Monday, February 27, 2023

Finesse Aesthetic medical and surgical centre is a state of the art beauty and cosmetic facility which is the first of its kind in Chennai inaugurated by Actress Samyukta Shan

Finesse Aesthetic medical and surgical centre is a state of the art beauty and cosmetic facility which is the first of its kind in Chennai inaugurated by Actress Samyukta Shan 
This centre is pioneered by Dr. Roshini Manay Srinivas, a facial plastic and hair transplant surgeon who has trained under some of the best surgeons in the industry across the world. 

The centre brings a holistic approach to cosmetology with various departments such as Cosmetic Dermatology, Plastic surgery & Facial plastic under one roof unlike any other institute in the city.

This new super specialised centre will provide for all the latest advanced cosmetic treatments including anti-ageing therapies, medicated facials, liposuction, facial sugical procedures and body contouring to name a few. 

With Finesse Aesthetic, Dr. Roshini aims to bring world class treatment and the latest technologies in both medical and surgical procedures with an unmatched luxurious experience at the most affordable rates to the shores of Chennai. 

Finesse Aesthetic is located amidst the lush green scenic beauty of Bishop Garden and is a stone's throw away from famous city hotspots.

Finesse Aesthetic medical and surgical centre is a state of the art beauty and cosmetic facility which is the first of its kind in Chennai inaugurated by Actress Samyukta Shan.

*நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்*


*நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து உருவான படம் ‘குடிமகான்’ ; இயக்குனர் N பிரகாஷ்*

*டீக்கடையில் உருவானதுதான் குடிமகான் படத்தின் கதை ; நடிகர் விஜய் சிவன்*

*குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ; நடிகை கோமல் சர்மா* 

*ஆண்களும் பெண்களும் சமம் அல்ல  ; குடிமகான் விழாவில் நகைச்சுவை நடிகர் சதீஷ் அதிரடி பேச்சு*

*நிஜமாகவே மாடு வளர்த்து வாடிவாசலில் இறக்கிவிட்டுத்தான் வருகிறேன் ; ஆச்சர்யப்படுத்திய நடிகை ஷீலா ராஜ்குமார்*

*மன அழுத்தத்திற்கு ஆளானவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் ; கோமல் சர்மா கோரிக்கை*

*குடிமகான் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் வருத்தம் தான் ; நடிகை ஷீலா ராஜ்குமார்*

*நரேஷ் ஐயர் என்னுடைய வழிகாட்டி ; குடிமகான் விழாவில் நெகிழ்ந்த இசையமைப்பாளர் தனுஜ் மேனன்*

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் 

விஜய் சிவன் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர். 

பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், பொன்ராம் உள்ளிட்ட பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட நிலையில், இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகர்கள் சதீஷ், ஷீலா ராஜ்குமார், கோமல் சர்மா, ஜிபி முத்து மற்றும் யூட்யூப் புகழ் இரட்டையர்களான அருண்-அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் நமோ நாராயணன் பேசும்போது, “இதுவரை நான் பணியாற்றிய படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான படக்குழு என்று சொல்வேன். 20 நாட்கள் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தேன். கடைசி நாள் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பு என் பெயர் பொதித்த கேக் ஒன்றை வரவழைத்து என்னை அழைத்து வெட்ட செய்தார்கள். நிஜமாகவே கண் கலங்கி விட்டேன். அதேபோல தயாரிப்பாளரே நம்மை தேடி வந்து உங்களுக்கான சம்பளம் வந்து சரியாக வந்து சேர்ந்து விட்டதா என நேராக உறுதிப்படுத்திய அதிசயமும் இந்த படத்தில் தான் நடந்தது” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் பேசும்போது, “இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் பணி துவங்கியதில் இருந்து, நான் கூடவே இணைந்து பயணித்திருக்கிறேன். மனதுக்கு ரொம்பவே நெருக்கமான படமாக இது அமைந்து விட்டது. குடிமகான் என பெயர் வைத்திருந்தாலும் 100% இது கமர்சியல் படம் தான்” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “நான் நடித்த பேட்டக்காளி வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பார்த்தவர்கள் அனைவரும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவராக நினைத்து ஏற்றுக்கொண்டதை நான் மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். அதில் பேட்டக்காளி என்கிற ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நான், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நானே வளர்த்த என்னுடைய மாட்டை வாடிவாசலில் இறக்கினேன். அந்த மாட்டின் பெயர் பாஷா. 

இந்த குடிமகன் படத்தில் நானும் நடித்திருக்க வேண்டியது. ஆனால் பேட்டக்காளி வெப் தொடருக்கு மொத்தமாக என்னுடைய கால்ஷீட்டை கொடுத்து விட்டதால் இதில் என்னால் நடிக்க முடியாமல் போனது,. அதற்காக இந்த இடத்தில் இயக்குனர் பிரகாஷிடம் எனது வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கோமல் சர்மா பேசும்போது, “குடிமகன் என டைட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக இந்த நிகழ்வில் நான் குடிமகன்களுக்கு அறிவுரை எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் குடிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள். உங்களுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள் அப்படி யாரேனும் இருந்தால் இதுபற்றி அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்து உயர்வது நல்ல விஷயம்.. அதை செய்து பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “நான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறேன். அதிலும் நிறைய முதல் பட இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் பிரகாஷ் தான் விரும்பியபடி காட்சிகளை படமாக்கும் பிடிவாதக்காரர். எந்த அளவுக்கு என்றால் என்னுடைய காட்சிகளை தொடர்ந்து படமாக்கியவர், 48 மணி நேரம் கழித்து தான் எனக்கே பிரேக் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த படத்தில் நடித்தபோது உடன் நடித்த நடிகர் நமோ நாராயணனுக்கு நான் ரசிகனாகவே ஆகி விட்டேன்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் தனுஜ் மேனன் பேசும்போது, “இயக்குனர் பிரகாஷும் நானும் 27 வருட நண்பர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஜி பி முத்து வந்ததும் அவரை பார்த்துவிட்டு என்னை மறந்துவிட்டார் பாருங்கள்.. இந்த மேடையில் அழகான பாடலை பாடிய நரேஷ் ஐயரை என்னுடைய வழிகாட்டி என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்காக நான் இசையமைத்துள்ள இரண்டு படங்களிலும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இந்த படத்தில் வினித் சீனிவாசனும் ஒரு பாடல் பாடியுள்ளார்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஜய் சிவன் பேசும்போது, “நாளைய இயக்குனர் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பிரகாஷ். கொரோனா காலகட்டம் ஆரம்பித்த சமயத்தில் தான் இந்த படம் பற்றி பேச துவங்கினோம். லாக்டவுன் ஒரு பக்கம் இருந்தாலும் தினந்தோறும் தவறாமல் கதைபேசி இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினோம். குறிப்பாக டீக்கடையில் நாங்கள் மூவரும் சந்தித்து பேசி அப்படி உருவானது தான் இந்த குடிமகான் கதை” என்று கூறினார்.

