Monday, January 30, 2023

*ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்*


*ஒடிடியை விட தியேட்டர் ரிலீஸ் தான் எளிது ; பொம்மை நாயகி விழாவில் பா.ரஞ்சித்*

“இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்னு இருக்கு இருக்குன்னு நினைத்தால்..” ; அழைப்பு விடுத்த யோகிபாபு*


இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே செல்வா படத்தொகுப்பை கவனித்துள்ளார். கபிலன், இளைய கம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

வரும் பிப்ரவரி-3ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித், படத்தின் நாயகன் யோகிபாபு, சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் நாயகன் யோகிபாபு பேசும்போது, :
இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.
இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். இந்த படத்திற்காக இயக்குனர் ஷான் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.
சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.. நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்று இளம் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுத்தார் யோகிபாபு.

இயக்குனர் ஷான் பேசும்போது,
 “இந்த படத்தின் கதையை எழுதியவுடன் நிறைய பேரிடம் சொல்லவில்லை. ஆனால் அப்படி கேட்டவர்கள் பலரும் இந்த கதையை தயாரிக்க வேண்டும் என்றால் நீலம் புரொடக்சன்ஸ் மட்டுமே சரியான இடமாக இருக்கும் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தான் இயக்குனர் பா.ரஞ்சித் தனது உதவி இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் துவங்கி அதில் பரியேறும் பெருமாள் என்கிற திரைப்படத்தை தயாரித்து வந்தார்.
அப்போதிருந்து அவரை சந்திக்க முயற்சித்து பல வருட காத்திருப்புக்கு பின் ஒரு வழியாக அவரிடம் எனது கதையை கொண்டு சேர்த்தேன். கதையைப் படித்தவர் முதலில் எனது உதவி இயக்குனர்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். அதனால் வேறு தயாரிப்பாளர்களிடமும் கூட இதை கூறுமாறு என்னிடம் சொன்னார். தேவைப்பட்டால் என்னுடைய உதவி இயக்குனர் என்று கூட நீ சொல்லிக்கொள் என அனுமதியும் அளித்தார்.
அதைக்கேட்டு எனக்கு அவரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர்கள் மீது பொறாமையாக இருந்தது. இவரிடமே உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கலாமோ என்று கூட நினைத்தேன். அவரிடம் அப்போதைக்கு சரி என்று சொன்னாலும் இந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தான் இந்தக்கதையை பண்ண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவழியாக என்னுடையை கதையை தயாரிக்க முன் வந்தார் இயக்குனர் பா. ரஞ்சித்.
இந்த படத்தில் நடிப்பதற்காக யாரை அணுகலாம் என நினைத்தபோது, பரியேறும் பெருமாள் படத்தில் யோகிபாபுவின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பா.ரஞ்சித்திடம் கூறினேன். யோகிபாபுவை ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை அவர் என்னிடமே ஒப்படைத்து விட்டார். அந்த சமயத்தில் தென்காசியில் கர்ணன் படப்பிடிப்பில் இருந்த யோகிபாபுவை நேரில் சந்தித்து இந்த கதையை கூற முயற்சித்தேன். யோகிபாபுவிடம் நான் கதை சொல்ளவேண்டும் என உதவி செய்யும் விதமாக இயக்குனர் மாரி செல்வராஜ், அவருக்காக காட்சிகளை படமாக்காமல் தள்ளிவைத்து யோகிபாபுவின் பொன்னான 3 மணி நேரத்தை எனக்காக ஒதுக்கி தந்தார்.
அதேசமயம் இந்த கதையை யோகிபாபுவிடம் கூறும்போது நீங்கள் தான் கதையின் நாயகன் என சொன்னதும் முதலில் அவர் தயங்கினார்.. என்னுடைய நல்ல நேரமோ என்னவோ அவரது உதவியாளர், இவர் வைத்திருப்பது சீரியசான கதை என்று சொன்னதுமே ஆர்வமாகி உடனே கதை கேட்டு நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க நாங்கள் சரியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது சூப்பர் சிங்கரில் பாடிக்கொண்டிருந்த ஸ்ரீமதி எங்கள் கண்களில் பட்டார். அவரது தந்தையிடம் சென்று படத்தில் நடிக்க அனுமதி கேட்டோம். முதலில் மறுத்தவர் பின்னர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றதும் உடனடியாக ஒப்புக்கொண்டு தனது மகளை நடிக்க சம்மதித்தார்.
சென்சாரில் இந்த படத்தை பார்த்த அதிகாரிகள் இந்த கதையை சரியாக கையாண்டு உள்ளீர்கள் என பாராட்டினார்கள். ஒரு தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தை பொருத்தவரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான விஷயங்கள் படத்தில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். அப்படி இருந்தால் சென்சாருக்கு முன்பாக அவரே அதையெல்லாம் நீக்கிவிடுவார்.
படம் முடிந்துவிட்டாலும் படத்தை பார்க்காமலேயே அதன்மீது யோகிபாபு வைத்திருக்கும் நம்பிக்கைதான் அவர் இந்த நிகழ்வில் தனது பிஸியான நேரத்தையும் ஒதுக்கி கலந்து கொண்டு பொறுமையாக அமர்ந்திருப்பதற்கான காரணம்..
இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்வார் என நான் சொன்னபோது முதலில் பா.ரஞ்சித் தயங்கினார். ஆனால் நிலைமை மாறி அதிசயராஜுக்கு இனி வாய்ப்புகள் இருந்தால் நானே சொல்லி விடுகிறேன் என பா.ரஞ்சித்தே கூறும் அளவிற்கு அற்புதமான ஒளிப்பதிவை இந்த படத்தில் கொடுத்துள்ளார் அதிசயராஜ்.” என்றார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா.ரஞ்சித் பேசும்போது,
“இந்த படத்திற்கு யோகிபாபுவை அழைத்து நடிக்க வைக்கலாம் என இயக்குனர் ஷான் என்னிடம் கூறியபோது முதலில் தயங்கினேன். காரணம் எனக்கு யோகிபாபுவை பரியேறும் பெருமாள் படம் பார்த்ததிலிருந்து அந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்திருந்தது. அதேசமயம் பிசியான நடிகர்களின் பின்னால் போய் நிற்பது எனக்கு கொஞ்சம் டென்ஷனான விஷயம். அதனால் யோகிபாபுவிடம் நான் பேசமாட்டேன், அவர் இந்த கதை பிடித்து சம்மதித்து வந்தால் எனக்கு எந்த மறுப்பும் இல்லை என்று ஷானிடம் கூறினேன். பரியேறும் பெருமாள் படத்தில் பார்த்த யோகிபாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இந்த படத்திலும் அதே போல நன்றாக நடித்துள்ளார்.
இந்த கதையை படிக்க சொன்னபோது பலரும் இந்த படம் குறித்து நெகட்டிவ் ஆகவே என்னிடம் கூறினார்கள். அப்போதே இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்து விட்டேன். இந்த படத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை கூறினாலும் அதை கழிவிரக்கத்துடன் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கழிவிரக்கம் பேசாத படமாக இது இருக்க வேண்டும் என விரும்பினேன். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படம் தயாரிக்கும்போது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது..
இரண்டரை வருடங்களுக்கு முன்பு சின்ன படங்களுக்கு ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இப்போது சின்ன பட்ஜெட் படங்களை அவ்வளவு எளிதில் ஓடிடியில் விற்க முடியாது. பெரிய படங்களைத்தான் அவர்கள் வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சம் பின்புலம் இருப்பதால் ஒடிடியில் வெளியிடுவது எளிதுதான். அதேசமயம் நிலைமை அப்படியே மாறி தியேட்டரில் வெளியிடுவதை விட ஓடிடியில் படங்களை வெளியிடுவது கஷ்டம் என ஆகிவிட்டது. அதேபோல சிறிய படங்களுக்கும் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மை உருவாகிவிட்டது” என்று கூறினார்.

