Friday, April 29, 2022

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது










அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது 

இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது. 

ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது 


பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் ஒரு செழுமையான கேட்டலாகை அளிக்கிறது. ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர் அடித்தடம்  மேலும் விரிவடையத் தயாராக உள்ளது , ஏனென்றால் டிவிஓடி வாடகை சேவை அனைத்து ப்ரைம் உறுப்பினர்களுக்கும் மற்றும் இன்னமும் ஒரு ப்ரைம் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும்  கிடைக்கும்.


மும்பை, இந்தியா -28 ஏப்ரல், 2022- அமேசான் ப்ரைம் வீடியோ , இந்தியாவில் அதன் முதல் ப்ரைம் வீடியோ ப்ரெசெண்ட்ஸ் இண்டியா  காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியில் , இந்தியாவில் இன்று வரையிலான அதன் மிகப் பெரிய பலகையை (ஸ்லேட்டை ) அறிமுகப்படுத்தி , அடுத்த 24 மாதங்களில் அது அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஒரிஜினல் தொடர்கள், ஒரிஜினல் திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகள் இடையே  ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கு அதிகமான புதிய தலைப்புகளை இன்று அறிமுகப்படுத்தியது . 

பல மொழிகளில் நுகர்வோர்களுக்கு சிறந்த மற்றும் சமீபத்திய திரைப்படங்களை கொண்டு வரும் அதன் யுக்தியை பலப்படுத்தும் வகையில் , ப்ரைம் வீடியோ புதிய பல வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   இந்தியாவின் சில மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவித்தது . இந்த சேவையில் நேரடியாக வெளியிடப்படவிருக்கும் , ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களுடன் இந்தியாவில் ஒரிஜினல் திரைப்பட தயாரிப்பை முன்னெடுப்பதையும் ப்ரைம் வீடியோ , அறிவித்தது . 

இந்த சேவை சமீபத்தில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேன்மையான-சேவை அளித்து அரை நூற்றாண்டை பூர்த்தி செய்திருக்கிறது, மற்றும் அடுத்த 5 வருடங்களில் ப்ரைம் வீடியோ இந்தியாவில் அதன் முதலீட்டை இரண்டு மடங்கை விட அதிகமாக்கும் என அறிவித்தது . 

வரவிருக்கும் அமேசான் ஒரிஜினல்ஸ் , அதி நவீன த்ரில்லர்கள் முதல் , சக்தி வாய்ந்த அடிதடி திரைப்படங்கள், ஈடுபடுத்தும் நாடகங்கள் முதல் இதயத்தை லேசாக்கும் நகைச்சுவைகள் மற்றும் இதயத்தை கதகதப்பாக்கும் காதல் வரை  பலதரப்பட்ட வகைகளின் பரந்த ரகத்தை அளிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். இந்த சேவை இளம் பார்வையாளர்களுக்காக  அதன் ஒரிஜினல் ப்ரோக்ராமிங்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது , மற்றும் அதன் இந்திய பயணத்தில் முதல் முறையாக அமானுஷியம்  மற்றும் திகில் போன்ற வகைகளையும் ஆய்வு செய்கிறது . மேலும், ப்ரைம் வீடியோ வாழ்க்கை வரலாறு, நிஜ குற்றங்கள் மற்றும் புலனாய்வு ஆவண நாடகங்கள் போன்ற வகைகளை ஆய்வு செய்வதற்கு அதன் எழுதப்படாத (அன்ஸ்க் ரிப்டெட்)  தொடர் கேட்டலாகின் வாய்ப்புகளையும் ப்ரைம் வீடியோ மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.  

ப்ரைம் வீடியோ திறமைக்கான ஒரு இடமாக இருப்பதற்கான குறிக்கோள் கொண்டுள்ளது. இது நாடெங்கிலும் தனித்தன்மையான, சினிமா சார்ந்த குரல்கள் கொண்ட பலதரப்பட்ட படைப்பாளிகளின் ஒரு பரவலான தொகுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. வரவிருக்கும் புதிய தலைப்புகளில் ஏறக்குறைய 70% புதிய திறமைகளைக் கொண்டிருக்கும்- கேமராவின் முன்  மற்றும் பின் இரண்டிலும் 

கடந்த வருடம் ப்ரைம் வீடியோ சேனல்களை அறிமுகப்படுத்திய பின், ஒரு வீடியோ பொழுதுபோகக்கு மார்கெட் இடத்தை உருவாக்குவதை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக, அமேசான்  அதன் வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை ப்ரைம் வீடியோ ஸ்டோரையும் அறிமுகப்படுத்தியது,வாடிக்கையாளர்கள் இப்போது பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களையும் முன்னதாகவே பார்க்கலாம் , உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் (விருது வென்றவை மற்றும் ஃப்ரான்ச்சைசிகளின்) ஒரு செழுமையான கேட்டலாகை உள்ளடக்கியுள்ளது. ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர் அடித்தடம்  மேலும் விரிவடையத் தயாராக உள்ளது , ஏனென்றால் டிவிஓடி வாடகை சேவை அனைத்து ப்ரைம் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஒரு ப்ரைம் உறுப்பினர் அல்லாத யாருக்கும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அனைத்து மொழிகளிலும் முன்னதாகவே  திரைப்படங்களை வாடகைக்கு எடுத்து பார்க்கலாம் மற்றும் வாடகை சேவை ப்ரைம் வீடியோ. காம் மற்றும் ப்ரைம் வீடியோ ஆப்பில் ஸ்டோர் டேப் வழியாக பயன்படுத்தப்படலாம்.  

