Tuesday, July 30, 2024

“அபர்ணதி அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்




“எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்” ; புது தயாரிப்பாளர்களுக்கு சுரேஷ் காமாட்சி அறிவுரை

தன்னுடைய பட விழாவிற்கு வருவதற்கே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பணம் கேட்ட நாற்கரப்போர் நாயகி அபர்ணதி

“இங்கே இசையிலும் இனவெறி இருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில்  இயக்குநர் யுரேகா பேச்சு 

“எந்த தியேட்டரில் எந்த படம் ஓடவேண்டும் என்பதில் கூட பாகுபாடு காட்டுகிறார்கள்” ; நாற்கரப்போர் விழாவில் நடிகர் கவிதா பாரதி வேதனை 



“கடந்த பத்து வருடங்களில் விளையாட்டுத்துறை வளர்ந்திருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் நடிகை நமீதா பெருமிதம் 

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார். 

குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.

இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 



பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி கே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.. வரும் ஆகஸ்ட்-9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “ இந்த கதையை நம்பிக்கையுடன் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் வேலாயுதம் அவர்களுக்கு நன்றி. படம் முடிவடைந்ததும் இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதில் இணைந்ததுமே திருப்தியும் சந்தோசமும் ஏற்பட்டது. இந்த படத்திற்குள் நான் வந்ததற்கு காரணம் கலை இயக்குனர் ராகவன் தான். நான் கேட்ட சம்பளம் காரணமாக இந்த படத்தில் நடிப்பதற்கு இழுபறி ஏற்பட்ட நிலையில் இது துப்புரவு பணியாளர்கள் பற்றிய கதை என ராகவன் கூறியதும் மறு பேச்சின்றி இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது முக்கியமான படம் பயங்கரமாக அரசியல் பற்றி பேசி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது, “விளையாட்டை மட்டும்தான் இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டு. இன்னொன்று மூளை சார்ந்தது. உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டில் உலகம் முழுவதும் உள்ள கருப்பின மக்கள் தான் சாதனை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உடல் உறுதியாக இருப்பவனுக்கு மூளை இருக்காது என்கிற தப்பான ஒரு எண்ணத்தை இங்கே உள்ள ஒரு கூட்டம்  தொடர்ந்து நம்ப வைத்துக்கொண்டே இருக்கிறது. விளையாட்டு மட்டுமல்ல சமீப காலமாக கவனித்துப் பார்த்தால் கிரிக்கெட், புட்பால் வர்ணனை செய்வதில் கூட ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்கிறது. அதில் கூட சாதி ஆதிக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கும் மூளை இருக்கிறது என்று ஒரு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சிறுவனை கொண்டு வந்து இந்த படத்தை எடுத்திருப்பது ஜனரஞ்சகமாக இருக்கிறது” என கூறினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பொருத்தவரை அவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. அவருக்கு மிகப்பெரிய நட்சத்திரங்கள் கூட கால்சீட் கொடுக்க முன் வரும் நிலையில் அவர் இயக்கிய மிக மிக அவசரம் படமாகட்டும் அல்லது இப்போது வெளியிட இருக்கும் இந்த படமாகட்டும் லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்று தான் பார்க்கிறார். நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாகத்தான் எல்லோருக்கும் முதலில் அறிமுகமாகி இருக்கிறேன். எப்போது வெற்றி பெற்றாலும் மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றுதான் என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பார். நிறைய மறுவாழ்வு முகாம்களில் சென்று பார்க்கும் போது மனதில் நிறைய வலி ஏற்படும். அவங்களும் நம்மைப் போலவே கடின உழைப்பை கொடுக்கிறார்கள். நம்மைப் போலவே அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் திரும்பவும் அவர்கள் வீடு திரும்ப முடியுமா ? திரும்பவும் அவர்களால் பழைய வாழ்க்கை வாழ முடியுமா என நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்றால் அது கல்வி மற்றும் விளையாட்டு மட்டும்தான் அவர்களுக்கும் விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது அவர்களும் மேலே வர முடியும். சுரேஷ் மேனன் சாருடன் நான் மலையாள படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அவர் நடித்திருப்பது மிகப்பெரிய பலம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நடிகர் கவிதா பாரதி பேசும்போது, “இந்த படத்தின் நோக்கம் மற்றும் கதை குறித்து படத்தின் இயக்குநர் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில் மேடை ஏற்றி அழைத்துப் பேச வைத்த பலரும் ‘கருப்பு காய்’களாக இருந்தார்கள் என்பது நான் ரொம்பவே பெருமைப்படும் விஷயம். இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பது மட்டுமல்ல. இதில் யார் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது கூட  எனக்கு பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்த படத்தை வெளியிடுகிறாரோ அது நல்ல ஆழமான கருத்துள்ள படம் என்பது அடையாளமாகி விட்டது. யார் என்ன படிக்க வேண்டும், என்ன பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சமூகத்தில் எப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்து வருகிறதோ திரைப்படத்திற்குள்ளும் அப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஓடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களை பற்றி யார் யாரெல்லாம் பேசலாம் என்பதற்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கிறது. பேலசோ தியேட்டரில் எந்த படம் போட வேண்டும் காசி தியேட்டரில் எந்த படம் ஓட வேண்டும் என்பதில் கூட ஒரு பாகுபாடு இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு நம்முடைய கருப்பு காய்கள் நீண்ட நெடிய போராட்டத்தில் நடத்தி வந்திருக்கிறார்கள். நான் விஜய் டிவிக்காக சலனம் என்கிற ஒரு தொடரை இயக்கிய போது அதில் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் லிங்கேஷ். அவர் பெரிய இயக்குனராக வருவார் என்று நினைத்தேன்.. நடிகராக மாறிவிட்டார்” இன்று கூறினார்.

நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது, ‘மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து படம் பண்ணக்கூடிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போன்ற ஒருவர், ஒரு படத்தை பார்த்துவிட்டு எப்போது அதை வெளியிட முன் வருகிறாரோ அப்போதே இந்த படம்  வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். சுரேஷ் காமாட்சி போன்ற வர்த்தகம் தெரிந்த நிறைய தயாரிப்பாளர்கள் இதுபோன்று படங்களை வெளியிட முன்வர வேண்டும்” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, “தமிழ் ரசிகர்களுக்கு சினிமா என்றால் பொழுதுபோக்கு, அதன் கூடவே ஒரு சமூகத்திற்கு தேவையான செய்தி இருந்தால் போதுமானது. அதற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட், மிகப்பெரிய இசையமைப்பாளர் என எதையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. நம் நாட்டில் இப்போது விளையாட்டு துறையில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு கபில்தேவ், சச்சின், சானியா மிர்சா என்று சில ஆட்கள் தான் பிரபலமாக இருந்தார்கள். இந்த பத்து வருடங்களில் தான் நிறைய வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் ஒரு பெண் தங்க மெடல் பெற்று தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பெருமையாக பிரக்யானந்தா செஸ் சாம்பியன் ஆக ஜொலிக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு இப்போது நிறைய நம்பிக்கை இருக்கிறது. பலன்கள் கிடைக்கிறது. உங்கள் வீட்டில், உங்கள் சுற்று வட்டத்தில் ஒரு குழந்தைக்கு விளையாட்டு ஆர்வம் இருக்கிறது என்றால் நிச்சயமாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும், விளையாட்டு ஒருவரை மிகவும் ஒழுக்கமானவராக மாற்றுகிறது, அதன் பிறகு வாழ்க்கையில் எல்லாமே எளிதாக வந்துவிடும், தயவுசெய்து அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களது வலது பக்க பாக்கெட்டில் மொபைல் ஃபோனை வைக்காதீர்கள், அதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்று கூறினார்.

இயக்குநர் அமுதகானம் ஆதவன் பேசும்போது, ‘நாற்கரப்போர் என இந்த டைட்டிலிலேயே ஒரு போராட்டம் தெரிந்தாலும் இந்த படத்தை தயாரிப்பதிலோ அல்லது இதை வெளியிடுவதிலோ எந்த போராட்டமும் இருக்கவில்லை என்று சொல்லலாம். நானும் ஒரு இயக்குநராக பல படங்களை இயக்கியுள்ளேன். அவை வெற்றி தோல்வி என்பதைவிட அவற்றையெல்லாம் ரிலீஸ் செய்துள்ளேன் என்பது தான் முக்கியம். ரிலீஸ் சமயத்தில் ஒவ்வொரு காலகட்டமும் சினிமாவில் போராட்டம் தான். இந்த படத்திற்கு மிகப்பெரிய யோகம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வடிவில் வந்திருக்கிறது. இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான படம் என்கிற பெயரில் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் அதை உடைத்து எறியும் விதமாக இந்த நாற்கரப்போர் வருகிறது” என்று கூறினார்.

இயக்குநர் யுரேகா பேசும்போது, ‘மிக நுட்பமான சிறப்பான அரசியலை பேசும் ஒரு படமாக இந்த நாற்கரப்போர் இருக்கும் என நான் பார்க்கிறேன். நாற்கரப்போர் என்கிற தலைப்பு என்னை சற்று சிந்திக்க வைத்தது. விளையாட்டில் மட்டுமல்ல இசையிலும் கூட இனவெறி இருக்கிறது. பியானோவில் கூட கருப்பு வெள்ளை கட்டை இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எதையெல்லாம் உருவாக்கினார்களோ தங்களை முன்னிறுத்தி தான் எல்லா சாதனங்களையும் உருவாக்கினார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. துப்புரவு தொழிலாளர்களை முன்னிறுத்தி இந்த விளையாட்டுடன் இணைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. குப்பை போடும் நாம்தான் குப்பைக்காரர்கள்.. அதை துப்புரவு செய்யும் நபர்கள் சுத்தக்காரர்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அஸ்வின் திரையில் மட்டுமல்ல தரையிலும் இன்னும் எமோஷனலாககவே இருக்கிறான் என்றால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்ந்து அவன் நடிப்பதற்கு காரணமான இயக்குநர் தான். இந்த படம் தேசிய விருதுக்கான திரைப்படம். அப்படி இந்த படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றால் தேர்வுக்குழுவில் ஏதோ குழப்பம் என்று தான் அர்த்தம்” என கூறினார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “நாற்கரப்போர் என தமிழில் பெயர் வைத்ததற்கு நன்றி. தமிழில் பெயர் வைக்க மாட்டோம் என பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இங்கே முதல் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. ஆனாலும் முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்ட படமாக இதை எடுத்து இருக்கிறார்கள். சாராயக்கடை அருகிலேயே இருக்கும் இளநீர் கடைக்கும் ஒரு வியாபாரம் உண்டு என்பது போல, இங்கே எல்லா படைப்புகளுக்கும் ஒரு வியாபாரம் இருக்கிறது. எளிய மனிதர்கள் குறித்து வரக்கூடிய படங்களுக்கு இப்போது நல்ல கமர்சியல் வேல்யூ இருக்கிறது. சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்கள் அபூர்வமானவர்கள். இந்த படத்தை அவர் வெளியிடுவதை வெற்றியாக பார்க்கிறேன். மற்ற திரையுலகங்களில் பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு இணையாக சின்ன படங்களும் வெளியாகும்  ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ் திரை உலகில் அப்படி இல்லை.  தேசிய விருது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். மக்கள் தரும் விருதுதான் முக்கியம்” என்றார்

இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படம் சின்ன படமாக இருந்தாலும் அதுதான் அதிக லாபத்தை கொடுத்த படம் என்று சொல்வார். அப்படி அதிக லாபத்தை கொடுக்கும் படம் பெரிய படம் ஆகிவிடுகிறது. அந்த வகையில் இந்த நாற்கரப்போர் படம் மிகப்பெரிய லாபகரமாக அமைய வேண்டும். சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அசாதாரண வாழ்க்கை தான் கிடைக்கும். இந்த உலகத்தில் ஏழைகள் தான் அதிகம் இருக்கின்றனர். அவர்களை முன்னேற விடமாட்டார்கள். தாங்களாகவே முன்னேறினால் தான் உண்டு. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு தான் கடவுள்கள் பாடுபட்டார்கள் என்றாலும் இப்போதும் அவர்கள் ஊரிலேயே இன்னும் ஏழைகள் தானே இருக்கிறார்கள். தனி மனிதனாக பார்த்து தான் முன்னேற வேண்டும். இங்கே பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பணத்தை சேர்த்து வைத்து அவர்களை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி அல்ல.. அங்கே பணக்காரர்கள் பிள்ளைகளை விட இந்த சமூகத்திற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குகிறார்கள். அப்போதுதான் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கருப்பு வெள்ளை என இனியும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கள்ளுண்ணாமை என 3000 வருடத்திற்கு முன்பே எழுதியிருப்பதால் அப்போதிருந்தே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது பார் சீன் வைத்து விட்டார்கள் என கத்துகிறார்கள். ஒரு படைப்பு என்பது அந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம்.. நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. அதனால் விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்..

இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகை அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் பிரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து இது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாத கோமல் சர்மா, நமீதா ஆகியோரே முன்வந்து கலந்து கொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ?

என்னைப் பொருத்தவரை ஒரு படம் பிடித்தது என்றால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனசுக்குள் தோன்றும். கதையுடன் கூடிய கருத்தும் இருக்க வேண்டும். சமீபத்தில் கூட இயக்குநர் மீரா கதிரவானின் ஒரு படம் பார்த்தேன். இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாற்கரப்போரில் பேசப்பட்டிருக்கக் கூடிய அரசியல் எனக்கு பிடித்திருக்கிறது. என்னுடைய மிக மிக அவசரம் படத்தில் யாரும் தொடாத ஒரு விஷயத்தை சொன்னது போல இதிலும் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இயக்குனர் தொட்டிருக்கிறார்.

நான் எப்போதுமே பத்திரிக்கையாளர்களுடன் நெருங்கி அண்ணன் தம்பியாக பழகக் கூடியவன். ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் என்னுடைய வணங்கான் படத்தை பற்றி தொடர்ந்து தவறான விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் பாலாவிற்கும் பிரச்சனை, அதுவும் பணத்தினால் என்று சொல்கிறார்கள். அவர்களே இப்போது இந்த விழாவிற்கு நான் கிளம்பும் முன் ஒரு பேட்டிக்காக என்னிடம் வந்தார்கள்.. எழுதி வைத்துக்கொண்ட அமெச்சூர்தனமான கேள்விகளை கேட்டார்கள். இறுதியில் பாலாவை வைத்து படம் எடுத்து அனைவருமே தெருவுக்கு வந்து விட்டார்கள்.. நீங்கள் எப்போது தெருவுக்கு வரப் போகிறீர்கள் என நேரடியாக கேட்டார்கள். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நேரத்தில் கூட அந்த கேள்விதான் என் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே அது எங்களை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.

*சிதேஷ் சி கோவிந்தின் கன்னட படம்; ஜியோ பேபியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.*



கேரள மாநிலத்தின் பிராந்திய சினிமாக்களில் அற்புதமான படைப்பாளர் ஜியோ பேபி வழங்கும் சிதேஷ் சி கோவிந்த்  இயக்கத்தில்
 " இது எந்த லோகவாய்யா" படம் வருகின்ற ஆகஸ்ட 9 தேதி வெளியாக இருக்கின்றது.
இது எந்த லோகவய்யா திரைப்படம் கன்னடமொழியில் வெளிவர இருக்கின்றது. ஏற்கனவே, மலையாள சினிமாவில் ஜியோ பேபி இயக்கத்தில் தி கேரட் இந்தியா கிட்சன் மற்றும் தி காதல் கோர் போன்ற படங்கள் விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் பலத்தப் பாராட்டுகளைப் பெற்றன. அதோடு நின்று விடாமல், ஜியோ பேபி  " இது எந்த லோகவய்யா" படத்தை வழங்குகிறார். கன்னட சினிமாவிலும்  முத்திரைப் பதிக்க இருக்கின்றார். 
"இது எந்த லோகவய்யா" என்னும் படத்தின் கதையானது, நையாண்டி நாடகப் பாங்கினைக் கொண்டுள்ளது.  
கன்னடம், மலையாளம், துளு, கொங்கனி மற்றும் பேரி மொழிகளின் தனித்துவமான கலவையை இந்தப் படம் கொண்டுள்ளது, இது எல்லைப் பகுதியின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.  இதைப் பிரதிபலிக்கும் வகையில், திரைப்படத்தின் பாடல்கள் பல மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் நம்பகத்தன்மையையும் கவர்ச்சியையும் சேர்க்கின்றன.
 இந்த அரிய ஹைப்பர்லிங்க் நாடகம், ஒரு கருப்பு பூனை பல குடும்பங்களின் பாதைகளைக் கடப்பதில் தொடங்குகிறது, உள்ளூர் மூடநம்பிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒரு சங்கிலித் தொடர்பை ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. 

கேராள- கர்நாடக பகுதிகளில் வாழும் மக்களின்  தனித்துவமான பண்புகளையும், நுணுக்கமான சமூக வர்ணனையும் கூடிய கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிதேஷ் சி கோவிந்த் . ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் முழுவதிலும் படம் வெளியாக இருக்கின்ற தகவல் பரவியுள்ளது.
.

Monday, July 29, 2024

*ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !*



பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியப் படமான 'தி ராஜா சாப்' படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக,  தயாரிப்பாளர்கள் ஒரு அருமையான க்ளிம்ப்ஸ்  வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த க்ளிம்ப்ஸ்ல் அசத்தலான விண்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். 

'தி ராஜா சாப்' திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ள, க்ளிம்ப்ஸ் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விண்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமாண்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்க தயாராக இருக்கிறார். மாருதி பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.  இது திரைப்பட ஆர்வலர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் மற்றொரு பிரமாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார், ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலமன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றனர். பாகுபலி புகழ் கமலகண்ணன் ஆர்.சி. VFX பணிகளைக் கவனிக்கிறார். மிக சிறப்பான தொழில்நுட்பக் குழு  ஒரு புதுமையான, தரமான சினிமா அனுபவத்தை உறுதி செய்கிறது. 

மாருதி இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் சார்பில் விஸ்வ பிரசாத் தயாரிக்கும்,  “தி ராஜா சாப்” திரைப்படம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமான ‘பிரதி ரோஜு பாண்டேஜ்’, முதல் தெலுங்கு ஹாரர் காமெடி படமான ‘பிரேம கதா சித்ரம்’ மற்றும் காதல் நகைச்சுவை படமான ‘மஹானுபாவுடு’ போன்ற சூப்பர்ஹிட்கள் மூலம் புகழ் பெற்ற மாருதி, பிரபாஸுடன் இணைந்து, மீண்டும் ஒரு அட்டகாசமான படத்துடன் வருகிறார். 