* 'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!*


* 'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!*

Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் 
சந்தீப் கிஷன் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்'  ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது..,

"படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு மிகச்சிறப்பாக இருக்கிறது. படக்குழு சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்."



தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது.,
" சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித்  ஜெயக்கொடி பயணிக்கிறார்.  அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும்.  இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். "


நடிகை ரெஜினா கசாண்ட்ரா  பேசியதாவது..,
" எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக  மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள். "


ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது..,

" ரஞ்சித் ஜெயக்கொடி  உடைய முந்தைய படங்களிலிருந்த நேர்த்தியை விட இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. அவர் ஒவ்வொரு படத்திலும் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறார். சந்தீப் அனைவருடனும் ஒரே மாதிரி பழகக் கூடியவர், அவருடன் நான் அடுத்த படம் பண்ணுகிறேன். படக்குழு அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். "


இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..,

" ரஞ்சித், லோகேஷ்  போன்ற இயக்குநர்களுடன்  பயணிக்கும் போது  எனக்குச் சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கிறது, நிறைய புது விஷயங்களைச் செய்ய முடிகிறது. இந்த படம் எமோஷனை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தில்  அம்மா செண்டிமெண்ட் ஆழமாக இருக்கிறது. ரஞ்சித் உடைய அனைத்து படத்திலும் எமோஷன்  இருக்கிறது. உலகின் சிறந்த படங்கள் அனைத்திலும் எமோஷன் இருக்கும். இந்த படத்தில் ஆக்சன், எமோஷன், காதல் என அனைத்தும் இருக்கிறது.  இந்த படம்  உங்கள் அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். "



நடிகை தீப்சிகா பேசியதாவது..,
" இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  எனக்கு இந்த வாய்ப்பளித்த ரஞ்சித்  அவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் சாம் CS  உடைய இசைக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  அவர் சிறப்பான இசையைக் கொடுத்து இருக்கிறார்.  படம் சிறப்பாக வந்து  இருக்கிறது. உங்களது ஆதரவு தேவை. "


நடிகை திவ்யான்ஷா பேசியதாவது..,
" எங்களது உழைப்பிற்குக் கிடைத்த காதலாக இதை நான் பார்க்கிறேன்.  படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்  அனைவரும், ரஞ்சித் உருவாக்கிய அற்புதமான கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.  சாம் CS சார் அதை மேம்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் படம்  பார்த்து உங்கள் ஆதரவை தர வேண்டும். "

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,
" எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர்  தயாரிப்பாளர்கள் தான். அவர்களால் தான் இந்த மைக்கேல்  படம் இப்படி உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் கதாபாத்திரம் அனைத்தும் எமோஷன்களையும்,  வார்த்தைகள் இல்லாமல் கொடுக்க வேண்டும், அதை சந்தீப் சிறப்பாகக் கொடுத்து இருக்கிறார். ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் ஆழமாகவும், ராவாகவும் இருக்கக் கடின உழைப்பைச் சண்டை இயக்குநர் கொடுத்துள்ளார்.  சாம் CS  எப்பொழுதும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பார், அவர் இந்தப்படத்திலும் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரது பங்கும் தான் இந்த   படத்தை  மேம்படுத்தியுள்ளது.  விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர்.  இந்த படத்தில்  ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார்.  கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது.  அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார். மைக்கேல் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்குப் படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்.


நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது.,
" இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம்  அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும்  பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி. மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி.    மொழி தாண்டி  இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி  வழங்கியுள்ளார்.  கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.  இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.  விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர்,  பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.


இப்படத்தில் சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை திவ்யான்ஷா கௌஷிக், கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தோஷ், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ராஜன் ராதா மணாளன் வசனம் எழுதியிருக்கும் இந்த படத்திற்கு, காந்தி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர். சத்திய நாராயணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை தினேஷ் காசி அமைத்திருக்கிறார். 

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. சண்முகா சினிமாஸ் நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Friday, January 27, 2023

*தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா*



*தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா - ஹரிஷ் கல்யாண் - இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் )படத்தின் தொடக்க விழா*

*தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழில்  தயாரிக்கும் முதல் படமான ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதன் போது திருமதி சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார். 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம்  இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார். 

தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

Thursday, January 26, 2023

உலகளவில் முதல் முறையாக நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை படைக்கவுள்ளார் 'ஓநாய்கள் ஜாக்கிரதை' புகழ் பட்டாபிராமன்!