“கடந்த 5 வருடங்களில் , நாங்கள் பல்வேறு மொழிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உள்ளடக்க விஷயங்களின் ஒரு பலம் வாய்ந்த பலகையை (ஸ்லேட்டடை) உருவாக்கியிருக்கிறோம் , இது இந்திய வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட பொழுதுபோக்கு தேவைகளுக்கு மிகுந்த சேவை அளித்திருக்கிறது. அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மற்றும் விநியோகத்துடன், இந்த அற்புதமான கதைகள் இந்தியாவில், மற்றும் உலகெங்கிலும்  வெகு தொலைவாக மற்றும் பரவலாக பயணிப்பதற்கு உதவியிருக்கிறோம் . இந்திய வாடிக்கையாளர்களின் மொழி ரகத்தை விரிவுபடுத்த உதவுவதற்கு நாங்கள் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறோம் , இதன் மூலமாக படைப்பாளிகள் மற்றும் திறமையுள்ளவர்களுக்கான  ஒரு பார்வையாளர் அடித்தளத்தை  அதிகரித்திருக்கிறோம். ப்ரைம் வீடியோ இண்டியா , இன்று நாட்டின் அஞ்சல் குறியீடுகளில்  99% -லிருந்து பார்வையாளர்களைப் கொண்டிருக்கிறது. உலகளவில் இந்தியா தொடர்நது மிக விரைவாக –வளர்ந்து வரும் மற்றும் மிகவும் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது .எங்களுடைய நுகர்வோர்களிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கும் அன்பு எங்களை பணிவு மிக்கவர்களாக்கியிருக்கிறது மற்றும் அற்புதமான உள்ளடக்க விஷயங்களுடன் எங்களுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்கு நாங்கள் தொடர்நது ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் , அதே சமயத்தில் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கும் உந்துதல் அளிக்கிறோம்,” என்று கூறினார் கௌரவ்  காந்தி , கண்ட்ரி ஹெட், அமேசான் ப்ரைம் வீடியோ இண்டியா. 

இந்தியாவில் திரைப்படங்கள் பிரிவை விரிவாக்கம் செய்வதில் பல-முனை  அணுகுமுறை பற்றி  பேசும் போது , கௌரவ் மேலும் கூறினார் “மிகவும்-விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக ஆவதற்கான எங்களுடைய தொலை நோக்குடன் இசையும் வகையில் , நாங்கள் எங்களுடைய நுகர்வோர்களுக்கு திரைப்படங்களை அளிக்கும் விதத்தில்  நிலையாக புதுமைகளைப் புகுத்தியிருக்கிறோம், தியேட்டருக்கு-பின் எர்லி-வின்டோவில் திரைப்படங்களை  (திருட்டு நகல் ஏற்படாத வகையில் முன் கூட்டியே வெளியிடுவது) அளிப்பது முதல் டைரக்ட்-டு சர்வீஸ் ப்ரீமியர்ஸ் (நேரடியாக ஓடீடீ தளங்களில் வெளியிடப்படுவது)  வரை , நுகர்வோர்களின் வசிப்பறைகள் மற்றும் விரும்பப்படும் சாதனங்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களை கொண்டு வந்திருக்கிறோம்,  இந்த பிரிவை மேலும் வளர்ப்பதற்கு நாங்கள் ஆழமான அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம் மற்றும் எங்களுடைய திரைப்பட உரிமை (ஃபிலிம் லைசென்ஸிங்) பார்ட்னர்ஷிப்களில் பெரிய அளவில் செயல்பட இருக்கிறோம், எங்களுடைய இணை-தயாரிப்பு முயற்சிகளை விரிவு படுத்துகிறோம் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை முன்னெடுப்பதை  அறிவிப்பதற்கும் இப்போது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். அற்புதமான உள்ளடக்க விஷயங்களில் எங்களுடைய முதலீடுகளுடன் கூடுதலாக , டிவிஒடி திரைப்பட வாடகை சேவை (மூவி ரென்டல் சர்வீஸ்) அறிமுகம் குறித்தும் நாங்கள் மிகுதியான ஆர்வம் கொண்டுள்ளோம், அது இந்த திரைப்படங்களுக்கு மிக விரிவான பகுதிகளை சென்றடைவதற்கான வாய்ப்பளிப்பதோடு  மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உள்ளடக்க விஷயங்களை எப்படி பயன்படுத்த மற்றும் பார்க்க விரும்புகிறார்கள் என்பதிலும் அதிக தேர்வை அளிக்கிறது.” 

இன்று அறிவிக்கப்பட்ட விரிவடைந்து வரும் உள்ளடக்க விஷயங்கள் பலகை குறித்து விளக்குகையில், அபர்ணா புரோஹித் , ஹெட் ஆஃப் இண்டியா ஒரிஜினல்ஸ் , அமேசான் ப்ரைம் வீடியோ கூறினார் , “எங்களுடைய நோக்கம் அழுத்தமான, அசலான மற்றும் வேரூன்றிய கதைகளை சொல்வதாகவே இருந்திருக்கிறது  , இவை இந்திய நேயர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள நேயர்களுடனும் எதிரொலிக்க வேண்டும்.  எங்களுடைய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் புதிய வகை உதாரணமாக ஊக்கம் அளித்திருக்கிறது, புதிய பாதையை வகுத்திருக்கிறது , மற்றும் நிஜத்தில் கலாச்சார யுகத்தின் ஒரு பகுதியாகியிருக்கிறது. நாங்கள்  முன்னேறிச் செல்கையில், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு  வெவ்வேறு வடிவங்கள், வகைகள் மற்றும் மொழிகளில் சக்தி வாய்ந்த கதைகளைக் கொண்டு வருவதற்கு மிக செழிப்பான படைப்பாளிகள் சிலருடன் இணைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். எங்களுடைய வரவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் பலகை , மொழி , தேசியம் அல்லது வடிவங்களின் அனைத்து தடைகளையும் கடந்து செல்லும் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

வரவிருக்கும் தலைப்புகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப்கள் பற்றிய விவரங்கள் இணைப்பு ஆவணத்தில் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது

Thursday, April 28, 2022

Payanigal Gavanikkavum Movie Review:

Payanigal Gavanikkavum Movie Review:

 


In the direction of Shakthivel Perumalsamy the film explicit the consequences of individual perspective made someone's life upside-down, the director auxiliary the essence of social media. In the flick "Payanigal Gavanikkavum" Vidharth and Karunakaran play a vital, Cinematograph of the film was Pandikumar and the music was composed by Shamnath Nag. The title "Payanigal Gavanikkavum” impact on the travelling sequence of a guy, whose life mess up with woe. 