யூட்யூப் மூலமாக புகழ்பெற்ற இரட்டையர்கள் அருண் அரவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களது நண்பரான இசையமைப்பாளர் தனுஜ் குறித்து பேசும்போது, “ஒரு காலத்தில் 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் பணியாற்றிய தனுஜ்,  இப்போது ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் நீ என்ன சாதித்திருக்கிறாய் என தன்னை நோக்கி கேள்வி எழுப்பியவர்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார்” என்று கூறினார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசும்போது, “தண்ணி, தம் அடிக்காத டீ-டோட்டலர் என்பதால் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன்.. ஆனால் ட்ரெய்லரில் அதை சரியாக சொல்லியிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் அந்த வயதில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன்பின் அதை நாம் தொடவே மாட்டோம்.. நான் அப்படித்தான் இவற்றில் இருந்து ஒதுங்கினேன். 

இதுபற்றி சில கல்லூரி நிகழ்ச்சிகளில் நான் பேசியிருக்கிறேன். ஒரு பெண்கள் கல்லூரியில் கலந்து கொண்டபோது கூட இதே விஷயத்தை வலியுறுத்தி பேசும்படி அந்த கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டது தான் வேடிக்கை.. ஏன் என கேட்டதற்கு ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல.. பெண்கள் ஆண்களைவிட இன்னும் கொஞ்சம் மேலானவர்கள் தான்.. சொல்லப்போனால் பெண்கள் தெய்வத்திற்கு சமம்” என்று கூறினார்.

இயக்குநர் பிரகாஷ்.N பேசும்போது, “நட்பு நம்பிக்கை இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. நாளைய இயக்குனர் சமயத்தில் என்னுடன் பணியாற்றிய குழு அப்படியே இந்த படத்திலும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். இந்த படத்தில் குடி என்பது ஒரு பகுதி மட்டும்தான். மற்றபடி கமர்சியல் அம்சங்கள் நிறைந்ததாக தான் இந்த படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினருடன் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்” என்று கூறினார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் பார்வதி (விஜே பாரு) சுவாரஸ்யம் குறையாமல் உற்சாகத்துடன் தொகுத்து வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஜி.பி முத்து பேசும்போது, “இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறது. அதனாலேயே இந்த படம் வெற்றி பெறும்” என்று கூறினார்.

உலக அளவில் மாபெரும் குரல் தேர்வு திருவிழா!


உலக அளவில் மாபெரும் குரல் தேர்வு திருவிழா!

மேதைகளுக்குச் சமர்ப்பணம் :
மாபெரும் குரல் தேர்வு!

சாய்பாபா பற்றி 
இந்தியாவின் 11  மொழிகளில் உருவாகும் இசை ஆல்பம்!

இசை மேதைகள்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் மற்றும்
பத்ம விபூஷன் Dr.
எஸ்பி பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு சமர்ப்பணம்: பிரம்மாண்ட ஏற்பாடு!


இசைஞானம் ஜாதி பார்த்து வருவதில்லை : இயக்குநர் பேரரசு பேச்சு!

'மேதைகளுக்குச் சமர்ப்பணம்' 
 *Tribute to the Legends* 
 என்கிற 'மாபெரும் குரல் தேடும்' செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 'நெஞ்சில் நீயே ஸாயி' என்கிற ஏழு பாடல்கள் கொண்ட இசை ஆல்பம் இந்தியாவின்  11 மொழிகளில் வெளியாகவுள்ளது.

 ஏற்கெனவே எஸ்.பி. பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடி Sony Music மூலம் தமிழில் வெளியான இசைத் தொகுப்பு மீண்டும் வெளியீடு.. 
தமிழ்நாட்டில் இருந்து தேர்வில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் குரலும்  SPB அவர்களின் குரலும் இணைந்து இசைத் தொகுப்பு மீண்டும் வெளியிடப்படும்.

மற்ற 10 மொழிகளைப் பொறுத்தவரை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் இணையம் வழியே  போட்டியாளர்கள் பங்கேற்க அவர்களைத் தேர்வு செய்து அந்தந்த மொழிகளில் பிரபலமான பாடகர்களுடன் இணைந்து ஆல்பம் உருவாக்கப்படும்.
இந்த வகையில் லட்சக்கணக்கான குரல்கள் இந்தப் போட்டியில் பங்கெடுக்கும்.

இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்துபவர் மும்பையில் வாழும் சேதுமணி ஆனந்தா. இவர் பாடல் ஆசிரியரும் இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார். இவர் ஏராளமான பக்தி இசைப் பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவருக்கு உறுதுணையாக அவரது நண்பரும், திருட்டு இரயில், முத்து நகரம் புகழ் பிரபல இசை அமைப்பாளர் திரு.ஜெயபிரகாஷ் உள்ளார். 