உலகளவில் முதல் முறையாக நடிகர்களே இல்லாத படத்தை இயக்கி சாதனை படைக்கவுள்ளார் 'ஓநாய்கள் ஜாக்கிரதை' புகழ் பட்டாபிராமன்!

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது.

பலராலும் பாராட்டப்பட்ட 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய
பட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

குறும்படப் பின்னணியில் இருந்து வந்த விபிஆர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. இவர் இதற்கு முன்பு இயக்கிய 'ஓநாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றது. 

தனது புதிய படத்தின் கதைக்களம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும் இந்த புதிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் என்றும் இயக்குநர் விபிஆர் கூறினார்.

"இப்படத்தின் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை, காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப் போதுமானதாக இருக்கும். அனைவரையும் ரசிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கலாம். 2023 கோடை விடுமுறைக் காலத்தில் இந்தத் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருக்கும் படத்தை தான் இயக்க திட்டமிட்டதாகவும் விபிஆர் கூறினார். "ஆனால் திரு.  பார்த்திபன் ஏற்கெனவே அதைச் சாதித்துவிட்டதால், நடிகர்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. புதிய படத்திற்கு, திரையில் நடிகர்கள் இல்லாவிட்டாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். இந்தப் படம் கின்னஸ் சாதனை மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்கான முயற்சியாகவும் இருக்கும்," என்று அவர் கூறினார்.

விபிஆர் படத்தொகுப்பாளராகவும் பங்களிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தேவராஜ் இந்த படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

 இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை ரெமி ஸ்டுடியோ மேற்கொள்ளவுள்ளது. 

எஸ் பயாஸ்கோப் 
புரொடக்ஷன்ஸ் சார்பாகப் பட்டாபிராமன் தயாரித்து இயக்குகிறார்.

Meippada Sei Movie Review:

 Meippada Sei Movie Review:




Meippada Sei makes a fabulous twist to every sequel, the film was directed by Velan D. S. W. F. D and produced by P R Tamil Selvam, and the actors involved P R Tamil Selvam, Aadhav Balaji, O. A.K. Sundar, Raj Kapoor, Madhunika Rajalakashmi and Jayapalan. Meippada Sei is a rural-based script, Muthupandi (Aadhav Balaji) and his friends are unemployed and lethargic guys among them Muthupandi falls in love with Anitha (Madhunika Rajalakashmi). As usual, Anitha’s father Raj Kapoor, and their family members were against their love and the lovers were eloping to Chennai.

Once, they step into the urban area, the guys were visualizing the murder of a couple, the guys were getting a rental house of rowdies. the couple starts a life, they face the consequence that they were digging in the backyard a dead body’s hand pops out. In the interrogation, a young girl was brutally abused by the rowdy gang.

In the first half, the film engages with the love story, and the film Meippada Sei gives a strong verdict, which is never given in any movie. Aadhav Balaji and Madhunika upcoming actors were given adequate performances. Raj Kapoor’s performance is a mature and responsible father eccentric, O. A. K. Sundar has done in a dedicated police role. The music of the film was given by Bharani. Meippada Sei is a good judgment for the crooked people.

 


*பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் 'சைந்தவ்'*


*பிரம்மாண்டமாக தொடங்கிய விக்டரி வெங்கடேஷின் 'சைந்தவ்'*

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 75 ஆவது படமான 'சைந்தவ்' திரைப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் லுக் மற்றும் காட்சி துணுக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் பட குழுவினருடன் நடிகர்கள் நானி, ராணா டகுபதி, நாக சைதன்யா, தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சுரேஷ் பாபு, ராகவேந்திர ராவ், மைத்ரி நவீன், சிரிஷ், வைரமோகன் செருகுரி, டாக்டர் விஜேந்தர் ரெட்டி, ஏகே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் அனில் சுங்கரா, பீப்பிள்ஸ் மீடியா விஷ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா, 14 ரீல்ஸ் பிளஸ் கோபி அச்சந்தா, ஷைன் ஸ்கிரீன்ஸ் சாஹு கரபதி, எஸ் எல் வி சினிமாஸ் சுதாகர் செருகுரி, இயக்குநர் விமல் கிருஷ்ணா, பண்ட்லா கணேஷ், சித்தாரா நாகவம்சி, இயக்குநர் பி. கோபால், எம். எஸ். ராஜு, தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், கிளாசிக் சுதீர், நிஜாம் சஷி உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

நடிகர்கள் ராணா ரகுபதி, நாக சைதன்யா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு ஆகியோர் 'சைந்தவ்' படத்தின் திரைக்கதையை படமாக தொடங்குவதற்காக தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் கிளாப் அடிக்க, தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, முதல் காட்சியை அனில் ரவிபுடி இயக்கினார்.

'சைந்தவ்' படத்தின் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் 'சைந்தவ்' அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும் என்றும், இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில், வெங்கட் போயனப்பள்ளி தயாரிப்பில், விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

Wednesday, January 25, 2023

சிறந்த வெர்சடைல் நடிகை (Best Versatile Actor) விருது வென்ற லக்‌ஷ்மி மஞ்சு! - ‘மான்ஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்


சிறந்த வெர்சடைல் நடிகை (Best Versatile Actor) விருது வென்ற லக்‌ஷ்மி மஞ்சு! -  ‘மான்ஸ்டர்’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்

தென்னிந்தியாவையும் தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என பள தளங்களில் வலம் வரும் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு, நடிகையாக மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக ஜொலிக்கிறார்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் தெற்கு (Hall of Fame Awards South 2023) சமீபத்தில் வழங்கப்பட்டது. இதில் நடிகை லக்‌ஷ்மி மஞ்சுக்கு ‘மான்ஸ்டர்’ படத்திற்காக சிறந்த பல்சுவை நடிகைக்கான (Best Versatile Actor) விருது வழங்கப்பட்டது. 

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுடன் லக்‌ஷ்மி மஞ்சு இணைந்து நடித்த ‘மான்ஸ்டர்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. மிக தைரியமான வேடத்தில் லக்‌ஷ்மி மஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றிருந்தார்.