 

Ezhilan (Vidharth) and Antony (Karunakaran) both of their lifestyles were distinctive; Ezhilan leads a happy life with his wife Tamizhselvi. Simultaneously, Antony is a guy that he always keeps an attitude of sharing the visuals in the social media, whichever happens in his surroundings. In a fatigued situation, Ezhilan struck up with dormant condition and this was noticed by Antony. Now the peculiar fellow was taking a click of an innocent man Ezhilan's sleeping posture and upload in the social media. 

 

The director Shakthivel Perumalsamy, understands the misconception of a scenario. The family man Ezhilan's son was getting hurt with his friends circle and everything was going upside down. The film tried to convey about a message. The actor Vidharth upholding the story with his performances and Karunakaran adequate on his each frame. The music was glorified. Overall, Payanigal Gavanikkavum is a miserable life of the common person.


திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'





 திரையுலக பிரபலங்கள் கொண்டாடும் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

திரையுலக பிரபலங்களின் வாழ்த்து மழையில் ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

பார்வையாளர்களை பரவசப்படுத்திய 'ஆஹா'வின் முதல் ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்'

ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் பதிப்பான இந்த படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர்கள் விதார்த், கருணாகரன், சரித்திரன், நடிகைகள் லட்சுமி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி சக்திவேல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் வெளியாகும் முதல் ஒரிஜினல் படைப்பு. இந்த திரைப்படம் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

இதற்காக திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களான சூரி, இயக்குநர்கள் அறிவழகன், சாம் ஆண்டன், ரவிக்குமார்,  கேபிள் சங்கர், கார்த்திக் யோகி, படத்தின் இயக்குநர் சக்திவேல், நடிகர்கள் விதார்த், கருணாகரன், மாசூம் சங்கர், நடிகை ரூபா மஞ்சரி, மணிகண்டன், வினியோகஸ்தர் சக்திவேல், தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தை பார்வையிட்ட அனைவரும் சமூக வலைதளம் குறித்த சரியான பார்வையை இந்த திரைப்படம் இளைய தலைமுறையினருக்கு வழங்கியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சூரி பேசுகையில், '' பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.

சமூக வலைதளங்களை நல்ல விதத்தில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எப்படி மேன்மை அடைகிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

நான்கு பேருக்கு முன்னால் நன்றாக வாழவேண்டும் என்பதை விட நான்கு செல்போன்களுக்கு இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இதை தெளிவாக சொல்லியிருக்கும் திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'.

பொதுவாக பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். ஆனால் எந்தப் படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதோ...! அந்தப் படத்தை ரீமேக் செய்வதுதான் சரி. அந்தவகையில் சமூகத்திற்கு நலன் பயக்கும் தரமான படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்த நண்பர் விஜய், இயக்கிய சக்திவேல் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய பங்காளி, நண்பர் விதார்த் படம் முழுவதும் அற்புதமாக நடித்திருக்கிறார். பேசாமல், தன்னுடைய உடல் மொழியால் ரசிகர்களை அழ வைத்திருக்கிறார். சிரிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு முழுமையான நடிகர் என்பதை மீண்டும் இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இது போன்ற தரமான படங்களை ஊக்குவிக்கும் 'ஆஹா' டிஜிட்டல் தளத்தை பாராட்டுகிறேன். இது போன்ற நல்ல படங்களை வெளியிடுவதற்கு உங்களின் பேராதரவு தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

இதனிடையே ஆஹா ஒரிஜினல் படைப்பு 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை பிரத்யேகமாக பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் தங்களது நேர்மறையான விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, இந்தப் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா டிஜிட்டல் தளம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் பல்வேறு வகையிலான ஒரிஜினல் படைப்புகளையும் வழங்கவிருக்கிறது. ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கூகுள் குட்டப்பா’, ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஐங்கரன்’ மற்றும் முன்னணி இயக்குநர்களின் கைவண்ணத்தில் தயாராகி வரும் புத்தம் புதிய வலைத்தளத் தொடர்களும் ஆஹா ஒரிஜினல்ஸில் வெளியாகவிருக்கிறது.

Wednesday, April 27, 2022

*சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*

 




*சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*

 

முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த  அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.

 

பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன். இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத  ஒரு புதுமையான பாத்திரம்.  அவர் கண்டிப்பாக இதற்கு  சரியாகப் பொருந்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை புதுமையான  தோற்றத்தில் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் அவர் எனது முதல் தேர்வாக இருந்தார். இக்கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

 

தனது கதாநாயகியின் பாத்திரத்திற்கு ஏற்ற நடிகரை முழு நம்பிக்கையோடு தேர்வு செய்த பின் அவரது சகோதரனாக நடிக்கச் சிறந்த நடிகரைத் தேடிய பயணித்ததைப் பற்றி கூறிய இயக்குனர் “செல்வா சார் திரைப்படத் துறையில் பிரபலாமான மற்றும் நன்கு அறியப்பட்ட இயக்குனர், அவர் இக்கதாபாத்திரத்தை ஏற்பது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.” என்றார்.

 

சாணி காயிதம் படத்தில் நடிக்க இயக்குனர் செல்வராகவனை அணுகி தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சூழல் குறித்து அருண் கூறுகையில் “சித்தார்த் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்) செல்வா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் செல்வா சாரை அணுகுவது எளிதாக இருந்தது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்னேன், அவருக்கு கதை பிடிக்கவே விரும்பி ஏற்றார்” என்றார்.