‘கார்த்திகேயா 2’ மற்றும் ‘தமக்கா’ போன்ற சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களை வழங்கிய  தெலுங்குத் துறையில், முன்னணித் தயாரிப்பாளரான டிஜி விஸ்வ பிரசாத் இந்தத் திரைப்படத்தை, பெரும் உற்சாகத்துடன் தயாரித்து வருகிறார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் இதுவரை இல்லாத அளவிலான  பிரம்மாண்டமான படமாக  “ராஜா சாப்” படம் தயாராகி வருகிறது.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி பற்றி: மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரியை தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் நிறுவினார், இந்நிறுவனத்தின் சார்பில் முன்மாதிரியான பல திரைப்படங்களைத் தயாரித்து, வழங்கி வருகிறார். 


தொழில்நுட்பக்குழு

படத்தொகுப்பு - கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் 
ஒளிப்பதிவு - கார்த்திக் பழனி 
இசை - தமன் எஸ் 
ஃபைட் மாஸ்டர் - ராம் லக்ஷ்மன் & கிங் சாலமன் 
VFX - ஆர்.சி. கமலகண்ணன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் - ராஜீவன்
 கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - எஸ்.கே.என்
 மக்கள் தொடர்பு - யுவராஜ்
இணை தயாரிப்பாளர் - விவேக் குச்சிபோட்லா
தயாரிப்பாளர் - டிஜி விஸ்வ பிரசாத் 
எழுத்து இயக்கம் - மாருதி.





Sunday, July 28, 2024

*டிஸ்னி+ ஹாட்ஸ்டார், 'சட்னி - சாம்பார்' சீரிஸ், முன் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ்,  'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 

இந்நிகழ்வினில்  

வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் அஸ்வின் பேசியதாவது...
வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், நாங்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் இது.  பெரிய நட்சத்திரங்களை வைத்துத் தயாரித்துள்ளோம், ஹாட்ஸ்டார்க்கு எங்களது நன்றி. இயக்குநர்  ராதா மோகன் மிக அற்புதமாக இயக்கியுள்ளார்.  இரண்டு எபிஸோட் பார்த்திருப்பீர்கள், உங்களுக்குப் பிடித்திருக்குமென நம்புகிறோம். மற்ற 4 எபிசோடுகள் உட்பட 6 எபிஸோடுகளும் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. முமுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்,  அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா பேசியதாவது... 
இயக்குநர் ராதா மோகனின் படைப்பில், நானும் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை தான். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு எனது நன்றி. இந்த படைப்பில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றி,  இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி. 

இசையமைப்பாளர் அஜீஸ் அசோக்  பேசியதாவது... 
இது எனக்கு மூனாவது வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் இரண்டாவது வெப் சீரிஸ். என்னோட ஃபேவரைட் இயக்குநர் ராதா மோகன் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம்ஸுக்கு நன்றி. யோகி பாபு சார், வாணி போஜன், கயல் சந்திரன் என  எல்லோருமே மிக அருமையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் இந்த சீரிஸ் கவரும் என நம்புகிறேன் நன்றி. 

நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது...
இயக்குநர் ராதா மோகன் திரைக்கு வந்து 20 வருடங்கள் கடந்திருக்கிறது. அவரது முதல் படத்திலும் நான் இருந்தேன், அவரது முதல்  சீரிஸிலும் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆர்ட் டைரக்டர் கதிர்,  ரைட்டர் பொன் பார்த்திபன் என, நண்பர்கள் அனைவரும் அவரோடு இத்தனை வருடம் இணைந்து, பயணித்து வருகிறோம். அன்று எப்படி எனர்ஜியோடு இயங்கினாரோ, அதே எனர்ஜியோடு இன்றும் இயங்குகிறார். நடிக்கும் போது பொறுப்பை நம்மிடம் கொடுத்துவிட்டு, வேடிக்கை மட்டுமே பார்ப்பார். நமக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நடிக்க வைப்பார். அவரது சிறப்பு அம்சம் அது, அவருடன் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீரிஸை உருவாக்க மிகுந்த ஒத்துழைப்பு தந்த, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றி. இந்த சீரிஸுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என் முதல் நன்றி, பலருக்கு வாழ்க்கை தந்திருக்கும் பிரதீப் அவர்களுக்கு நன்றி. நான் வாய்ப்பு கேட்டு ராதா மோகன் சாரிடம் சென்றேன், ஒரு சின்ன கதாபாத்திரம்  இருக்கிறது செய்கிறாயா? என்று கேட்டார், அதே கதாபாத்திரத்தைக் கொஞ்சம் டெவலப் செய்து, மிகப் பெரிய பாத்திரம் ஆக்கி, என்னை இதில் நடிக்க வைத்திருக்கிறார். சார் மிகப்பெரிய நன்றி சார்.  என்னுடன் நடித்த இளங்கோ குமரவேல் சார், வாணி போஜன், யோகி பாபு, சந்திரன் என எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக அருமையாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்,  இசையில் அஜீஸ் அசத்தி இருக்கிறார். பொன் பார்த்திபன் மிக அருமையான வசனங்கள் தந்திருக்கிறார். உங்கள்  எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் கயல் சந்திரன் பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் அவர்களுக்கு என்  நன்றிகள், இத்தனை பிரம்மாண்டமான சீரிஸ் உருவானதற்கு அவர்கள் தான் காரணம், இதற்கு ஒத்துழைத்த ஹாட்ஸ்டாருக்கு எனது நன்றிகள். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு சீரிஸில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு எனது நன்றிகள். ராதா மோகன் சார் ஐ லவ் யூ சார், என்னை ஒரு நடிகனாக பயன்படுத்தியதற்கு நன்றி. என்னுடன் நடித்த அத்தனை பேரும் மிக அற்புதமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகை சம்யுக்தா பேசியதாவது...
இம்மாதிரி மேடையில் மிகப் பெரும் ஆளுமைகளுடன் இருப்பது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெப் சீரிஸில், அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ராதா மோகன் சாரின் ரசிகை, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட கால ஆசை. இவ்வளவு விரைவில் அது நடைபெறும் என நினைக்கவில்லை, இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்த சீரிஸில் பணிபுரிந்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.  இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி.