தற்போது ‘மான்ஸ்டர்’ படத்திற்காக விருதுகளை குவிக்க தொடங்கியுள்ள லக்‌ஷ்மி மஞ்சு,  தென்னிந்தியாவின் சிறந்த பல்சுவை நடிகையாக  ஹால் ஆஃப் ஃபேம் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

விருதை பெற்றுக்கொண்ட நடிகை லக்‌ஷ்மி மஞ்சு, “இந்த விருதை எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பெறுவது உண்மையிலேயே பணிவாகவும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் இருந்தது. எனது பள்ளிப் பருவத்திலிருந்தே நான் அறிந்த ஷாலு பூபாலிடம் இருந்து இந்த விருதைப் பெறுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மிக முக்கியமாக மோகன்லால் சாருக்கும், ’மான்ஸ்டர்’ படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
 


*"பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது.." - தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.*


*"பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது.." - தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.*

*புது இயக்குநர்கள் ஆர்.கண்ணனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – நடிகை சுஹாசினி மணி ரத்னம்*

*நான் வாழ்க்கையில் முக்கியமானவர் சுஹாசினி மேடம் தான்!
ஐஸ்வர்யா ராஜேஷ் இல்லை என்றால் இப்படம் இல்லை!! – இயக்குநர் ஆர்.கண்ணன்*

*என் அம்மாவை கவனித்தப் பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்..
 – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 
"தி கிரேட் இந்தியன் கிச்சன்" 
படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது..

நடிகை சுஹாசினி மணி ரத்னம் பேசும்போது,

இந்த விழாவிற்கு கண்ணன் அழைக்கும்போது, அவர் அழைத்து எப்படி வராமல் இருப்பேன் என்று ஒப்புக் கொண்டேன்.

இப்போது இருக்கும் புது இயக்குநர்கள் அனைவரும் இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு காட்சியை 12 நாட்கள் படப்பிடிப்பு எடுக்கும்போது, ஒரு படத்தையே 12 நாட்களிலேயே எடுத்து விடுகிறார்.

சென்னையில் நல்ல ரசனையான நிகழ்ச்சி நடந்தால் நிச்சயம் போய் பாருங்கள். அப்போது தான் நாம் வளர முடியும். எனக்கு திறமை இருக்கிறது என்று நினைக்காமல் எல்லாவற்றையும் போய் பாருங்கள், கற்றுக் கொள்ளுங்கள். மெட்ராஸ் டாக்கீஸ்  குழுவில் நகைச்சுவை வேண்டுமென்றால் கண்ணனை கூப்பிடுங்கள் என்று தான் கூறுவோம்.அந்த அளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்படி பட்ட அவர் இந்த சீரியசான படத்தையும் அருமையாக எடுத்துள்ளார். 

ஐஸ்வர்யாவை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான், ரேவதி போன்றோர்கள் நீண்ட காலமாக திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஐஸ்வர்யாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தெலுங்கில் நான் முன்னணி நடிகையாக இருந்ததற்கு இயக்குநர் தான் காரணம். அந்த காலத்திலேயே பெண்களை புரிந்து கொண்ட இயக்குநர்கள் கே.பாலசந்தர் சாரும் தான்.

கண்ணனுக்கு இதுபோன்ற படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியதற்கு வாழ்த்துகள்.

கேரளாவில் விருது குழுவில் இடம் பெற்ற 9 பேர்களில் நான் ஒருவள் தான் பெண். அவர்களிடம் சண்டையிட்டு இதுதான் சிறந்த படம் என்று பார்க்க வைத்தேன்.

நான் மணியை திருமணம் செய்துகொள்ளும்போது ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. அவர் 5 படங்கள் தான் இயக்கியிருந்தார். நான் 90 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். இந்த நிலையில் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அங்கு புதிதாக திருமணமான மணப்பெண்ணான எனக்கு இறுதியாகத்தான் உணவு பரிமாறினார்கள். முதலில் ஆண்கள் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்கிற சம்பிரதாயம். அதுவும் சமையலறையில் தான் கொடுத்தார்கள். எனக்கு சினிமா பார்ப்பது போல அதிர்ச்சியாக இருந்தது. காலம் மாறவே மாறாதா என்று அன்று தோன்றியது.

பள்ளியில் படிக்கும்போது அம்பை என்று எழுத்தாளர். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அந்த கதையில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் தோசையின் சுவை போன்று வேறு எங்கும் கிடைக்காது. சமையலறை மூலையில் ஏன் இவர்கள் இருக்க வேண்டும் என்று பாலசந்தரும் சிந்தித்தார்.

பெண்களின் சமையலறை நேரத்தை குறைப்பதற்காக ராமகிருஷ்ணன் ஓப்போஸ் குக்கிங் தொடங்கி இருக்கிறார். இவர்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது தான் நம்பிக்கை வருகிறது.

எனக்கு கிடைத்த அனுபவம் என் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு கிடைக்க கூடாது. என்னுடைய வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணிற்கு நானோ அல்லது எனது கணவரோ தான் முதலில் பரிமாற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இந்த படம் நிச்சயம் எல்லோரிடமும் மாற்றம் கொண்டு வரும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,

12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.

இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார் . மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது. 

எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.

ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார். 
ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.

இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி 
மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார்.

இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

வசனகர்த்தா ஜீவிதா பேசும்போது,

இப்படத்தை ஏற்கனவே மலையாளத்தில் பார்த்திருக்கிறேன். சிலர் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்கள் சுதந்திரம் என்றால் ஆடைக் குறைப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள். மலையாள பார்வையாளர்களும், தமிழ் பார்வையாளர்களும் ஒரே மாதிரி அல்ல. இந்த வாய்ப்பை இயக்குநர் ஆர்.கண்ணன் சார் கொடுக்கும்போது என்னால் எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், எனக்கு 3 நாள்தான் கொடுத்தார். பலமுறை பார்த்து எழுதி முடித்து கண்ணன் சாரிடம் கொடுத்தேன். அவர் நினைத்ததை போலவே எழுதியிருந்தேன் என்று கூறினார். மேலும், இன்னொரு வசனகர்த்தாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தார்.

கண்ணன் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் மிகச் சிறந்த நிர்வாகி என்றார்.

படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் பேசும்போது,

இந்த படம் எடுக்க மிகப்பெரிய தைரியம் வேண்டும். ஆராய்ச்சியாகத்தான் எடுக்க முடியும். அதிலும் லாக்டவுன் சமயத்தில் இந்த படத்தை கண்ணன் சார் எடுத்தார். மலையாளத்தில் ஓடிடியில் தான் வெளியானது. அதை திரையரங்கிற்கு கொண்டு வரும்போது அப்படியே கொடுக்க முடியாது. மிக யதார்த்தமாக எடுக்க வேண்டும். அதை அற்புதமாக செய்திருந்தார். அந்த படத்திற்கு முதல் படமாக என்னை நம்பி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பாடலாசிரியர் ஹிருதயா பேசும்போது,

கண்ணன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். கதாநாயகன் அறிமுக பாடலுக்கு பெரிய கவிஞரிடம் தான் கொடுப்பார்கள். ஆனால், என்னை நம்பி சந்தானம் சார் படமான #டிக்கிலோனா படத்திற்கு எழுத வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு என்னுடைய எல்லா படத்திற்கு நீங்கள் இருப்பீர்கள் என்றார். அடுத்த படத்திற்கும் வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். அவரின் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவருடைய தோற்றத்தைப் பார்த்து யாரும் நம்பமாட்டார்கள். மிகச் சிறந்த கலாரசிகன் கண்ணன் சார்.

இந்த படத்தில் மாய நீர்வீழ்ச்சியாய் என்ற பாடலை எழுதியிருக்கிறேன். அதை திரையில் பார்க்கும்போது தான் சந்தோஷம் கிடைக்கும். மணி சாரின் சிஷ்யன், ஏ.ஆர்.ரகுமானின் இளைய சிஷ்யனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர்கள் கூட்டணி போல் இவர்கள் கூட்டணியும் வெற்றி பெறும் என்றார்.

நடிகர் நந்தகுமார், இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் பேசும்போது

கண்ணனின் முதல் படத்திற்கு நான் தான் ஒளிப்பதிவு செய்தேன். அவர் எப்போதுமே நகைச்சுவையாகத்தான் இருப்பார். ஒரு படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்களிலேயே துவங்கி விடுவார். மலையாள பாணியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஒளிப்பதில் சிறிது மாற்றங்கள் செய்திருக்கிறோம். ஐஸ்வர்யா என்னுடைய நண்பர். சிறு சிறு விஷயங்களில் கூட மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு இன்னொரு நாயகன் பின்னணி இசை. பின்னணி இசைக்கு மட்டும் இரண்டு மாதங்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்றார்.

தயாரிப்பாளர் துர்காராம் பேசும்போது,

இந்த படத்திற்கு ஆதரவு தர வந்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படத்தை தயாரித்தது மகிழ்ச்சியடைகிறேன். பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. நிச்சயம் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை கலைராணி பேசும்போது,

இப்படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்தேன். சமையலறை முக்கிய பாத்திரமாக இருந்தது. ஆண்களுக்கு சமையலறையில் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவிற்கு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்று யதார்த்தமாக இருந்தது.

பெண்களும் சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்களும் சமையலறையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணன் சாருடன் இரண்டாவது முறை நடிக்கிறேன். அவர் எப்போதுமே கலைஞர்களை குடும்பமாக  வைத்துக் கொள்வார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன்.. கதைக்காக.. என்றார்.

-- ஜான்சன்.

*விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்'*


*விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்'*

*விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் 'சைந்தவ்'*


தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ' வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும்,  படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'ஹிட்' பர்ஸ்ட் கேஸ் மற்றும் 'ஹிட்' செகண்ட் கேஸ்  திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பி. ஹெச். கேரி கவனிக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

விக்டரி வெங்கடேஷ் - சைலேஷ் கொலனு-  நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'சைந்தவ்' படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் விக்டரி வெங்கடேஷ் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றுவதும்,  பின்னணியில் கார் வெடித்து சிதறுவதும்  ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. 'சைந்தவ் ' படத்தின் டைட்டில் போஸ்டர், விக்டரி வெங்கடேஷ் அதிரடியாக நடிப்பதாகவும், தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிடுகிறது.

மேலும் இந்த காணொளியில் நாயகன் விக்டரி வெங்கடேஷ், சந்திரபிரஸ்தா என்ற கற்பனை நகரத்தில் ஒரு மருந்துக் குப்பியைக் கொண்ட குளிர்பானப் பெட்டியுடன் துறைமுகப் பகுதிக்குள் நுழைகிறார், பின்னர் அவர் ஒரு கொள்கலனில் இருந்து துப்பாக்கியை வெளியே எடுக்கிறார். கடைசியாக, தன்னால் கடுமையாக தாக்கப்பட்ட குண்டர் குழுவை, பார்த்து எச்சரிக்கிறார். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படத்தின் தன்மை, தொனி மற்றும் வெங்கடேஷ் எந்த வகையான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதை இந்த காணொளியில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்டின் இரண்டாவது தயாரிப்பான 'சைந்தவ்',  நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://bit.ly/SaindhavGlimpse

Tuesday, January 24, 2023

*மார்ச் 17 - புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’*


*மார்ச் 17 - புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்பின் ‘கப்ஜா’*

*‘கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு*

*மார்ச் 17ல் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும்  ‘கப்ஜா’*

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'கப்ஜா' எனும் திரைப்படம் மார்ச் மாதம் 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. . 

‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருடைய புகழுக்கு கிரீடம் சூட்டும் வகையில், ‘கப்ஜா’ படம் வெளியாகிறது. இதனை அப்படக்குழுவினர் உறுதி செய்து, பிரத்யேகமான போஸ்டரை  வடிவமைத்து, வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 

கன்னட திரையுலகிலிருந்து 'கே ஜி எஃப் 1 & 2 ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. 

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, சுதா,  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘கே. ஜி எஃப்’ படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை தீபு எஸ் குமார் கவனிக்க, சண்டைக்காட்சிகளை  ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், என மூன்று சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் டீசர், ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். ” என்றார்.