 எஸ் .பி. பாலசுப்பரமண்யம் அவர்களின் 77வது பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சிக்கான இந்த முன்னெடுப்பு பற்றி சேதுமணி ஆனந்தா பேசும்போது,

"எனக்கு எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாது. பாடல் கூட பாடத் தெரியாது. ஆனால் நீ இசையமைப்பாளர் ஆவாய் என்று மெல்லிசை மன்னர் எம்எஸ்வி அவர்கள் என்னை ஆசீர்வாதம் செய்தார். அதனால் நான் இசை உலகில் புகுந்து பக்திப் பாடல்கள் நிறைய வெளியிட்டுள்ளேன். எம் எஸ்வி அவர்கள் எனது  மனிதனாக இரு என்ற திரைப்படதிற்கு  இசையமைத்தார். Dr. எஸ்பிபி அவர்கள் சாயிபாபா மேல் 11 மொழிகளிலும் பாடி நான் எங்களது சேனலான First Chance மூலமாக  வெளியிடுவதாக ஒரு திட்டம் இருந்தது. அதில் முதலில் தமிழில் பாடிக் கொடுத்தார். 

இப்பொழுது  அந்த  இரு மேதைகளுக்கான சமர்ப்பணமாக இந்த இசைத் திட்டத்தை நாங்கள் தொடங்கி Dr.எஸ்பிபி அவர்களின்  77வது பிறந்தநாள் அன்று அவர்களுக்கான சமர்ப்பணமாக இதை வெளியிட ஆவலாக இருக்கிறோம். இதற்கான குரல் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் பாண்டிச்சேரி, திருச்செந்தூர் என 40 இடங்களில் நடைபெறுகிறது. கால் இறுதி, அரையிறுதிப் போட்டிகள் 6 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளன. இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறும்.
இது தமிழ் மொழியை பொறுத்தவரை உள்ள திட்டம். இது தவிர இணையதளத்தின் மூலமாக இந்தியாவின் உள்ள பிற மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி,  சிந்தி, பெங்காலி, போஜ்பூரி என பிற மொழிகளில் இருந்தும் பாடகர்களைத் தேர்வு செய்து அந்தந்த மொழியில் புகழ்பெற்ற பாடகர்களுடன் இணைந்து சாயிபுகழ் பாடும் இசைத் தொகுப்பை  வெளியிடும் திட்டம் உள்ளது .

நூறு ரூபாய் கனவு என்கிற பெயரில் இந்த கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் வரும் வருவாய் ஏராளமான அறக்கட்டளை சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டம் பற்றி மேலும் அறிய பர்ஸ்ட் சான்ஸ் இந்தியா டாட் காம் www.firstchanceindia.com இணையதளத்தில் சென்று  நீங்கள் அனைத்து விவரங்களையும் அறியலாம். பாடும் திறமை உள்ளவர்கள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள எங்களது கமலா ஸ்டுடியோ வந்து பாடியும் தங்கள் திறமையைப் பதிவு செய்யலாம் "என்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு,

"நான் ஒரு முறை அனந்தா அவர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கனவு திட்டம் பற்றிக் கூறியதை அறிந்து வியப்பாக இருந்தது. தமிழ்த் திரை உலகில் எவர் பற்றியும்  எதிர் கருத்துகள் உண்டு. ஆனால் எம் எஸ் வி, எஸ் பி பி என்கிற இரு இசைக் கலைஞர்கள் பற்றி எந்த விதமான எதிர் கருத்துகளும் வந்ததில்லை. அனைவராலும் நேசிக்கப்பட்ட இசைக்கலைஞர்கள் அவர்கள்.  இரு துருவங்களாக இருந்த எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருவருக்கும் எம் எஸ்வி இசையமைத்தார். அதேபோல் எஸ்பிபி அனைவருக்கும் பாடினார். அனைவருடனும் நட்புடன் இருந்தார். அவர்கள் இருவரும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்கள்.

இசை கற்றுக் கொடுத்து வருவதில்லை .இசை ஞானம் வர ஆண்டவன் அருள் வேண்டும். இசைஞானம் உள்ளுக்குள் தானாக வர வேண்டும். 

இசைஞானம் என்பது சாதி பார்த்து வருவதில்லை.எல்லா சாதியினருக்கும் எல்லாமும் வரும். இன்னார்க்கு இன்னது என்பதெல்லாம் உடைபட்டு விட்டது. 

இறைவன் அருள் இருக்கும் அனைவருக்கும் இசை வரும். அப்படி ஒருவராகவே அனந்தாவைப் பார்க்கிறேன் .ஏனென்றால் தனக்கு  எதுவும் இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாது என்றார். ஆனால் அவருக்கு இறைவன் கொடுத்த இசைஞானம் உள்ளது .அவர் இப்படி ஒரு திட்டத்தைச் செய்யும் போது  நம்மால் முடிந்த ஆதரவு தரவேண்டும். அவரை ஆதரிக்க வேண்டும். இந்தப் பணி சிறப்பாக அமைந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என்று பேசினார்.

Saturday, February 25, 2023

மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் " மூர்க்கன் "


மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம்  " மூர்க்கன் "

K. N. பைஜூ  இயக்கி நாயகனாக நடிக்கும்  " மூர்க்கன் "


நவகிரக சினி ஆர்ட்ஸ்  என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " மூர்க்கன் " என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் K.N. பைஜூ எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார்.

மேலும் ரியாஸ்கான், சம்பத்ராம், கன்னட நடிகர் டென்னீஸ் கிருஷ்ணா, மலையாள நடிகர் ஜெயன் சேர்தலா, நாராயணன் குட்டி, விஜயராஜ், கோபிநாத், MJ. ஜேக்கப் மாம்பறா, கேசவ தேவ், அபாபில் ரவி ஆகியோறும் நடிக்கிறார்கள்.

மற்றும் வில்லன் காதபாத்திரத்தில் மூன்று சைனீஸ் நடிகர்கள் நடிக்கின்றார்கள். கதாநாயகியாக நடிக்க ஹிந்தியில் பிரபல நாயகியிடம் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.