நடிகை நந்தினி பேசியதாவது...
ஹாட்ஸ்டாருக்கு என்னுடைய நன்றி, ஹாட்ஸ்டாரில் நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. ராதா மோகன் சார் எனக்கு ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம் தந்திருக்கிறார். இங்குள்ள அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள், எல்லோரும் இனிமையாகப் பழகினார்கள். எல்லோருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு இந்த சீரிஸ் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடிகை மீரா கிருஷ்ணன் பேசியதாவது...
வேல்ஸ் நிறுவனத்திற்கும் ஹாட்ஸ்டாருக்கும் என் முதல் நன்றி. இது நான் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்.  இந்த கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் ராதா மோகன் சாருக்கு நன்றி.  கிட்டத்தட்ட அவரை நாங்கள் லவ் பண்ணவே ஆரம்பித்து விட்டோம், அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்றே தெரியாது, நடிகர்களை இயல்பாக வைத்து, மிக அற்புதமாக வேலை வாங்கி விடுவார். ஜாலியாக ஒரு ஃபேமிலியில் இருப்பது போலவே தான் இருந்தது. இங்குள்ள அனைவருடனும் பணிபுரிந்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி.

நடிகை வாணி போஜன் பேசியதாவது…
ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ.  என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.

ஹாட்ஸ்டார் சார்பில்  பிரதீப் மில்ராய் பேசியதாவது...
ஹாட்ஸ்டாரில்  பதினைந்துக்கும் மேற்பட்ட சீரிஸ் தயாரித்து வருகிறோம்,  நிறைகுடம் எப்பொழுதும் தளும்பாது என்பது, ராதா மோகன் சாருடன் வேலை பார்க்கும் போது தான் தெரியவந்தது. ஊட்டியில் படப்பிடிப்பாகட்டும், டிஸ்கசனாகட்டும், பல ஸ்டார்களை ஒன்றிணைத்து சூட்டிங் ஆக இருக்கட்டும், எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகச் சிறப்பாகப் படப்பிடிப்பை நடத்துவார். அவருக்குள் இத்தனை காமெடி இருக்கிறது என்றே தெரியாது, மிக மிக இயல்பாக இருப்பார். யோகிபாபு மிக நன்றாக நடித்திருக்கிறார், அவருக்கு இது முதல் வெப் சீரிஸ், ராதா மோகன் சாருக்கும் இது முதல் வெப் சீரிஸ், மிக அற்புதமாக வந்துள்ளது. அத்தனை நடிகர்களும் மிக அற்புதமான உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பிரசன்னா மிக பிஸியான ஒளிப்பதிவாளர், ஆனால் இந்த சீரிஸில் பணியாற்றித் தந்ததற்கு நன்றி. அஜீஸ் நல்ல இசையைத் தந்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த சீரிஸை உருவாக்கித் தந்த வேல்ஸ் நிறுவனத்திற்கு என்னுடைய நன்றிகள்.  உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி.

கலை இயக்குநர் கதிர் பேசியதாவது...
இயக்குநர் ராதா மோகனுடன் பணியாற்றுவது மிக மகிழ்ச்சியானதாக இருக்கும், அவருடன் பணியாற்றும் போது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். நான் இயக்குநர் ஹரி உடன் அடிதடி, சண்டை, ரத்தம், போன்ற காட்சிகள் என பணிபுரிந்து கொண்டிருப்பேன், ஆனால் இவருடன் வந்து பணியாற்றும் போது மனது  இலகுவாகிவிடும்.  ஆரம்பகால படங்களிலிருந்து இவருடன் பணியாற்றி வருகிறேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு, ஒரு விமானத்தை செட் போட முடியுமா? என்று கேட்டார்.  உனக்கு என்ன பைத்தியமா? என்று கேட்டேன். ஆனால்  கதையைச் சொல்லி, விமான செட் போடச் சொன்னார். அந்த விமான செட் போட்டது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இன்று வரை நான் பல படங்களில் வேலை பார்த்து இருக்கிறேன், ஆனால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. விமானத்தை உருவாக்கியது நல்ல அனுபவமாக இருந்தது.  இந்த சீரிஸில் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. இதில் உழைத்த அனைத்து கலைஞர்களும், தங்கள் முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். ராதா மோகன் முத்திரை காமெடிகள் இந்த சீரிஸில் இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.


எழுத்தாளர் பொன் பார்த்திபன் பேசியதாவது....
உப்புக் கருவாடு படத்தில் என்னை எழுத்தாளர் ஆக்கி அழகு பார்த்தார் ராதா மோகன் சார், இப்போது இந்த படைப்பின் மூலம் சீரிஸிற்கும்  என்னைக் கூட்டி வந்துள்ளார், நன்றி சார்.  இந்த சீரிஸ் திரையிட்டபோது, நீங்கள் எங்கெல்லாம் சிரிக்கிறீர்கள் எனப் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தோம்,  நீங்கள் சிரிக்க ஆரம்பித்தவுடன் தான் எங்களுக்குப் பயம் விலகியது.  இந்த சீரிஸ் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த வேல்ஸ் நிறுவனத்திற்கும், ஹாட்ஸ்டாருக்கும் எனது நன்றிகள். எங்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு தந்தால், உங்களுக்கு இன்னும் நிறையப் படைப்புகளைத் தருவோம். கலை  இயக்குநர் கதிர் அவர் பணிபுரியும் படங்களுக்கு, என்னையும் கூட்டிச் சென்று விடுவார். ரத்தம், வெட்டு என பணிபுரிந்து விட்டு வரும்போது ராதா மோகன் சார் கூப்பிட்டு மனதை இலகுவாக்கிவிடுவார்.  அவர் உன்னால் முடியும் என்று நம்பி பொறுப்பைத் தந்துவிடுவார். இந்த சீரிஸில் அனைத்து கலைஞர்களின்  கெமிஸ்ட்ரியும் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...
திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். சட்னி சாம்பார் சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லி விட்டார்கள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள்.  அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்த நேரத்தில் ஓடிடிக்கு  என்னை அணுகிய செந்தில், கிருஷ்ணன் குட்டி, பிரதீப், ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நடிகர்கள் அனைவரும் இங்கே இருக்கிறார்கள், எல்லோரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார்கள். அனைவருக்கும் என்னுடைய நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். என்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.


இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜீஸ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன், இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  'சட்னி - சாம்பார்' சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் துவங்கியுள்ளது.

*யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு*


*யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு*
நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு

திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. 

இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் - அருணாசலம் - இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால்...  இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

https://youtu.be/tz5AEgix7C8?si=DuMgvuA2X3C9Z_Zm

Raayan Movie Review:

Raayan Movie Review:

 


The film begins with Raayan and his brothers leaving their village, accompanied by their newborn sister. Upon reaching the city, they receive assistance from Shekhar (Selvaraghavan), who works in a vegetable market. The narrative then transitions from their past to the present, showing the siblings as they grow older.