*'Kabzaa' to have a worldwide release for Puneeth Rajkumar's birth anniversary on March 17th*

The team of the highly anticipated Kabzaa has decided to pay a fitting tribute to Superstar Puneeth Rajkumar. Yes! The makers have come forward to releasing the movie on Puneeth Rajkumar's birth anniversary on March 17th. 

Kannada leading star actors Upendra and Kicha Sudeep are playing  lead characters in 'Kabzaa', of which the teaser was released by Rana Daggubati.

The attention of the entire Indian film industry is currently back on the Kannada film industry as the big-budget productions like 'KGF1 & 2', '777 Charlie', 'Vikrant Rona' and 'Kantara' have raked in huge moolah after hitting the screens! Upendra and Kichha Sudeep starrer 'Kabzaa' is highly anticipated across India. Accordingly, this film is not only released in Kannada but also in seven Indian languages like Tamil, Telugu, Hindi, Malayalam, Marathi and Oriya.

Produced by R. Chandrasekhar on behalf of Sri Siddeshwara Enterprises in a grand scale, the film is touted as an action thriller in the gangster genre  The film stars Upendra andn Kicha Sudeep along with actress Shriya Saran, actors Murali Sharma, Sudha and many others. Arjun Shetty is the  cinematographer for this film. Composer Ravi Basrur who had composed the music for KGF, 1 & 2 has scored the music for this flick . Deepu s kumar is the editor. Shiva Kumar has assumed responsibility for the art work and the stunt sequences  have been choreographed  by three trained stunt choreographers, namely, Ravi Verma, Vijay and Vikram Mor. Kannada film world's leading filmmaker, R. Chandru has directed this flick which is presented by MTB Nagaraj. 
 

Speaking about the film, the director said, “In 1947, an Indian freedom fighter is brutally attacked. His son gets entangled with the mafia due to unavoidable reasons. What happena after that? 
'Kabzaa' is a gigantic production that vividly tells that.  'The Rise of a Gangster in India' is the film' s tagline. In other words, we have discussed the history of the rise of illegal shadow-world fathers of crime in India after independence. " said.
 
'One of the reasons for the success of KGF 1 & 2 was the contribution of music composer Ravi Basrur. He has also composed the music for the film 'Kabzaa', the expectations of the fans have increased multifold! 

After the success of 'KGF', the Kannada film industry is delivering different projects  on a pan Indian basis, with new vigor.

Monday, January 23, 2023

*Victory Venkatesh, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project #Venky75 Announcement Out January 25th*


*Victory Venkatesh, Sailesh Kolanu, Venkat Boyanapalli, Niharika Entertainment’s Prestigious Project #Venky75 Announcement Out January 25th*

Victory Venkatesh who is riding high with the blockbuster success of F3 will be joining forces with the very talented director Sailesh Kolanu who delivered consecutive hits with the HITverse, for a high-budget film to be produced by Venkat Boyanapalli of Niharika Entertainment.

The landmark 75th film of Venkatesh- #Venky75 is production No 2 from Niharika Entertainment and they made a successful foray into production with Shyam Singha Roy. The most prestigious project of the production house will be mounted on a large scale. This indeed will be the highest-budget movie for Venkatesh.

Obviously, there will be high expectations on the film coming from successful people. The pre-look poster sees a silhouette image of Venkatesh who holds something in his hand. It’s not a gun and it’s something else that will be revealed on the 25th of this month. The pre-look poster with a huge blast and dense smoke indicates Venkatesh’s intense character and an action genre of the movie.

Sailesh Kolanu who wrote a winning script will be presenting Venkatesh in a first-of-its-kind role in the movie that will feature several prominent actors. Noted technicians will handle different crafts. The makers will announce the other cast and crew soon.

Cast: Venkatesh

Technical Crew:
Writer-Director: Sailesh Kolanu
Producer: Venkat Boyanapalli
Banner: Niharika Entertainment
PRO: Yuvraaj

*சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.*


*சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு.*

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான 'மைக்கேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் 'மைக்கேல்'. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். திரிபுரனேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் கே நரங் வழங்குகிறார். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் கதையின் நாயகனான சந்தீப் கிஷனின் தோற்றம், அவரது நடிப்பு, சண்டை காட்சிகள், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடும் உழைப்பு... ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. முன்னோட்டத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், பின்னணியையும் விளக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக காதலிக்கும் பெண்களைப் பற்றி கௌதம் மேனன் எச்சரிக்கும் வசனங்களும், அதற்கு சந்தீப் கிஷன் பதிலளிக்கும் வசனங்களும் உணர்வுபூர்வமாகவும், வலிமையானதாகவும் இடம் பிடித்திருக்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கின் திரை தோன்றல் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திருக்கிறது. மேலும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் மிரட்டும் வகையிலான தோற்றமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. இள வயதில் தோன்றும் சந்தீப் கிஷன், ஒருவரை துப்பாக்கியால் நேருக்கு நேர் சுடுவதுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.

ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னர் போல் முன்னோட்டம் இருப்பதால், வழக்கமான கேங்ஸ்டர் படங்களை விட கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், பிரத்யேகமான முயற்சி எடுத்து, திரைக்கதை அமைத்து அதனை திரையில் காட்சிப்படுத்தியிருப்பதால் அவரது முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காதலி மீது காட்டும் அன்பும், எதிரிகள் மீது அவர் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் , அனுசுயா பரத்வாஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒவ்வொருவரும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுவதால், 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. https://youtu.be/HBTaKskrt9w

Friday, January 20, 2023

உடம்பைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டம் கொடுக்கும் கள் எவ்வளவோ மேல்: இயக்குநர் பேரரசு பேச்சு!


உடம்பைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டம் கொடுக்கும் கள் எவ்வளவோ மேல்: இயக்குநர் பேரரசு பேச்சு!

ஆண்ட கட்சி ஆளுகிற கட்சியை விட தனித்து நிற்கும் கட்சியை நம்பாதீர்கள்: பத்திரிகையாளர் முக்தார் அகமது பேச்சு!

நான் ஒரு பனையேறி தான், இதைச் சொல்வதில் எனக்குப் பெருமைதான் : பயில்வான் ரங்கநாதன் பேச்சு!

எனக்கு எவ்வளவு நஷ்டம் வரும்?  என்று கேட்டுக் கொண்டே 'நெடுமி ' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்!