ஒழிப்பதிவு  - ராஜாராவ், கலை இயக்குனர் பி சுப்புரமணியம், மேக்கப் K R கதிர்வேல், ஆடை சுகேஷ் தானுர்,
எடிட்டிங் - K N B,
பாடல்கள்  - சிநேகன், தயாரிப்பு நிர்வகம் ஜேக்கப் மாம்பறா,
தயாரிப்பு மேற்பார்வை - R. நாகராஜ்,
மக்கள் தொடர்பு  - மணவை புவன்
தயாரிப்பு - நவகிரக சினி ஆர்ட்ஸ்.

படம் பற்றி இயக்கி, நாயகனாக நடிக்கும் K.N. பைஜூ கூறியதாவது....

இந்த படம் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை.
மலை பிரதேசத்தில் மர்மக் கொலைகள் நடக்கும் இடத்திற்கு நான்கு நண்பர்கள் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் மர்மமான முறையில் சில ஆபத்தான பிரச்சனையில் சிக்கி திரும்பி போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த மர்ம கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்? இறுதியில் நண்பர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.

கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்.
படப்பிடிப்பு குற்றாலாம் மற்றும் பெங்கலூர் ஆகிய இடங்களில் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் K.N. பைஜூ.

" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கௌதம்.


" பகாசூரன் " பட இயக்குனர் மோகன். G க்கு 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கினார்  தயாரிப்பாளர் கௌதம்.


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குனர் மோகன் G  க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இவர்களுடன்  நடிகர் ரிஷி ரிச்சர்ட்  அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !!


இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !! 

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில், வைரலாகும் துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட டீசர் !!    

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது.  இவ்விழாவில் வெளியிடப்பட்ட  டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர். 

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாகவ பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

நடிகர்கள் : 
துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் 

தொழில் நுட்ப குழு 

இயக்கம்: AP அர்ஜுன் 
கதை: ஆக்சன் கிங் அர்ஜுன் 
தயாரிப்பு: உதய் K மேத்தா 
தயாரிப்பு நிறுவனம் : Vasavi Enterprises
தியேட்டர் டீஸர் இசை: ரவி பஸ்ரூர் 
வசனங்கள்: AP அர்ஜுன் 
எழுத்துக் குழு: சுவாமிஜி, கோபி 
இசை: மணி சர்மா 
பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு: ரவி பஸ்ரூர் 
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே 
எடிட்டர்: கே எம் பிரகாஷ் 
மக்கள் தொடர்பு : சதீஷ் ( AIM )

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா


இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா 

'தேஜாவு' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் திரைப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழும் ஆர்கா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். 

அஸ்வின் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, பட தொகுப்பாளராக அருள் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்தம் செயப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 'கிடாரி', 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'முதல் நீ முடிவும் நீ' ஆகிய படங்களில் தனது பாடல்கள் மூலம் முத்திரையை பதித்து இசை ரசிகர்களை தன் வசப்படுத்திய தர்புகா சிவா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் பணியாற்றுவது தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், மேலும் அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பக்கபலமாக அமையுமென்று தயாரிப்பாளர் புகழ் தெரிவித்துள்ளார். 

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, February 24, 2023

SINGLE SHANKARUM SMART PHONE SIMRANUM MOVIE REVIEW

SINGLE SHANKARUM SMARTPHONE

 SIMRANUM MOVIE REVIEW: 





Shankar (Shiva) is an engineering graduate and works as a food deliveryman. A super-intelligent AI smartphone, named Simran, developed by Madhesh (Sha ra) enters Shankar's life. Megha Akash was depicting the AI bot. The phone has all the emotions of a girl. Simran makes a difference in Shankar's life by giving him anything he wants, including money, and a luxurious car, and also helped him with his love for Tulsi (Anju Kurian). 


At one point, Simran begins to fall in love with Shankar despite being just an AI bot smartphone. Shankar refuses to accept her love and claims it's just a phone.
This outraged Simran. She starts to take revenge and creates a lot of trouble for Shankar.


The movie lacks logic in most of the sequences, though this might be possible with the advancement in technology and AI in the future.


Every other actor, including Mano (Shankar's father), Makapa Anand, KPY Bala, and Dhivya Ganesh played their roles very well. 


Single Shankarum Smartphone Simranum is a fantastic choice if you're seeking hilarious amusement with no logic. 

*படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை*


*படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை*

*திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி சிறுகதை*

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.

புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய விளக்கமாக இந்த படம் தயாராகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்,

இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது..

படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.

தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

*'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*


*'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'திறந்திடு சிசேம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் 'வலிமை' ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.  இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். 'துணிவு' விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார். 

டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் காமமும், இளமை குறும்பும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஒரு இளம் பெண், 'துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?' என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் '2k கிட்ஸ்' என்ற டேக்லைன் இணைக்கப்பட்டிருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

https://youtu.be/-kRrofblYco

Wednesday, February 22, 2023

*'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*


*'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*


*செயற்கை நுண்ணறிவை பற்றிய சிந்தனை கொண்ட படைப்பு தான் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்- டாக்டர் பிரபு திலக்*

*லாஜிக் இல்லாத பொழுது போக்கு சினிமா- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் - தயாரிப்பாளர் குமார்*


''கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் சந்திரபாபு போன்ற சிந்திக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்கள் பேசிய வசனங்களை போல், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்' திரைப்படம் உருவாகி இருக்கிறது' என இந்த திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர் பிரபு திலக் தெரிவித்திருக்கிறார்.