 

In the present, Raayan has taken on a fatherly role, looking after his younger siblings. Muthu (Sandeep Kishan), the elder brother, is known for his anger, while the youngest brother, Manickam (Kalidas Jayaram), is a college student. Their sister, Durga (Dushara Vijayan), is the center of their world, and Raayan wants nothing but the best for her.

 

The plot thickens with the introduction of two gangsters, Sethu (SJ Surya) and Durai (Saravanan), who are embroiled in a territorial conflict. A police officer (Prakash Raj) sees an opportunity to clean up the city by exacerbating the rivalry between Sethu and Durai. This conflict sets the stage for the unfolding drama.

 

While the storyline of Raayan is familiar and somewhat predictable, the film is elevated by the direction of Dhanush and the strong performances of the cast. Dhanush's storytelling and direction breathe life into the film, supported by a talented technical team. Cinematographer Om Prakash's work is a standout, contributing significantly to the film's visual appeal, and A.R. Rahman's music adds another layer of strength.

 

At the heart of the film is the relationship between the brothers and their sister. Dhanush ensures that the theme of sibling affection remains central, despite the surrounding violence. This focus on familial love is Dhanush's greatest achievement as a director, making the film a poignant exploration of brotherly and sisterly bonds.


Friday, July 26, 2024

*பாகுபலி முதல் கல்கி வரை: உண்மையிலேயே மிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் !!*




கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்,  பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது, ​​​​ பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.

சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ்  பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. 

மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை,  அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த "கல்கி" திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல; பிரபாஸின் திரைப்படங்கள் ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.   இது அவரது உலகளாவிய ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது. , பிரபாஸின் ரசிகர்கள் பான் இந்தியா சூப்பர் ஸ்டாரை மீது  மிகப்பெரும் அன்பு வைத்துள்ளனர்.  ஆதரவற்றவர்களுக்கு நன்கொடை அளிப்பது அல்லது நடிகரின் பிரம்மாண்ட கட் அவுட்களை உருவாக்குவது என அவருக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.


சமீபத்தில் வெளியான அவரது ‘கல்கி’ பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 1100 கோடிகளை வசூலித்து ஒரு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது, இது உலகளாவிய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த சாதனை நடிகர் பிரபாஸின் மகத்தான புகழையும், திரைப்படத் துறையில் தாக்கத்தையும் மேலும் பெருக்குகிறது. 500 கோடியைத் தாண்டிய தொடக்க வார இறுதி வசூல் மூலம், இந்தியத் திரையுலகில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது ‘கல்கி’. இந்திய சினிமாவில் 1000 கோடி வசூலைத் தாண்டிய இரண்டு படங்களில் நடித்த இரண்டு நடிகர்களில் பிரபாஸ் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதில் "பாகுபலி 2" முதல் படமாகும்.


பிரபாஸின் பணிவு மற்றும் எளிமை அவரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக மாற்றியுள்ளது. அவரது பார்வையாளர்களுடனான இந்த உண்மையான தொடர்பு அசைக்க முடியாத ஆதரவாக உள்ளது, இது அவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது. "பாகுபலி" தொடரின் மகத்தான வெற்றியிலிருந்து "சாஹோ" மற்றும் "சலார்" போன்ற வெற்றிகள் வரை, பிரபாஸ் பாக்ஸ் ஆபிஸ் டைட்டன் என்ற நிலையை உறுதிப்படுத்தி, அடுத்தடுத்து பெரிய ப்ளாக்பஸ்டர்களை வழங்கியுள்ளார்.


பிரபாஸின் முதல் நாள் கலக்சனில் தொடர்ந்து சாதனை படைக்கும் திறன் ஈடு இணையற்றது. "பாகுபலி: தி பிகினிங்" முதல் நாள் வசூல் மூலம் ₹75 கோடிகள் வசூல் சாதனை படைத்தது, அதைத் தொடர்ந்து "பாகுபலி: தி கன்க்ளூஷன்" முதல் நாள் வசூல் ₹200 கோடியுடன் வசூலில் அசத்தியது. "சாஹோ" முதல் நாள் ₹130 கோடி வசூலுடன் இந்தப் போக்கைத் தொடர்ந்தது, மேலும் "சலார்" முதல் நாள் வசூல் ₹178 கோடிகளுடன் பிரபாஸின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியது. இப்போது, ​​"கல்கி" திரைப்படம் அதன் முதல் நாள் வசூல் ₹180 கோடியுடன் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது, பிரபாஸ் இந்தியாவின் வலிமைமிகு நடிகர்  என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

*From Baahubali to Kalki: Rebel Star Prabhas’ is Truly The Biggest Pan Indian Super Star*

When Amitabh Bachchan called Prabhas ‘godlike’ and was grateful to director Nag Ashwin for casting the actor in Kalki 2898 AD, is a huge compliment for the ‘Rebel star’ as he is popularly known. 

Prabhas’ immense popularity has transcended regional boundaries. What sets the actor apart is not just his box office numbers but the sheer devotion of his fans, who flock to theaters irrespective of interviews or extensive promotions.

Prabhas' ability to draw massive crowds with minimal publicity is a testament to his star power. His recent film "Kalki" is a prime example. Despite participating in only one promotional event, the film garnered immense love and anticipation, underscoring the actor's unmatched influence. This phenomenon is not just limited to India; Prabhas' movies consistently perform well in international markets like Japan and the USA, reflecting his global appeal. Along with this Prabhas's fans are also extremely devoted towards the pan India superstar whether its donating to the underprivileged or making life size cut outs of the actor his fans are always there to support him in every situation. 

His recent release ‘Kalki’ has achieved a historic feat by grossing a staggering 1100 crores worldwide at the box office, solidifying Prabhas' position as a global cinematic icon. This unprecedented success further amplifies the actor's immense popularity and impact on the film industry. With a phenomenal opening weekend collection surpassing 500 crores, ‘Kalki’ has set a new benchmark for the Indian film industry. Notably, Prabhas is one of the only two actors in Indian cinema to have starred in two films that crossed the 1000 crore mark, with "Baahubali 2" being his first.

The actor's humility and down-to-earth nature endear him to fans worldwide. This genuine connection with his audience translates into unwavering support, making every release a significant event. From the monumental success of the "Baahubali" series to hits like "Saaho" and "Salaar," Prabhas has delivered back-to-back big openings, solidifying his status as a box office titan.