டாஸ்மாக் கடைகளில் கள்ளை விற்கலாம்: இயக்குநர் பேரரசு பரிந்துரை!

கதையைத்தான் திருடினீர்கள்;சூப்பர் சார் பட்டத்தையும் திருடுவீர்களா? பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கேள்வி!

 படப்பிடிப்பு நாட்களில் வெறும் காலுடன் செருப்பில்லாமல் நடந்தேன்: 'நெடுமி ' பட நடிகர் பேச்சு!

நான் என் கைக் குழந்தையுடன் வந்திருக்கிறேன்; அதை மறைக்க விரும்பவில்லை: 'நெடுமி' நாயகி அபிநயா வெளிப்படைப் பேச்சு!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.
ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, பத்திரிகையாளர்கள் பயில்வான் ரங்கநாதன், முக்தார் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் ஜாஸ் ஜே.பி. பேசும்போது,

" இதை ஒரு  குழு முயற்சியாக எடுத்திருக்கிறார்கள். குறும்படம் ,இசை ஆல்பங்கள் என்று அவர்கள் முதலில் செய்திருக்கிறார்கள். படம் எடுப்பார்கள் என்று நான் முதலில் நம்பவில்லை. பிறகு போகப் போக ஈடுபாடு ஏற்பட்டது .இப்போது எனக்கு திருப்தியாக இருக்கிறது" என்றார்.

கதாநாயகன் பிரதீப் செல்வராஜ் பேசும்போது, 

"முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று  நினைக்கவில்லை.நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள். மரமெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமமாக இருக்கிறது. இந்தச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள்  ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து  சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்." என்றார்.

படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது,

"வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன்.ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை நம்பி ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு  எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது" என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,

" இந்த இயக்குநர்  நந்தா எனக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கம் .எனக்கு ஒரு பாசிட்டிவான வேடத்தை கொடுத்துள்ளார். ஒரு நாள் தான் படப்பிடிப்பு. போய் நடித்த போது திருப்தியாக இருந்தது . பனைமரத்தைப் பாராட்டிப் பேசுகிற மாதிரி ஒரு காட்சி. நன்றாக வந்திருப்பதாக நம்புகிறேன்.பனையேறிகள் அனைவரும் இன்று சிறப்பான வாழ்க்கையில் இல்லை. சிரமப்பட்டுத் தான் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது" என்றார்.

படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது,

"இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம்.ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது.அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத  எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது.அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி" என்றார்.

 தயாரிப்பாளர் வேல்முருகன் பேசும்போது,

"இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். முதல் படம் வெற்றிப் படம் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது ஒரு சவாலான படம்.
இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க்.
இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் பேசுகிறது . இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்றார்.

ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது,

"பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச்  சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது.பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும்  சொல்லப்படும் விஷயத்தாலும்  இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது" என்றார்.

டி3 படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது,

'' சினிமாவில் நிறைய அவமானங்களைச் சந்தித்து தான் மேலே வர வேண்டும்.சினிமாவில் யாரிடம் ஏமாறக்கூடாது என்று யாராவது விளக்கி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சினிமாவில் ஏமாற்றுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் .அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்" என்றார்.

பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது,

" இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள்  சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

 'காவல் தெய்வம் 'படத்தில் சிவாஜி கணேசன்ஒரு பனையேறியாக நடித்திருப்பார். அந்தப் படத்தை எஸ்.வி. சுப்பையா தயாரித்திருப்பார்.
நடிகர் திலகம் அந்த படத்தில்
சம்பளம் வாங்காமல்  நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.

இங்கே பனைத் தொழில் வாரியத் தலைவர் எர்ணாவூர்  நாராயணனை அழைத்து வந்திருக்கலாம். பனைமரம் மட்டும் தான் தண்ணீர் இல்லாக் காட்டில் கூட விளைந்து பயன் தருவதாகும்.
பனையேறிகள் என்று சொல்லப்படுபவர்கள் இன்று நன்றாக இருக்கிறார்கள்.  எவரும் கஷ்டப்படவில்லை .இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான்.
அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ்.அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர் .எவரும் வறுமையில் வாழவில்லை.

இந்த சமுதாய மக்கள் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள். யாரிடமும் ஏமாறவும் மாட்டார்கள்.

பனையேறிகள் ஏன் சிரமப்பட வேண்டும்? ஒரு காலத்தில் நாலணாவிற்கு கருப்பட்டி விற்றது.அப்போது வெள்ளை சர்க்கரை எட்டணா விற்றது. இப்போது கருப்பட்டி 400 ரூபாய் விற்கிறது. அதே வெள்ளை சர்க்கரை 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு மதிப்புள்ளதாக கருப்பட்டி இருக்கிறது .அதனால் தான் சொல்கிறேன் பனையேறிகள்  என்றும் சிரமப்பட்டதில்லை.

 பனையேறிகளிடம் ஒரு முறை உண்டு .அதற்குப் பாட்டம் என்று பெயர்.ஒரு நாள் வரும் கள்ளைப் பனையேறி எடுத்துக் கொள்வார். மறுநாள் மரத்துக்காரருக்குக் கொடுப்பார். இப்படி முறை வைத்து சம்பாதிப்பார்கள்.

நாங்கள் கள்ளை ஆதரித்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கள் என்பது இயற்கை கொடுத்த பால் .ஒரு மரத்துக் கள்ளை குடிப்பவன் நூறாண்டு வாழ்வான். பனையேறிகள் எப்போதும் உடல் வலிமையோடு இருப்பார்கள்.
படங்களில் பனையேறிகளை உயர்த்திக்காட்டுங்கள். ஊடகங்கள் எப்போதும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். இந்த படம் உண்மையில் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நிச்சயமாகக் தூக்கி பிடிப்பார்கள். லவ் டுடே படம் யாரால் ஓடியது ?முழுக்க முழுக்க ஊடகங்கள் தான் காரணம்.

நான் எதையும் நேரடியாகப் பேசுபவன்.என்னை எப்போதும் தாக்கிப் பேசி வரும் கே .ராஜன் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். அவர் விரைவில்  நலம் பெற்று வர நான்  வேண்டுகிறேன்.