லார்க் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் இவர்களுடன் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் கே. குமார் பேசுகையில், '' எங்களுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ‘பாரிஸ் ஜெயராஜ்’. அந்தத் திரைப்படத்தையும் விநியோகஸ்தர் பிரபு திலக் வெளியிட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற இந்த திரைப்படத்தைத் தயாரித்தோம். இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவரை அணுகியபோது, மனமுவந்து ஒப்புக்கொண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிடுகிறார். வெளியீட்டிற்கான நெருக்கடிகள் அனைத்தையும் அவர் எளிதாக்கி, படத்தை வெளியிடுகிறார். அவர் மருத்துவர் என்பதால், எங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை உணர்ந்து, இந்த திரைப்படத்தின் லாப நட்ட கணக்குகளை எதையும் கணக்கிடாமல், நட்பின் காரணமாக உடனடியாக வெளியிட ஒப்புக்கொண்டார். இதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி, எளிதாக கடந்து செல்ல முடியாது. வாழ்க்கையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது யாராவது ஒருவர் கைப்பிடித்து உயர்த்தி விட வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை பிரபு திலக் மூலமாக கிடைத்தது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் படக் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது, நாயகன் மிர்ச்சி சிவா, உற்சாகத்துடன் நம்பிக்கையாக பேசி, ஊக்கமளித்து என்னை அதிலிருந்து மீட்டார். இயக்குநரிடம் கதை கேட்ட பிறகு, மிர்ச்சி சிவா இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் படத்தைத் தொடங்கினோம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க லாஜிக் இல்லாத பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படம் தான். திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் அனைத்து கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

இந்தத் திரைப்படத்தில் பாடகர் மனோ, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடித்திருக்கிறார் என்றாலும், அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம்.. மறைந்த எஸ் பி பி திரையில் நடிக்கும் போது எப்படி உற்சாகமாக இருந்தாரோ.. அதே அளவு ஆற்றலுடன் மனோவும் நடித்திருக்கிறார். நடிகை மேகா ஆகாஷ் இந்த படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார்'' என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். பேசுகையில், '' இது எனக்கு முதல் மேடை இயக்குநராக வாய்ப்பளித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. பொறியியல் பட்டதாரியான பிறகு திரைப்படத்துறையில் பணியாற்ற போகிறேன் என்று சொன்னவுடன் அனுமதித்த  என்னுடைய பெற்றோருக்கும் நன்றி. 2016 ஆம் ஆண்டில் ‘ஐபோன் ஸ்ரீயும் அயனாவரம் ரவியும்’ எனும் பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்த குறும்படம் தான் தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற பெயரில் படமாக தயாராகி இருக்கிறது.‌ இதற்கு முழு முதற் காரணம் தயாரிப்பாளர் குமார். அனைவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் தான் அந்த திறமை வெளிப்படும். அந்த வகையில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த திரைப்படத்தை வெளியிடும் டாக்டர் பிரபு திலக், நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ.. என படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.

பாடகர் மனோ பேசுகையில், '' இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர் மிர்ச்சி சிவா ஆகியோருக்கு நன்றி. ‘சிங்காரவேலன்’ படத்தில் நடித்த பிறகு இசைஞானி இளையராஜா என்னை அழைத்து, 'மீண்டும் நடிக்கச் சென்றால், உனக்காக பாட்டு காத்துக்கொண்டிருக்காது' என சொன்னார். இதற்குப் பிறகு நடிப்பின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் எந்த பாடல் வெற்றி பெறும் என்று தெரியாது. அதன் பிறகு தயாரிப்பாளர் குமாரிடமும், இயக்குனரிடமும் எப்போது நடிக்க முடியும் என்பதனை தெரிவித்து விடுவேன். அதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டு. என்னை நடிக்க வைத்தனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்போது தான் மேடைக் கச்சேரிகளுக்கு வாய்ப்பு வருகிறது. அதனை தவறவிட மாட்டேன் என்று சொன்னவுடன், அதனையும் படக் குழுவினர் புரிந்து கொண்டு, எனக்கு கிடைத்த ஓய்வில் பயன்படுத்திக் கொண்டனர்.

‘சிங்காரவேலன்’ படப்பிடிப்பின் போது ஒரு முறை ஆறு மணி அளவில் கமல்ஹாசன் படப்பிடிப்பிற்கு வருகை தந்திருந்தார். இந்த தகவலை இயக்குநர் உதயகுமார் எனக்கு தெரிவிக்கவில்லை. நான் அதன் போது 15 நிமிடம் தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரும் ‘வணக்கம்’ வைத்தனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றேன். அதேபோல் இந்தப் படத்திலும் குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். இதே பாணியை படத்தின் நாயகனான மிர்ச்சி சிவாவும் பின்பற்றினார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், '' கொரோனா தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கப்பட்ட திரைப்படம் இது. தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் போல் அல்லாமல்  படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, பட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவார்.‌ அவருடைய எளிமைக்கும், நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் இன்னும் கூடுதல் உயரங்களை தொடுவார். அடுத்ததாக இந்த படத்தின் தொடக்க விழாவின் போது வருகை தந்து படக்குழுவினரை விநியோகஸ்தர் பிரபு திலக் வாழ்த்தினார். அதற்குப் பிறகு அவருடன் உரையாடுவதற்கு தற்போது தான் நேரம் கிடைத்தது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு 11:11 என இடம்பெற வைத்திருப்பதற்கும், அதன் மேல் உள்ள இலச்சினைக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை அறிந்து வியந்தேன். அவர் ஆன்மீகம் கலந்த அற்புதமான மனிதர்.

இயக்குநர் விக்னேஷ் ஷா போனில் தொடர்பு கொண்டு கதையை விவரித்தார். உணவை விநியோகிக்கும் ஊழியருக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்று கிடைக்கிறது. அதன் பிறகு அவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது? அவனுக்கு அவன் விரும்பியது அனைத்தும் கிடைக்கிறது. அவனுக்கும், போனுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு ஏற்படுகிறது. அதன் பிறகு அதற்கான தீர்வு என்ன?.. என திரைக்கதை இருக்கிறது. இது புதிதாக இருந்தது.

இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். ‘மேகா ஆகாஷ் நடிக்கிறார்’ என சொன்னார்.  படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, ‘நீங்கள் ஷங்கர் அவர் சிம்ரன்’ என்றார், நானும் சரி என்று, ‘சிம்ரன் எங்கே?’ என்று கேட்டேன். ஒரு போனை கொண்டு வந்து கொடுத்தனர். நான் மேகா ஆகாஷ் நாளைக்கு வருவார் என நினைத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடியும் வரையிலும் மட்டுமல்ல.. இதுவரையிலும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை. சரி இன்றாவது அவர்கள் வருவார்களா..! என எண்ணி வந்தேன். இங்கும் அவர்கள் வரவில்லை.