 

ஒரு பிரபல இயக்குனரை இயக்கிய அனுபவத்தைப் பற்றி மேலும் கூறிய அருண், “நான் அவரை ஒரு இயக்குனராகப் பார்த்தேன், அவர் அட்வைஸ் தருவாரா ?  அல்லது எங்கள் பார்வைகள் வேறுபாட்டின் காரணமாக படைப்பு வேறுபாடுகள் இருக்குமா ? என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் தன்னை  வெறும் நடிகராகவும், என்னை இயக்குனராகவும் நினைத்து கொண்டு என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து எனது தேவையற்ற சந்தேகங்களை அவர் பொய்யாக்கினார்.” என்றார்.

 

ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் சார்பில்  தயாரிக்கப்பட்டுள்ள சாணி காயிதம் திரைப்படம் மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது

*தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் - கலைப்புலி எஸ்.தாணு*

 







*தயாரிப்பாளர் சபரிஷ் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார் - கலைப்புலி எஸ்.தாணு*


*வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு*


*தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ்*




கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.


இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.


இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.


சுப்பிரமணிய சிவா பேசும்போது, ‘இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி. சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம். கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது. பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி. இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன். சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார். நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்" என்றார்.


வர்ஷா பொல்லம்மா பேசும்போது, ‘ஒரு படம் எவ்வளவு நல்லாருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும். எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது. அவருக்கு நன்றி. சபரிஷ் தான் இப்படத்தின் மூலம். அவருக்கும் நன்றி. இயக்குநர் முதல்படமே மக்களுக்கான படமா எடுத்திருக்கீர். உங்களுக்கு வாழ்த்துகள். ஜிவி பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்சாய் செய்தேன். குணா மிகச்சிறப்பாக நடித்த்ருந்தார். அவருக்கு வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது. அனைவருக்கும் நன்றி" என்றார்.


நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது, ‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள். இந்தப்படத்திற்கு தாணு சார் தான் குலசாமி. ஜிவி சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார். இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது. நன்றி ஜி.வி.பிரகாஷ் சார். வர்ஷா கடினமான சூழலிலும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப்படத்தை வெற்றிகரமான படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.


இயக்குனர் மதிமாறன் பேசும்போது, "2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன். அப்போது வெற்றிமாறன் சார் சொன்னார், நீ படம் எடுக்கிற பாராட்டுவாங்க. அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று சொன்னார். இன்றைக்கு வெற்றிமாறனை நினைத்துப் பார்க்கிறேன். ஜிவி இந்தப்படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார். குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி. தாணு சார் தான் இந்தப்படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார். தாணு சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் டீம் அனைவருக்கும் மிக்க நன்றி" என்றார்.


ஜிவி பிரகாஷ் பேசும்போது, ‘நன்றி தாணு சார். சினிமாவில் அவர் ஒரு காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார். படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி’ என்றார்.


கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.


ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது" என்றார்.


*வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு*


*தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ்*




கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.


இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.


இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி. மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.


சுப்பிரமணிய சிவா பேசும்போது, ‘இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான். மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி. சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம். கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது. பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி. இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார். மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர். குணாநிதி மிகவும் நல்ல பையன். சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார். பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும். ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார். நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய். அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம். ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார். அவர் சிரித்தால் அழகாக இருக்கும். அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும். கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்" என்றார்.


வர்ஷா பொல்லம்மா பேசும்போது, ‘ஒரு படம் எவ்வளவு நல்லாருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும். எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது. அவருக்கு நன்றி. சபரிஷ் தான் இப்படத்தின் மூலம். அவருக்கும் நன்றி. இயக்குநர் முதல்படமே மக்களுக்கான படமா எடுத்திருக்கீர். உங்களுக்கு வாழ்த்துகள். ஜிவி பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்சாய் செய்தேன். குணா மிகச்சிறப்பாக நடித்த்ருந்தார். அவருக்கு வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது. அனைவருக்கும் நன்றி" என்றார்.


நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது, ‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி. குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள். இந்தப்படத்திற்கு தாணு சார் தான் குலசாமி. ஜிவி சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார். இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது. நன்றி ஜி.வி.பிரகாஷ் சார். வர்ஷா கடினமான சூழலிலும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார். மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார். படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப்படத்தை வெற்றிகரமான படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி" என்றார்.


இயக்குனர் மதிமாறன் பேசும்போது, "2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன். அப்போது வெற்றிமாறன் சார் சொன்னார், நீ படம் எடுக்கிற பாராட்டுவாங்க. அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று சொன்னார். இன்றைக்கு வெற்றிமாறனை நினைத்துப் பார்க்கிறேன். ஜிவி இந்தப்படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார். குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி. தாணு சார் தான் இந்தப்படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார். தாணு சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என் டீம் அனைவருக்கும் மிக்க நன்றி" என்றார்.


ஜிவி பிரகாஷ் பேசும்போது, ‘நன்றி தாணு சார். சினிமாவில் அவர் ஒரு காட்பாதர். மதிமாறனுக்கு முதல் நன்றி. இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி. குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி. சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார். படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி’ என்றார்.


கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, ‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன். இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன். வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.


ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார். முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார். 160 அடி பாயக்கூடியவன். சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும். கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார். அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும். அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன். இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன். இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது" என்றார்.

Tuesday, April 26, 2022

அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!





 அமேசான் ஒரிஜினல் வெளியிட்டிருக்கும் 'ஓ மை டாக்' என்ற படத்தை பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்..?!


அமேசான் ஒரிஜினல்ஸின் 'ஓ மை டாக்'- ஒரு நாய் குட்டியுடன் கூடிய அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி, நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 'நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையுடன் வெளியாகியிருக்கும் படம்' என குறிப்பிட்டு, 'ஓ மை டாக்' படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.


'ஓ மை டாக்' திரைப்படத்தில் சிம்பா என்ற நாய்க்குட்டிக்கும், அர்ஜுன் என்கிற சிறுவனுக்கும் இடையேயான அழகான கதையாக உருவாகி இருக்கிறது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.