Prabhas' ability to consistently deliver record-breaking first-day openings is unparalleled. "Baahubali: The Beginning" set the benchmark with a phenomenal first-day collection of ₹75 crores, followed by an even more explosive start for "Baahubali: The Conclusion" with a first-day collection of ₹200 crores. "Saaho" continued this trend with a first-day collection of ₹130 crores, and "Salaar" further solidified Prabhas' dominance with a first-day collection of ₹178 crores. Now, "Kalki" has shattered all previous records with its first-day collection of ₹180 crores, proving once again that the actor is a force to be reckoned with.

*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா*


நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !!
SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது...
நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில்  துரை சிங்கமாகக் கலக்குவார்.  நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம், அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது. சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர், படத்தை எப்படி கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது...
என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட  கேட்காமல்  தயாரித்தார். இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர்.  படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது...
அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட  நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்  தாருங்கள் நன்றி. 


நடிகை நிஹாரிகா பேசியதாவது...
எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், ஷேன் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்த  வாலிக்கு, என் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது...
மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி. 


இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது...
பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது,  இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது,  எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி  நன்றி. 

இயக்குநர் இளன் பேசியதாவது...
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு பாடல் எழுதியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள்,  இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் பாண்டியன் பேசியதாவது...
மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன்  இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே, எனக் கேட்க இனிமையாக உள்ளது.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். 

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது...
தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரோடியூசர். ஒரு நல்ல படம். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 


நடிகர் சரண் பேசியதாவது...
இந்தப்படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக்கதையை எழுதினார். அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம்,  ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப்படத்தை ஒத்துக்கொண்டார். இந்தப்படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. கலை பிரதர் பல வருடம் பழகியவர் போலவே, அன்பைப் பொழிவார். ஐஸ்வர்யா இந்தப்படம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தார். நிஹாரிகா அருமையாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப்படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது,  அனைவருக்கும் நன்றி. 


மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.  இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். 

ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.


பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Pitha 23:23 Movie Review:- Director Sukan's exceptional planning, creativity, and efficiency under tight constraints are evident in the enjoyable and unique film impressively shot in just 23 hours and 23 minutes, showcasing their talent and dedication to the craft.

Pitha 23:23 Movie Review:-   Director Sukan's exceptional planning, creativity, and efficiency under tight constraints are evident in the enjoyable and unique film impressively shot in just 23 hours and 23 minutes, showcasing their talent and dedication to the craft.

 


The story is set during a vibrant night at a village temple festival. Amidst the bustling crowd, a young girl named Pithalakshmi is frantically searching for her missing brother. Concurrently, a rich man is kidnapped by a notorious gang that specializes in kidnapping, blackmailing, and extorting money from millionaires. The gang demands 25 crores from the rich man's wife, threatening severe consequences if their demands are not met.

 

As Pithalakshmi continues her desperate search, she inadvertently gets trapped by the same gang. The narrative follows her struggle to escape the clutches of the criminals while trying to locate her brother. The story is centered on whether Pithalakshmi will be able to escape and find her brother amidst the chaos.

 

Anu krishna, who plays Pithalakshmi, delivers an outstanding performance. She naturally expresses various emotions, from the anxiety of searching for her brother to the fear of being trapped in a dangerous environment. Her portrayal of Pithalakshmi's affection for her lover adds depth to her character, making her performance compelling and relatable.

 

Adesh Bala, portraying the main villain, is menacing as he orchestrates the kidnapping and extortion. Sams, appearing as a comedic villain, adds a layer of interest and variety to the antagonist roles. Darshit, playing the heroine's deaf and mute younger brother, delivers a notable performance, drawing attention with his portrayal. Rehana, playing the businessman's wife, amazes with her acting, especially when her character's true nature is revealed. Shivanji, as the businessman's car attendant, also performs admirably.

 

Supporting performances by Sriram Chandrasekhar as Pithalakshmi's lover, Arul Mani as the businessman, and Maurice Raja as the villain's assistant contribute to the film's overall appeal. The music, composed by Naresh, enhances the action and thriller elements of the film. Ilayaraja's cinematography vividly captures the festival crowd, night roads, and the villain's house, while strong editing ties the narrative together. Director Sukan deserves praise for delivering an enjoyable and unique film, shot impressively in just 23 hours and 23 minutes.

Thursday, July 25, 2024

யோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது.


இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸை,  ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.

நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கிடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார்.

'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படுத்தும் விதத்தில்  படக்குழுவினர் காமிக் வடிவில் இதன் களத்தை விவரிக்கும் ஒரு சிறுகதையையும்  வெளியிட்டுள்ளனர். இந்த காமிக் வடிவ கதையில் இயக்குநர் ராதாமோகனுக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான கற்பனை உரையாடல் இடம்பெற்றுள்ளது. ராப் மியூசிக்கும் மற்றும் காமிக் வடிவ தொடரும்  இந்த சீரிஸ் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது. 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு கதை நாயகனாக ஒரு சீரிஸில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க  குடும்பங்கள் சிரித்து ரசிக்கும்,  யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.

இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

'சட்னி-சாம்பார்' சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார். 

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ்  பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.


https://www.instagram.com/p/C9upGKDSEqf/?img_index=5

https://www.youtube.com/watch?v=KMgHMb6GUY0


*விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*


7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு  “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ்,  மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்... இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

'நானும் ரவுடிதான்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் - 'லவ் டுடே' படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் - 'மாஸ்டர்', ' லியோ' போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்-  ஆகியோரின் கூட்டணியில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் பிறந்த நாளில் அவர் நடிக்கும் 'எல் ஐ கே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால்... அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

*நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா*



இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக தமிழ் திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல்... அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா தற்போது 'U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் சென்னையில் உள்ள  நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை  இசை துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, உலக அளவில் நற்பெயரை சம்பாதித்த பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நாய்ஸ் & கிரைன்ஸ் எனும் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பூமர் ஃபேஷன் எனும் முன்னணி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக பங்களிப்பு செய்கிறது. 
இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன்போது நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மகாவீர் மற்றும் கார்த்திக் சீனிவாஸ், விளம்பரதாரரான பூமர் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் லிங்குசாமி மற்றும் ஹரிதா லிங்குசாமி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 
நாய்ஸ் & கிரைன்ஸ் நிறுவனத் தலைவர் மகாவீர் பேசுகையில், '' இது இந்த இசை நிகழ்ச்சி- எங்களுடைய நிறுவனத்தின் பத்தாம் ஆண்டுக்கான இசை நிகழ்ச்சி.  இந்த இசை நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் சிறப்பானது. முக்கியத்துவமானது. ஏனென்றால் இசை ரசிகர்களின் இதயத்தில் ராஜாவாக வீற்றிருக்கும் யுவன் சங்கர் ராஜா. நான் உள்பட அனைவரும் யுவனின்  தீவிர ரசிகர்கள். இசை நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பயணித்து, இந்த முறை அவரிடம் இசை நிகழ்ச்சிக்கான அனுமதியை பெற்று இருக்கிறோம்.  கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் கிடைத்த வெற்றி.. எங்களின் அணுகுமுறை .. இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாணி... ஆகியவற்றை பாராட்டி, இந்த ஆண்டும் எங்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்திருக்கிறார் யுவன் சார்.  
'யுவன் லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் இந்த தொடர் இசை நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வு பெங்களூருவில் நடைபெற்றது. மொழி எல்லைகளைக் கடந்து பெங்களூரில் நடைபெற்ற யுவனின் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம். 

சென்னை இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால்.. முதன் முறையாக இந்தியாவில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கும், யுவனுக்கும் இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாகும். இதனை இசை ரசிகர்களும் விரும்புவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுடன் நான் மேலும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற யுவன் சாரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம். 

360 டிகிரி இசை நிகழ்ச்சி சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதனை முதன் முதலாக இந்தியாவின் ஏன் முயற்சிக்க கூடாது என எண்ணி, விரிவான ஏற்பாடுகளுடன் திட்டமிட்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம். அந்த வகையில் இந்திய கலைஞர்களை கொண்டு இந்தியாவில் நடைபெறும் 360 டிகிரி வடிவிலான மேடையுடனான நேரலையான முதல் இசை நிகழ்ச்சி இதுதான். 

யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி என்று சொன்னவுடன் பூமர் பேஷன் நிறுவனத்தினர் மிக்க மகிழ்ச்சியுடன் விளம்பரதாரராக பங்கு கொள்வதில் விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கும் இது தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

சென்னையை தொடர்ந்து விரைவில் கோயம்புத்தூர் மற்றும் சிங்கப்பூரில் இதே போன்றதொரு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். '' என்றார். 

இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ''  இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் சிறப்பானது.‌ கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும்- ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது.  இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே தருணத்தில் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். என்னுடைய விருப்பத்தை நாய்ஸ் & கிரைன்ஸ் குழுவினரிடம் தெரிவித்தேன். அந்த தருணத்தில் 360 டிகிரி வடிவிலான மேடையை அமைப்பது குறித்து விவாதித்தோம். இந்த புது அனுபவத்தை  ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.  இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது ரசிகர்களையும் , என்னையும் உற்சாகப்படுத்தும்.  ஜூலை 27ஆம் தேதியன்று ஒய் எம் சி ஏ மைதானத்தில் சந்திப்போம்.'' என்றார். 

இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் U1 long drive live in concert எனும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம் சி சனா என ஏராளமான முன்னணி பின்னணி பாடகர்கள்- பாடகிகள் பாடுகிறார்கள் என்பதும், இந்திய கலைஞர்களை கொண்டு 360 டிகிரி வடிவிலான மேடையில் முதன்முதலாக நடைபெறும் நேரலையான இசை நிகழ்ச்சி இதுதான் என்பதும், இது திரை ரசிகர்களுக்கு புதுவிதமான இசை அனுபவத்தை வழங்கும் என்பதால் இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும், இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுவதும், அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 23, 2024

*Shivanna's 131st Movie Ready to Set Sail… Team Meets the Hat-trick Star*


*Good news for Shivanna’s fans as the star steps into his 131st film*

A new update has come for Karunada Chakravarthy Shivanna’s fans as the star is set to begin his 131st film. Recently, the production team left his fans excited by releasing the introduction teaser on Shivanna's birthday. Now, the team is ready to start making the film. The muhurat (auspicious start) of Shivanna's 131st movie will happen soon.
*Shivanna to Start Shooting for His 131st Film*

The team is ready to dive into the shooting arena for hat-trick hero Shivaraj Kumar's 131st movie, and the entire team met Shivanna today.

Director Karthik Adwaith, producers N.S. Reddy and Sudheer, cinematographer A.J. Shetty, and editor Deepu S. Kumar visited the Hat-trick Star at his Nagawara residence and posed for photos.

Karthik Adwaith is making his entry into Sandalwood through this film, which is his second movie as a director. This is an action thriller where Shivanna will be seen in a different look and a unique role. V.M. Prasanna of 'Ghost' fame and Jayakrishna of 'Seetharamam' fame are contributing to the film as writers. With music by Sam C.S. of 'Vikram Vedha', 'RDX', and 'Kaithi' fame, A.J. Shetty will handle the cinematography. Editing will be done by Deepu S. Kumar, and art direction will be by Ravi Santhehaklu. The movie is produced under Bhuvaneshwari Productions by S.N. Reddy and Sudheer P., with Ramana Reddy supporting as executive producer.

*Director Susi Ganeshan Launches Brand New Motion Poster for 'Ghuspaithiya' Starring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; Movie Releases on 9th August*


*Susi Ganeshan Reveals Exciting Motion Poster for 'Ghuspaithiya' Featuring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; To be Release on 9th August*

The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.

The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, *"caption to be added,"* further adding to the suspense.

Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.

Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.

'Ghuspaithiya' is set to release  in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!*

*பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!*

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.

400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.

லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.

இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள்: பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்

தொழில்நுட்பக் குழு: 
எழுத்து , இயக்கம் : லுதீர் பைரெட்டி
தயாரிப்பாளர்: மகேஷ் சந்து 
இணை தயாரிப்பாளர்: சாய் ஷஷாங்க் 
பேனர்: மூன்ஷைன் பிக்சர்ஸ் 
வழங்குபவர்: சிவன் ராமகிருஷ்ணா 
ஒளிப்பதிவு : சிவேந்திரா 
இசை: லியோன் ஜேம்ஸ் 
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் 
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா 
விளம்பர வடிவமைப்பாளர்: அனந்த் கஞ்சர்லா மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெட்டிங் - வால்ஸ் & டிரெண்ட்ஸ்



ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...