இந்தத் திரைப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில், ‘சோறு முக்கியம்..’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை படமாக்கும் போது பார்வையாளர்களாக ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். ஏனெனில் நான் முதன்முதலாக இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக நடன இயக்குநர் சாண்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலர் அருகில் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அந்த மாதிரியான நேர்நிலையான அதிர்வை ஏற்படுத்தும் சாதனையாளர் தான் பாடகர் மனோ. இதுவரை இருபத்தாறாயிரம் பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவருடன் நடிக்கும் போது, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அருகில் அமர வைத்து, அவர் பாடிய பாடல்களை பாடுமாறு கேட்பேன். அவரும் சலிக்காமல் பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்துவார். இதன் தொடர்ச்சியாக அவர் அவருடைய வீட்டிலிருந்து மதிய உணவை வரவழைத்து பட குழுவினருக்கு வழங்கி அவருடைய விருந்தோம்பலை வெளிப்படுத்துவார். இதற்காகவே அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானும் அவருடன் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாம் அனைவரும் தவறவிட்ட குழந்தைத்தனத்தை அவர் இந்த திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். '' என்றார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டாக்டர்   பிரபு திலக் பேசுகையில், ''  திரைப்படங்கள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விவாதித்திருக்கிறேன். ‘ரோட்டி கபடா மக்கன்.. உண்ண உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்.' இந்த மூன்றும் இருந்தால் மனித வாழ்க்கை நிறைவு பெறுகிறது என்றொரு தத்துவம் இருக்கிறது. இது அனைத்து மக்களிடத்திலும் பொதுவான நம்பிக்கையாக இருந்தாலும், இதையும் கடந்து ஒரு சமுதாய அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்காக நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நமக்குள் எவ்வளவு அழுத்தங்களும்.. நெருக்கடிகளும்.. உண்டாகின்றன என்பது குறித்தும் மிர்ச்சி சிவாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். 

ஒரு சிறிய அடையாளத்திற்காக அல்லது நம்முடைய இலக்கை அடைவதற்காக.. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் பல வகையிலான ஓட்டங்களை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். ஒரு மருத்துவராக இது குறித்து  என்னிடம் சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளிடம் பேசும் போது.. ‘ஐம்பது வயது வரையிலும் நாம் நிறைய ஓடுகிறோம். எந்த துறையினராக இருந்தாலும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டத்தின் போது நாம் நம்முடைய ஆரோக்கியத்தை தவற விட்டு விடுகிறோம். ஆனால் ஐம்பது வயதிற்கு பிறகு, ஒரு மருத்துவரை தேடி, சந்தித்து, அவருக்கு இழந்த ஆரோக்கியத்தை மீட்பதற்காக கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தை நிறுத்துவதற்கு தேவையான விசயம் தான் நகைச்சுவை எனும் உணர்வு. நகைச்சுவை என்ற உணர்வு இல்லாத போது வாழ்க்கை வற்றி விடுகிறது.’ என குறிப்பிடுவேன். 

பெர்னட் ரஸ்ஸல் எனும் உளவியல் தத்துவ மேதை,“ரோட்டி கபடா. மக்கன் ஆகிய மூன்றையும் கடந்து  கிடைக்கும் சமூக அங்கீகாரம் தான் மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம்” என குறிப்பிடுகிறார். தற்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். தயாரிப்பாளர் குமார் படத்தை தயாரித்திருக்கிறார். விக்னேஷ் இயக்கி இருக்கிறார். சிவா நடித்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இவை அனைத்தின் பின்னணியிலும் ஏதோ ஒரு காரணம் இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருந்தால்.. நாம் அனைவரும் இயந்திரம் அல்ல.. இதனை இழுத்து பிடித்து நிறுத்த ஒரு அழகான உணர்வு தேவைப்படுகிறது. அந்த அழகான உணர்வும், நகைச்சுவையும் இந்தத் திரைப்படம் உங்களுக்கு வழங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதற்காகத்தான் எங்கள் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். இங்கு தயாரிப்பாளர் பேசுகையில் ‘லாஜிக் தேவையில்லை’ என குறிப்பிட்டார். உண்மையில் சில விசயங்களுக்கு லாஜிக் தேவையில்லை.

தமிழ் சினிமா ஆக சிறந்த நகைச்சுவை கலைஞர்களை நமக்கு அளித்திருக்கிறது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தொடங்கி சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் .. முதல் தற்போது வரை நிறைய நகைச்சுவை கலைஞர்களை வழங்கி இருக்கிறது. இவர்கள் அனைவருக்கும் ஃபோர்தாட் எனப்படும் எதிர்காலம் குறித்த சிந்தனை இருந்தது. அதாவது மன அழுத்தத்தை உடைப்பது மட்டுமே நகைச்சுவை கலைஞர்களின் பணி அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறேன். என். எஸ். கே, 50- 60களில் அவர் நடித்த படங்களில்.. ஒரு தீர்க்கதரிசியை போல் நிறைய விசயங்களைச் சொல்லியிருக்கிறார். எதிர்காலத்தை கணித்து சில விசயங்களை அவர் பேசியிருக்கிறார். அவர் ஒரு படத்தில் 'பட்டனை தட்டினால் சட்டினியும் இட்டிலியும் தட்டுல வந்து விழும்' என ஒரு பாடலை அவர் எழுதிப் பாடியிருக்கிறார். அது போல் தற்போது நடக்கிறது அல்லவா..!! சந்திரபாபு, “புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என பாடியிருப்பார். இந்த பாடல் நம்முடைய வாழ்வில் ஏதேனும் ஒரு தருணத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மறைந்த சோ, எஸ் வி சேகர் போன்ற நாடக கலைஞர்கள் அரசியல் ரீதியான கேலி கேள்விகள் மூலம் நமக்குள் அரசியலை உணர்த்தியிருக்கிறார்கள். ஏராளமான சிந்தனையாளர்கள், தங்களுடைய நகைச்சுவையின் மூலம் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