1. ஒன்றிணைந்த மூன்று தலைமுறை நடிகர்கள்..!


'ஓ மை டாக்' - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை கொண்டு அற்புதமாக பின்னப்பட்ட அழகான கதை. பழம்பெரும் நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருப்பதும் ரசிகர்களின் வரவேற்பிற்கு காரணம். திரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றாக காண்பது ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.


2. சிம்பா மற்றும் ஆர்ணவ் இடையேயான காதல்


இப்படத்தில் நடித்திருக்கும் சிம்பா என்ற நாய்க்குட்டி அழகான தோற்றத்தில் இருப்பதையும், அர்ஜுன் வேடத்தில் நடிக்கும் அறிமுக நடிகர் ஆர்ணவ் விஜய் நாய்க்குட்டிகளுடன் கொண்டிருக்கும் பாசமும் திரையில் காண்பது அற்புதமான தருணங்கள். அறிமுக குழந்தை நட்சத்திரத்திற்கும், நாய் குட்டிக்கும் இடையேயான அற்புதமான பந்தம் மற்றும் ரசாயன கலவையை பார்த்த பார்வையாளர்கள், குறிப்பாக செல்லப்பிராணிகளின் காதலர்கள்.. கதையுடன் வித்தியாசமான தொடர்பை உணர்வுபூர்வமாக உணர்ந்தனர். மேலும் இந்த குடும்பத்தினர் உண்மையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து அதற்கு 'ஸ்னோ' என பெயரிட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இவரின் பந்தம் திரைக்குப் பின்னாலும் தொடர்ந்தது போற்றக்கூடியதாக இருந்தது.


3. அமேசான் பிரைம் வீடியோ உடன் சூர்யாவின் மற்றொரு வெற்றிகரமான தயாரிப்பு


நட்சத்திர தம்பதிகளான சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது பட நிறுவனத்தின் சார்பில் சிறந்த கதைகளை திரைக்குக் கொண்டு வருவதில் புகழ் பெற்றவர்கள். அமேசான் பிரைம் வீடியோ உடன் 'ஓ மை டாக்' மூலம், 'ஜெய்பீம்' போன்ற முக்கிய படத்தை கொடுத்த பிறகு வெற்றிகரமான தயாரிப்பாளர்களான அவர்கள், மீண்டும் ஒரு அழகான கதையுடன் இங்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இருவரும் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் வல்லவர்கள் என்பது மீண்டும் நிரூபித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் 'உடன்பிறப்பே', 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' போன்ற பல அற்புதமான கதைகளையும் கொண்டு வந்துள்ளார்.


4. குடும்ப பொழுதுபோக்கு மற்றும் செல்ல பிராணிகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.


'ஓ மை டாக்' படத்தை செல்ல பிராணிகளின் மீது எல்லையற்ற பாசம் கொண்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ரசிக்கக் கூடிய அழகான கதையாக இது அமைந்திருக்கிறது. குடும்ப பார்வையாளர்களை ஒரே இடத்தில், அவர்களின் வீட்டில் வசதியாக கொண்டுவர தயாரிப்பாளர்கள் ஒரு காரணத்தை கூறியுள்ளனர். செல்ல பிராணி பிரியர்களின் உணர்வுகளை தூண்டி, அவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அரவணைத்துக் கொள்வதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கும் ஒரு சரியான பொழுதுபோக்கு திரைப்படம் தான் 'ஓ மை டாக்'.


5. ஆத்மார்த்தமான இசை மற்றும் சரோவ்வின் அற்புதமான இயக்கம்!


இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் மனதை சாந்தப்படுத்தும் இசை. ஒரு நாய்க்கும் அதன் மீது பாசம் கொண்டவருக்கும் இடையேயான உணர்வையும், ரசாயன மாற்றங்களையும் சிறந்த முறையில் விவரித்துள்ளது. சரோவ் சண்முகத்தின் அற்புதமான இயக்கம் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. கதைக்கும் போதிய முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. 'ஓ மை டாக்' படத்தில் சித்தரிக்கப்பட்ட உணர்வுடன் சிறந்த முறையில் இணைந்து இருப்பதால் இசையை கேட்பதற்கு நன்றாக உள்ளது.


'ஓ மை டாக்' படத்தை ஜோதிகா - சூர்யா தயாரித்துள்ளனர். ஆர். பி. டாக்கீஸ் சார்பில் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ். ஆர். ரமேஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரைம் வீடியோ மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் இடையேயான 4 திரைப்பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 'ஓ மை டாக்' இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. இன்னும் பார்க்கவில்லை என்றால்... இப்போதே பாருங்கள். பார்த்து ரசியுங்கள்.

 




*Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham* 


The film is directed by Arun Matheswaran and produced under the banner of Screen Scene Media Entertainment, featuring Keerthy Suresh and Selvaraghavan in the lead roles 

Prime members can watch the film in Tamil, Telugu and Malayalam on Prime Video starting 6 May

MUMBAI, India— 26 April, 2022 —Prime Video today unveiled the trailer of Arun Matheswaran’s upcoming Tamil revenge action-drama, Saani Kaayidham. Produced under the banner of Screen Scene Media, the film stars Keerthy Suresh and Selvaraghavan in the lead roles. Saani Kaayidham will premiere exclusively on Prime Video starting 6 May, and will also be available as Chinni in Telugu and as Saani Kaayidham in Malayalam across 240 countries and territories. 


The story follows a heart-wrenching journey of Ponni (Keerthy Suresh) who works as a constable and lives with her five-year-old daughter Dhanna and her husband Maari, who works as a coolie in a rice mill. In one unfortunate night, she loses everything. To avenge the injustice done to her, she takes support of Sangaiah (Selvaraghavan), with whom she shares a bitter past. 


Speaking about her role, Keerthy Suresh said, “Saani Kaayidham is a complete departure from any of my past work, I play a raw and intense character. It was my role and director Arun’s distinctive storytelling style and vision that interested me to be a part of this hard-hitting film. To top it, I had director Selvaraghavan as my co-star – couldn’t get better! I have put in my heart and soul in this role and am thrilled that my fans across the world will get to watch Saani Kaayidham on Prime Video. I am excitedly waiting for audience’s reaction on 6 May.”