 இங்கே பேரரசு இருக்கிறார். அவர் ஒரு மேடையில் பேசினார். பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர் தான். அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால் நான் அப்படி அவர் பேசக்கூடாது என்று சொல்கிறேன் .இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன்.

நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒரு வர்தான்.அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும்.
இப்போது யார் சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான்.அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்?
 இதுவரை கதையைத் திருடினீர்கள்.இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா? "என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,

" இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.பாண்டிச்சேரியில் நிறைய படப்பிடிப்பு நடக்கும் . அதை வேடிக்கை பார்த்த மக்களே விவரமாக இருப்பார்கள்.இதை நான் என் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன். பாண்டிச்சேரியில் இப்படி சினிமா எடுத்திருக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன் .இவர்களே தனியாக எந்தவிதமான முன்னனுபவமும் இல்லாமல் படம் எடுப்பதை அறிந்து நான் நேரில் போய்ச் சந்தித்துப் பேசினேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சினிமா ஆர்வத்தை நாம் மதித்து, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.

பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசும்போது,

"விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள். 


திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் .ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களேஅவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள்.

பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன .இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கின்றன?

பத்திரிகையாளர்கள்  என்றும் மக்கள் பிரதிநிதியாக நின்று கேள்வி கேட்க வேண்டும்.

தொலைக்காட்சி பேட்டிகளை ஒரு காலத்தில் மக்கள் இது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்று மக்கள் கடந்து போனார்கள். நான் மக்கள் பிரதிநிதியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு தான் மக்கள் அதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.இவன் நம் சார்பில் நின்று கேள்வி கேட்கிறான் என்று நினைத்தார்கள்.

பத்திரிகையாளர்கள் ராணுவத்தினர்,காவல்துறையினரைப் போன்றவர்கள்.அவர்களைப் போலவே பத்திரிகையாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள், தங்கள் வீட்டு இன்ப துன்பங்களை மறந்து களத்தில் நிற்பவர்கள். எந்த விழாக் கொண்டாட்டமும் அவர்களுக்குக் கிடையாது.மழையா? வெள்ளமா ?புயலா ? சுனாமியா?எங்கும் களத்தில் நிற்பவர்கள். அந்தப் பத்திரிகையாளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.


திராவிடம் தமிழ் தேசியம் என்கிற நிலையில் என்னை திருமா கவர்ந்த தலைவராக இருக்கிறார். 

அதேபோல் ரஜினிகாந்த் பற்றி நான் ஆயிரம் விமர்சனங்கள்செய்திருக்கிறேன்.கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவேன் என்றார். பிறகு அது தவறு என்று புரிகிற போது அதை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது .கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். இது ரஜினி கொடுத்துள்ள பாடம்.அந்தத் தெளிவான முடிவு எடுத்தவகையில் அவர் என்னைக் கவர்ந்த ஒருவராகத் தெரிகிறார்.

இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

"நான் பொங்கல் விழாவுக்கு ஊருக்குச் சென்றிருந்தேன் தாமதமாக வரலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இது மாதிரி படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தப் பட விழாவிற்காக முன்னதாகவே வந்திருக்கிறேன்.

பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு.பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம்  நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம்  தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்!

இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது .சிறிய போதை தரும் அவ்வளவுதான் உடலைக் கெடுக்காது.அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு  ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலைய வைத்துக் கொள்ளுங்கள். 
உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல்.
கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார்.நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு.என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள் ;ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள்.இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை?

மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்க கூடாது.

பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கலாம்; ஆனால் கேலி பேசக்கூடாது.

அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை.இங்கே வந்து  அரசியல் பேசக்கூடாது.படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி  வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது. 

நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்" என்றார்.

மேலும் இந்த விழாவில்
யூடியூபர் காத்து கருப்பு கலை,ஐ .ஜி. பாஸ்கரன்,படத்தில் பணியாற்றியவர்கள் ,படக்குழுவினரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

கவுண்டமணி நடிக்கும் நடிக்கும் " பழனிச்சாமி வாத்தியார் " படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.


கவுண்டமணி நடிக்கும்  நடிக்கும் "  பழனிச்சாமி வாத்தியார் " படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

 
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும்  இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் " 

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்  இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.


அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால்
 R.K. சுரேஷ்,மதுரை  டாக்டர் சரவணன்,  மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார்,  ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
யோகா டீச்சராக சஞ்சனா சிங் நடிக்கிறார்.
மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 wide angle   ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு
தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K  இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம்  எழுதி இயக்குகிறார் - திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.

Executive Producer & Pro - மணவை புவன்

தயாரிப்பு - மதுரை செல்வம் 

இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த  மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

*பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்*


*பிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்*

*ஃபேஷன் ஐகானான ராம் சரண்*

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாக தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களை பாராட்டும் மரபும் ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பில் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையுடன் தோன்றிய நட்சத்திரங்களின் பட்டியலில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் இடம் பிடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு பலர் சமூக ஊடகங்களில் மூலமாகவும், நேரிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அண்மையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் எனும் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும், நடிகைகளும், கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண், அவர் அணிந்திருந்த தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய ஆடைக்காக, 'சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்'களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது தனி சிறப்பு.

ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரத்யேகமான ஸ்டைலுடன் கூடிய ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தார். அத்துடன் பேஷன் ஆடைகளை அணிவதில் தனித்துவமான அடையாளமாகவும் இவர் திகழ்கிறார்.

ராம் சரண்- தான் அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கான தேர்வில் எப்போதும் முழுமையான கவனத்துடன் இருக்கிறார். நம்முடைய பாரம்பரியமான பழமொழியில் சொல்ல வேண்டும் என்றால், 'ஆள் பாதி; ஆடை பாதி' என்பதை நிரூபிக்கும் வகையில் இவர் அணியும் ஆடையை எப்போதும் தனித்துவமாகவும், சிறப்பானதாகவும், பிரத்யேகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், நவீன பாணியுடன் 'பேஷன் ஐகானா'கவும் செயல்படுகிறார்.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...