பின்னணி பாடகர் மனோவுடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருப்பது, கடவுள் எனக்களித்த ஆசீர்வாதமாக கருதுகிறேன். இந்த ‘டபுள் எஸ் டபுள் எஸ்’ படத்தில் எதிர்காலம் குறித்த சிந்தனை இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து சிந்தித்திருக்கிறார். இன்றைய சூழலில் நாம் மனிதர்களுடன் பழகுவதற்கு எவ்வளவு தயங்குகிறோம். இந்த திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த விசயத்தை ஆடம்பரமான ஜோடனைகள் எதுவுமில்லாமல்.. யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்கு பின்னணியில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஏராளமானவர்களின் உழைப்பு இருக்கிறது. அதனால் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

Monday, February 20, 2023

*வேகமாக வளர்ந்து வரும் 'எல். ஜி. எம்'*


*வேகமாக வளர்ந்து வரும் 'எல். ஜி. எம்'*

*விரைவான படப்பிடிப்பில் 'எல். ஜி. எம்'*

தமிழ் திரைப்படமான 'எல்.ஜி. எம்'மின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி வேகமாக நடைபெற்று வருவதாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி திருமதி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான டோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் 'எல். ஜி. எம்' (லெட்ஸ் கெட் மேரீட்) எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட வேகமாக நடைபெற்று  வருகிறது.

அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் வணிகப் பிரிவின் தலைவர் விகாஸ் ஹசிஜா பேசுகையில்,'' எல். ஜி. எம் திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழில் தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் இது. மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம் என நம்புகிறோம். அனைத்து தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள இந்திய பார்வையாளர்களையும் சென்றடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதற்கேற்ப 'எல் ஜி எம்' படம் அமைந்துள்ளது.'' என்றார்.

தோனி என்டர்டெய்ன்மென்ட்ஸின் படைப்புத்திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷூ சோப்ரா பேசுகையில், '' எல்.ஜி.எம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகம் மற்றும் படம் தயாராகும் பாணி ஆகிய இரண்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திருமதி சாக்ஷி தோனியின் கருத்தாக்கத்தை ரமேஷ் தமிழ்மணி நேரடியான பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைக்கதையாக மாற்றினார். இந்த திரைக்கதை கவர்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு படைப்பாக மாற்றம் பெறுவதை உடனிருந்து காண்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த திரைப்படம் திட்டமிட்டபடி.., சரியான நேரத்தில் சிறப்பாக நிறைவடையும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.'' என்றார்

“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !!


“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா !! 
Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இவ்விழாவினில் 

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“

இயக்குநர் ஹரி பேசியதாவது..,
“படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். “

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன் பேசியதாவது..,
“இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசியதாவது..,
“காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.  

நடிகர் அஜ்மல் பேசியதாவது..,

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

துஷ்யந்த் பேசியதாவது..,
“ இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். “ 

இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,
“இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இயக்குநர் LR சுந்தரபாண்டி பேசியதாவது..,
பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Saturday, February 18, 2023

Bakasuran Movie Review:

 

Bakasuran Movie Review:

 


In the direction of Mohan G “Bakasuran” is about a social cause based on women’s rights.  Bakasuran - a giant character in the Mahabharata, the predominant director, screenwriter, and actor Selvaraghavan plays a vital role. The director Mohan G’always engages the audience with recrimination, and aggressive emotions based on nail-biter scripts and analytical stories. Bakasuran swallows the outlawed creature in society.

 

The story engages with Arul varman’s (Natarajan Subramaniam) niece suddenly sets suicide in a fuzzy manner after the investigation gets over and the case was getting closed, Arul Varman explores his niece’s mobile, which is explicit about her suicide and that she had been forced to engage in illicit activities of whoredom even she was brutally abused by the men. The next track was Selvaraghavan’s mysterious story joins the hand with Arul Varman both were viciously hunting the Bakasurus.  

 

Mohan G’s direction made vibrant to the screenplay, and which sequences feel like plight situations. Natarajan Subramaniam and Selvaraghavan’s performances are tending to be different and develop in distinctive directions.

 

 

 

 

அமீர் இயக்கத்தில், முதல் படமாக கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் #பருத்திவீரன்.


அனைவருக்கும் வணக்கம்!

அமீர் இயக்கத்தில், முதல் படமாக கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் #பருத்திவீரன். 

இத் திரைப்படம் வெளியாகி 16 வருடம் நிறைவடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக நடிகர்  கார்த்தி ரசிகர்கள் சார்பில் நாளை 19ம் தேதி, பாடி Green cinemas திரையரங்கில் காலை 8 மணியளவில் பருத்திவீரன் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 
இந்த கொண்டாடத்தை வந்திருந்து நியூஸ் சேகரிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 
அத்தோடு தாங்கள் படம் பார்க்க விரும்பினால் தங்கள் வருகையெய்  உறுதி செய்தால் டிக்கெட் ரிசர்வ் செய்ய உதவியாக இருக்கும்.

நன்றி!
- ஜான்சன்

Friday, February 17, 2023

Virginia Tech sets up Research and Learning Centre at IIT Madras Research Park for collaborating India with the United States to carry out world-required research jointly on various platforms.

Virginia Tech sets up Research and Learning Centre at IIT Madras Research Park for collaborating India with the United States to carry out world-required research jointly on various platforms. 


CHENNAI: A collaborative research and learning centre has been set up at the Indian Institute of Technology Madras Research Park by leading  tier-one research institute Virginia Polytechnic and State University (Virginia Tech) headquartered in the United States of America.

Virginia Technology has multiple locations across India for research and education. The opening of the VT India Centre at IIT Madras Research Park depicts the
university's commitment to collaborate with other leading research entities around the world.

A leadership team from Virginia Tech led by professor Cyril Clarke,  Executive Vice President and Provost; Dr Guru Ghosh, Vice President for Outreach and International Affairs; Professor Azim Eskandrian, Nicholas and Rebecca Des Champs Chair/Professor, Department  Head of Mechanical Engineering, professor Dan Sui Senior Vice President, Chief Research and Innovation Officer, Professor Aimee Suprenant, Dean, Virginia Tech Graduation School; Professor Vishwanath Venkatesh, Eminent Scholar and Verizon Chair of Business Information Technology Director.

