவிருக்கும் ரெட்ஜெயண்ட்க்கு எனது வாழ்த்துகள்.  இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்


ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது..,

படத்தின் இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும், டீசரும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனனுக்கு எனது வாழ்த்துகள். இயக்குனருக்கும், நடிகர் சந்தானத்துக்கும் எனது வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். உதயநிதி சார் திரைத்துறைக்கு பலமாக இருக்கிறார். அவரது விநியோகத்தில் படம் கண்டிப்பாக வெற்றியடையும்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது..,

“ நான் வேலைபார்த்த படங்களில்  இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். இயக்குநரிடம் ஒரு புத்துணர்வான எழுத்து வடிவம் இருக்கிறது. என்னை இந்த படத்தில் சுதந்திரமாக வேலை பார்க்க அனுமதித்தார். ரத்னகுமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது. இந்த படத்தை வெளியிட முடிவு செய்த உதயநிதி சாருக்கு நன்றி. சந்தானம் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் எனது இண்டிபெண்டண்ட்  ஆல்பமாக இருக்கும். இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். “ 


இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது..,

“ நான் படம் இயக்கி மூன்று வருடங்கள் கடந்து விட்டது. இந்த படம் நான் நினைத்தபடி உருவாக சந்தானம் சார் தான் காரணம். இந்த படத்தின் கதையை நம்பி அவர் உள்ளே வந்தார். அவருக்கு பலவிதமான லுக் டெஸ்ட்களை செய்தோம், சந்தானம் சார் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே போகாமல் இருப்பார். இந்த படத்திற்காக இயக்குனர் ரவிக்குமார், மடோனா அஸ்வின், லோகேஷ் கனகராஜ் என பல நண்பர்கள்  உதவியுள்ளனர். அவர்களின் பங்கு இந்தப்படத்தில் இருக்கிறது. ஒரு முறை லோகேஷ்  செட்டுக்கு வந்து பார்த்தபோது சந்தானம் சாரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அந்தளவு சந்தானம் சார் லுக் மாறியிருந்தது. இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம், கதாபாத்திரங்கள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். அதை சரியான திரைப்படமாக மாற்றியது சந்தோஷ் நாராயணன் தான். இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருக்கிறது. எல்லா பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும். இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு படத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த படம் மேஜிக்காக மாற காரணம் கலை இயக்குனர் ஜாக்கி. படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் இந்த படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். அனைவருக்கும் நன்றி. 



நடிகர் சந்தானம் கூறியதாவது..

இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த படத்தை வெளியிட பெரும் உதவியாய் இருந்தார். இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்றைக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இந்த படத்தில் இருக்கும். சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். அவர் பாடல்கள் தான் எல்லா இடத்திலும் கேட்கிறது. இந்த படத்தில் ரத்னகுமார் கடின உழைப்பை போட்டுள்ளார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ரத்னா உடைய நட்பினால் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லோரும் இந்த படத்தின் உள்ளே வந்தனர். ஒரு குழு முயற்சியாக இந்த படம் உருவாகப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் 


நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் நண்பேண்டா பார்த்தா தான் சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும். 



இந்த படத்தில் சந்தானத்துடன் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படம் ஜூலை 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...