Director-turned-actor, Selvaraghavan said, “Saani Kaayidham is special to me as I faced the camera for the first time for this film, and to be able to portray a powerful character is a brilliant opportunity. It was also wonderful sharing screen space with the talented Keerthy Suresh, who has given an explosive performance. The director, Arun Matheswaran, is of course a master of his craft and has brought out the best in the story as well as the performers. I am eagerly looking forward to Saani Kaayidham’s premiere on the Prime Video.”

Helmed by director Arun Matheswaran, the film boasts of a exciting crew comprising of Yamini Yagnamurthy as Cinematographer, Sam CS as the music director, Ramu Thangaraj as Art Director, Nagooran Ramachandran as the Editor, Dhilip Subbarayan as Stunts director and Siddharth Ravipatti as the creative producer. 



Saani Kaayidham will join thousands of TV shows and movies from Hollywood and Bollywood in the Prime Video catalogue. These include Indian films Sharmaji Namkeen, Gehraiyaan, Shershaah, Sardar Udham, Jai Bhim, Gulabo Sitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, Soorarai Pottru, V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, Bheemasena Nalamaharaja, Mane No. 13, Penguin, Law, Sufiyum Sujatayum, Ponmagal Vandhal, and French Biriyani, among others. India’s number-one entertainment destination also offers Indian-produced Amazon Original series like Bestseller, Inside Edge Season 3, Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa, Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – Azaadi Ke Liye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, and Inside Edge. Award-winning and critically acclaimed global Amazon Original series like Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy's Jack Ryan, The Boys, Hunters, Fleabag, and The Marvelous Mrs. Maisel further buttress our focus on providing a multitude of choices to spend quality time and be entertained whenever and wherever. All this is available at no extra cost for Amazon Prime members. The service includes titles in Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi, and Bengali.

Prime members will be able to watch Saani Kaayidham anywhere and anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV, etc. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost. Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually, new customers can find out more at www.amazon.in/prime

ABOUT AMAZON PRIME VIDEO

Prime Video is a premium streaming service that offers Prime members a collection of award-winning Amazon Original series, thousands of movies and TV shows—all with the ease of finding what they love to watch in one place.  Find out more at PrimeVideo.com.

Included with Prime Video: Thousands of acclaimed TV shows and movies across languages and geographies, including Indian films such as Mahaan, Jai Bhim, Drushyam2, Narappa, Sara’s, Sarpatta Parambarai, Kuruthi, #HOME, Tuck Jagadish, Shershaah, Toofaan, Sardar Udham, Coolie No. 1, Gulabo Sitabo, Shakuntala Devi, Sherni, Durgamati, Chhalaang, Hello Charlie and Cold Case, along with Indian-produced Amazon Original series like Bestseller, Inside Edge Season 3, Mumbai Diaries 26/11, The Last Hour, Paatal Lok, Bandish Bandits, Breathe, Comicstaan Semma Comedy Pa, The Family Man, Mirzapur, Inside Edge and Made In Heaven. Also included are popular global Amazon Originals like The Tomorrow War, Coming 2 America, Cinderella, Borat Subsequent Moviefilm, Without Remorse, The Wheel of Time, American Gods, One Night in Miami, Tom Clancy's Jack Ryan, The Boys, Hunters, Cruel Summer, Fleabag, The Marvelous Mrs. Maisel and many more, available for unlimited streaming as part of a Prime membership. Prime Video includes content across Hindi, Marathi, Gujarati, Tamil, Telugu, Kannada, Malayalam, Punjabi and Bengali.

Instant Access: Prime Members can watch anywhere, anytime on the Prime Video app for smart TVs, mobile devices, Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV and multiple gaming devices. Prime Video is also available to consumers through Airtel and Vodafone pre-paid and post-paid subscription plans. In the Prime Video app, Prime members can download episodes on their mobile devices and tablets and watch anywhere offline at no additional cost.

Enhanced experiences: Make the most of every viewing with 4K Ultra HD- and High Dynamic Range (HDR)-compatible content. Go behind the scenes of your favourite movies and TV shows with exclusive X-Ray access, powered by IMDb. Save it for later with select mobile downloads for offline viewing.

Included with Prime: Prime Video is available in India at no extra cost with Prime membership for just ₹1499 annually or ₹179 monthly. New customers can find out more at www.amazon.in/prime and subscribe to a free 30-day trial.

SOCIAL MEDIA HANDLES:

@PrimeVideoIN 

LEAD COMMUNICATIONS CONTACT:

parekhra@amazon.com

pv-in-pr@amazon.com

சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா





சென்னை மாநகர காவல் துறைக்கு வாகனத்தை நன்கொடையாக வழங்கிய சூர்யா

சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்க உதவிய சூர்யா

வீடற்ற மக்களுக்காகவும், வீதியோரத்தில் வாழும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சென்னை மாநகர காவல் துறையின் சார்பில் இயங்கும் 'காவல் கரங்கள்' என்ற துறைக்கு நடிகர் சூர்யா, நவீன ரக கார் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.

சென்னை மாநகர காவல்துறை, 'காவல் கரங்கள்' என்ற இயக்கத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பல தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து, சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றவர்கள், மனவளம் குன்றியவர்கள், உடல்நலம் சரி இல்லாதவர்கள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன. மேலும் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், சாலையோரத்தில் இறந்து கிடக்கும் சடலங்களை கண்டெடுத்து, அதற்கு இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்தல் போன்ற பணிகளிலும் சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் தேவைக்காக சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகனம் ஒன்றை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். இந்த வாகனம் இவர்களுக்கான உணவு வழங்குவதற்கு பயன்படும். இந்த வாகனத்தை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால், டாக்டர் திருமதி சரண்யா ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கொடியசைத்து பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கி வரும் நடிகர் சூர்யாவின் சேவை, வீதியோர மற்றும் வீடற்ற மக்களுக்காக தொண்டாற்றி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றி வருவதற்கு சமூகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மனதார பாராட்டி பாராட்டுகிறார்கள்.