Virginia Tech has been preparing scholars to be international leaders and problem-solvers since its inception in 1872. The university offers more than 280 majors to a
diverse enrollment of more than 36,000 undergraduate, graduate, and professional students in eight undergraduate colleges, a school of medicine, a veterinary medicine college, Graduate School, and Honors College. Committed to enhancing the quality of life throughout the world, Virginia Tech is also a leading global research institution that conducts more than $530 million in research annually. The university boasts world-class research institutes and facilities around the world dedicated to supporting research, technology commercialization, collaborations with corporate research partners, and entrepreneurial ventures.

VT India is part of the international reach of Virginia Tech – providing access to research, education, and innovation opportunities to American and Indian partnerships. VT India has a presence in Chennai and Patiala and partnerships with TOPRE, NMIMS, and IIT stretching from Kolkata to Mumbai. VT India’s activities  envelop research, advanced education, and outreach. The research focus broadly  envelops advanced functional materials, autonomous systems and healthcare technologies. More specifically, faculty, students, and post-doctoral researchers are studying electronic materials, water, energy, robotics and wearable devices.

Throughout all of its locations and through all of its partnerships, VT India explores fundamental science with the goal of propelling research and future applications of advanced materials. The significant thrust by Government of India in the broad area of health care and associated technological interventions has motivated VT India in foraying into research and innovation in health care challenges.

Outreach and International Affairs is a division of Virginia Tech that is charged with building cross-sectoral partnerships, providing professional development programs, and developing community engagement initiatives across the world.OIA is a spearhead for the university’s international mission to enrich the global community through research, discovery, and student learning.

Through strategic partnerships around the world, OIA connects Virginia Tech’s faculty, staff, and students to opportunities for learning more about complex societal challenges and for helping to improve the quality of life for people throughout the world.

Later speaking to the press, Cyril Clark ,Executive Vice President, Virginia Tech University said that Virginia Tech University is not only doing education but also doing high quality research. He mentioned that we have tied up with IIT Madras as this international university needs quality alliances in the right places.

Professor Vishwanath Venkatesh,  Verizon Chair of Business Information Technology Director.said that Virginia Tech University, USA, with its 150-year heritage, is one of the top 20 research institutes in the world, has moved its research center to IIT in Asia. He said that it has started in collaboration with Madras. Through this, the United States and India should jointly carry out researches needed by the world on various platforms, he said.
IIT Madras Research Park India’s first university-based research park, IIT Madras Research, epitomizes what can be achieved by a confluence of bringing unlike minds together. It has become a paradigm for innovation ecosystems across geographical boundaries. Five individual towers interconnected by skywalks situated on 11.42 acres, provide over 1.2 million square feet of workspace with several formal, informal, theme-based meeting and networking lounges. Aptly named, the Industry-Academia Bridge links IITMRP to IIT Madras – a globally renowned Technology Institute.

ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !!


ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !!

இந்தியாவின் முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி”  இணையத் தொடர் பெரும்  பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ்  ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். 

Senior Vice President   ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது...
"அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு  நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம். ஒட்டு மொத்த அயலி குழுவிற்கும் எனது பாராட்டுகள்."


Associate Director,  Original Content, ZEE5 Tamil  ஷியாம் திருமலை  பேசியதாவது...

“அயலியை நாங்கள் எப்படித் தேர்வு செய்தோம் என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இப்படி ஒரு அருமையான ப்ராஜெக்ட்டை மிஸ் செய்திருந்தால் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டிருப்போம்  என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை நல்ல தொடரைப் பிரமாண்ட வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு எனது நன்றிகள்.”


Estrella Stories தயாரிப்பாளர் குஷ்மாவதி, பேசுகையில்.., 
“அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகள் மற்றும் ஊடகத் துறையினர் அனைவருக்கும் நன்றி. ‘அயலி’ வெளியீட்டின் போது, ​​ஜீ5 இல் இது ஒரு முத்திரை பதிக்கும் தொடராக இருக்கும் என்று கூறியிருந்தோம். இன்று, அயலி அதை நிரூபித்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியும், பெருமையும்,  அடைகிறேன். இப்படி ஒரு படைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய ஜீ5 க்கு நன்றி. அருமையான தொடரை உருவாக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கு நன்றி” என்றார்.

நடிகை தாரா  பேசுகையில்.., 
“அயலி போன்ற ஒரு நல்ல படைப்பில்  நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், ஜீ5 குழுவினருக்கும் நன்றி. இந்த தொடர்  எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது" என்றார்.


நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில், 
“எனது கதாபாத்திரம் பார்த்தவர்களின்  தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும்  மகிழ்ச்சியைத் தந்தது. அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.  இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.


நடிகர் பிரகதீஸ்வரன் பேசுகையில், 

"அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி. இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்'' என்றார்.

நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசுகையில், 
“ 'அயலி' தொடரை  வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. இத்தொடரைப் பார்த்தவர்கள் இதனுடன் நன்றாக ஒன்ற  முடிந்தது எனக்கூறினார்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி. இந்த படைப்பில்  நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல  தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்'' என்றார்.

எழுத்தாளர் சச்சின் கூறியதாவது,
''ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது, எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது, ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில், 
“விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த  வரவேற்பு பெரும்  மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அயலிக்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான்  இந்த தொடரின்  வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற  வாய்ப்பை வழங்கிய ஜீ5  இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி'' என்றார்.

நடிகை காயத்ரி பேசுகையில், 
“ அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில்  பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி'' என்றார்.

நடிகர் லிங்கா பேசுகையில், “அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி'' என்றார்.



நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில், 
''இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி'' என்றார்.

நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது,
''என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும்  நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி'' என்றார்.


நடிகர் சிங்கம்புலி கூறியதாவது,
"அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி. என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்'' என்றார்.


இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது,
''இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்'' என்றார்.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...