Monday, April 25, 2022

இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ளது.

 இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால்  அமைக்கப்பட்டுள்ளது.  



டிபி புரொடக்‌ஷன்ஸ் (DB Productions) நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் பணியாற்றி வரக்கூடிய மிகுந்த அனுபவம் கொண்ட நிறுவனமாகும். 100க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள், 30 ஹாலிவுட் படங்கள், 1000க்கும் அதிகமான விளம்பர படங்களில் டிபி புரொடக்ஷன்ஸ் பணியாற்றியுள்ளது. மேலும் கேமிங் துறையிலும் பல புதிய ஆப்களை உருவாக்கி இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ். அமெரிக்காவின் விசுவல் எபெக்ட் சொசைட்டியில் உறுப்பினராக இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ்.

இந்நிலையில் டிபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான இண்டெலி ஸ்டுடியோஸ் ( Intelli studios) தனது அடுத்த முயற்சியாக சென்னை பூந்தமல்லியில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 13000 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த அரங்கில் 60 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்ட அதிநவீன மெய்நிகர் திரை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நிரந்தர மெய்நிகர் திரை  கட்டமைப்புடன் கூடிய படப்பிடிப்பு அரங்கு அமைந்துள்ளது இந்தியாவில் இங்கு மட்டும் தான். இந்த அரங்கு வணிக பயன்பாட்டிற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம். இந்த மெய் நிகர் அரங்கில் படப்பிடிப்பை நடத்துவதன் மூலம் படத்தின் பட்ஜெட் பெருமளவு குறையும். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை கூட இந்த அரங்கில் மிக குறைந்த செலவில் அதே தரத்தில் படமாக்கி விடலாம். உலகின் எந்த மூலையில் இருக்கும் இடங்களையும் இந்த மெய்நிகர் திரையில் கொண்டுவரமுடியும். எனவே நேரடியாக சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பெரும்பகுதி பொருட் செலவை குறைக்க முடியும். கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் காட்சிகளை சில லட்சங்களில் எடுத்துவிட முடியும். அதேபோல் இந்த அரங்கில் எடுக்கப்படும் காட்சிகளை CGI (Computer graphics interference) செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலமும் பெரும்பகுதி பொருட்செலவும், நேரமும் குறைகிறது. அதேபோல் தட்பவெட்ப நிலைகளாலும் படப்பிடிப்பு எந்த சூழலிலும் தடைபடாமல் நடத்த முடியும். அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த படப்பிடிப்பு அரங்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று சொன்னாள் அது மிகையல்ல. சரியான திட்டமிடலுடன் ஒளிப்பதிவாளர், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தினால் பணம் நேரம் உழைப்பு எல்லாமே பெருமளவு குறையும்.

இந்த படப்பிடிப்பு அரங்கு குறித்து டிபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் ரவி கூறுகையில், " இப்படி ஒரு பிரம்மாண்டமான நிரந்தர வர்ச்சுவல் படப்பிடிப்பு அரங்கில் இந்தியாவின் அமைக்கப் படுவது இதுவே முதல் முறையாகும். பெரிய பெரிய அரங்குகளை அமைத்து பெரும் பொருட்செலவில் படங்களை உருவாக்குவது தவிர்த்து குறைந்த செலவில் லைவ் லொகேஷனில் எடுப்பது போன்ற காட்சிகளை எடுக்க முடியும். எங்களுடைய குழுவினர் பல காட்சிகளுக்கு தகுந்தாற்போல் டிஜிட்டல் செட்டை உருவாக்கி தருவார்கள். அதைக் கொண்டு காட்சிகளை எளிதாக படமாக்கலாம். ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் எடுக்கவேண்டிய காட்சிகளை கூட இங்கு ஒரே நேரத்தில் படமாக்க முடியும். அதாவது பத்து பதினைந்து நாட்கள் வெவ்வேறு தளங்களுக்கு சென்று எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எங்கு ஒரே நாளில் எடுத்துவிட முடியும். அதேபோல் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை கூட இங்கு படமாக்க முடியும். ஒளிப்பதிவாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான கேமராக்கள், லென்ஸ்கள், ஒளிப்பதிவு கருவிகளை இந்த அரங்கில் பயன்படுத்த முடியும்" என்றார்.

*சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’*





*சூர்யா தயாரிக்கும் முதல் இந்தி திரைப்படம் ’சூரரைப்போற்று’*

*இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’*

*படப்பிடிப்புடன் தொடங்கிய ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக்*

*அக்ஷய்குமார் நடிப்பில் தொடங்கிய ‘சூரரைப்போற்று’ ஹிந்தி பதிப்பு*

*சூர்யா கலந்துகொண்ட ‘சூரரைப்போற்று’ இந்தி பதிப்பின் தொடக்கவிழா*

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில்  நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள். 

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சதீஷ் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.

அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது. 

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கின் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார். அவரது வருகை படக்குழுவினரை உற்சாகப்படுத்தியது.

*எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.*

 




*எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அங்கீகாரம் அளித்த 'பயணிகள் கவனிக்கவும்' படக்குழுவினர்.*


‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தலைப்பு குறித்த விவகாரத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படும் என படக்குழுவினர் உறுதியளித்திருக்கிறார்கள். 


'பயணிகள் கவனிக்கவும்' பட தலைப்பு குறித்த விவகாரத்தில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் மற்றும் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் விவின் ஆகியோர் எழுத்தாளர் பாலகுமாரனின் வாரிசை சந்தித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுகமான தீர்வு காணப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.


இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது...


'' எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரான 'பயணிகள் கவனிக்கவும்' என்ற திரைப்படம், எதிர்வரும் 29. 4. 2022 ஆம் தேதியன்று ஆஹா டிஜிட்டல் தளத்தில், 'ஆஹா ஒரிஜினல்' படைப்பாக வெளியாகிறது. இந்நிலையில் 'பயணிகள் கவனிக்கவும்' என்ற படத்தின் தலைப்பில், 1993 ஆம் ஆண்டில் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய புத்தகம் ஒன்று வெளியானதாக தகவல்  இணையதளங்களில் பரவியது. இது தொடர்பாக எழுத்தாளர் பாலகுமாரனின் புதல்வர் சூர்யா பாலகுமாரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். இது எங்களின் கவனத்திற்கு வந்தது. மேலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் மூவரும் சூர்யா பாலகுமாரன் அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். எங்களை அவர்கள் உவகையுடன் வரவேற்றனர். 


அதனையடுத்து படத்தின் கதைக்கும், பாலகுமாரனின் பயணிகள் கவனிக்கவும் நாவலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயணிகள் கவனிக்கவும் என்பதை பயன்படுத்தியிருப்பதாகவும் விளக்கமளித்தோம்.  எங்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பாலகுமாரன் குடும்பத்தினர், நன்றி என்ற அறிவிப்பில் பாலகுமாரன் அவர்களது பெயரை வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு படத்தின் தொடக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நன்றி தெரிவிக்க ஒப்புக்கொண்டிருக்கிறோம் மேலும் இவ்விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ” என குறிப்பிடப்பட்டிருக்கிறது-. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இணையத்தில் விவாத பொருளாக பேசப்பட்டு வந்த 'பயணிகள் கவனிக்கவும்' என்ற பட தலைப்பு குறித்த விவகாரம் முடிவுக்கு வந்தது. 


சமூக வலைதள பக்கத்தில் பகிரப்படும் செய்திகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மையப்படுத்திய இந்த 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் கதை, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்ததும், படக்குழுவினர் இதனை சமூக வலைதளங்கள் மூலமாகவே கையாண்டு வெற்றி கண்டதை இப்படத்தின் வெற்றியாக கருதுகிறார்கள்.

Sunday, April 24, 2022

கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது " மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு...








கேஜிஎஃப், ஆர் ஆர் ஆர் ஓடினாலும் லாபம் தராது
" மெய்ப்பட செய் " இசை வெியீட்டு விழாவில் நடிகர் இயக்குநர் ராஜ்கபூர் பேச்சு...

மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என்று காழ்ப்புணர்ச்சியில் பேசாதீர்கள்  " மெய்ப்பட செய் " இசை வெளியீட்டு விழாவில்  இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு...


எஸ்.ஆர்.ஹர்ஷித்  பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து,  பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள்,  படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  

தயாரிப்பாளர் நடிகர் P.R. தமிழ் செல்வம் பேசியதாவது….
புதுமுகங்கள் நடித்து தயாரித்த படமாக இருந்தாலும் திரையுலக பிரபலங்கள் ராஜன் சார் உதயகுமார் சார் வந்து வாழ்த்தியதற்கும் ஆதரவு தருவதற்கும் நன்றி. 

நடன அமைப்பாளர் தீனா பேசியதாவது.. 
ஒரு சின்ன கதையை வைத்து மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் முழு உழைப்பை தந்துள்ளார். பரணி சார் எந்த காம்ப்ரமைஸும்  செய்ய மாட்டார். அற்புதமாக பாடல் தருவார் பாடலின் நீளத்தை குறைக்க நாங்கள் தான் மிகவும் கஷ்டப்படுவோம். படத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள், இப்படத்திற்கு இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… 
தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துகொண்டுள்ளார். தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது. இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துக்கள். இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிக தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. பாடலில் நாயகி தலையனையை பிய்த்து பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். நம்ம தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழை பார்த்து தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள் தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. ரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது ஆனால்  இந்த கோரோனா காலத்தில் பல உதவிகளை பெற்று தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை கேட்டு தயாரியுங்கள். இப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  




தயாரிப்பாளர் நடிகர் ஜெயம் எஸ் கே கோபி பேசியதாவது… 
இன்றைய தமிழ் சினிமாவின் நிலைமை எல்லோருக்கும் தெரியும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படைப்பை எடுத்ததற்கு எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நன்றி.  இளையராஜா ஒரு கருத்து தெரிவித்தபோது இளையராஜாவாவது மயிறாவது என்றார்கள் அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சினிமாவில் யாருமே மறுப்பு தெரிவிக்கவில்லை, ராஜன் அண்ணனை மேடையில் வைத்தே இதை சொல்கிறேன். சினிமாவில் யாரும் ஒன்றாக இல்லாததால் தான் இந்த நிலைமை இருக்கிறது. இப்படியே விட்டால் எல்லோரும் நாளை யாரை வேண்டுமானாலும் திட்டுவார்கள். பீஸ்ட் ஓடவில்லை என்கிறார்கள் அதற்கு காரணம் யூடுயுபர்கள் தான் எல்லோரும் சேனல் வைத்துள்ளார்கள் அவர்கள் படம் முடிந்ததும்
எப்படி என  கேட்டு படத்தை தோற்கடிக்கிறார்கள் இதெல்லாம் மாற வேண்டும். இங்கு ஒரு அஜண்டா இருக்கிறது மத்திய அரசை திட்ட வேண்டும், ஒரு கட்சிக்கெதிராக பேச வேண்டும் என அதிலேயே படம் செய்கிறார்கள் இதையெல்லாம் விடுத்து கதைகளில் கவனம் செலுத்த வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 


தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியதாவது….
சின்ன படம் பெரிய படம் எதுவும் இல்லை பெரிய ஹீரோ படத்திற்கு ஆகும் செலவை தான் இப்படத்திற்கும் செய்து எடுத்துள்ளார்கள். மைனா படமெல்லாம் பல கோடி வருமானம் தந்தது. ஆனால் எங்கு தவறு உள்ளது என்றால் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியதில் தான் தவறு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அதற்கு சங்கங்கள் உதவி செய்ய வேண்டும். இப்படம் விஷுவல் பார்க்க அவ்வளவு பிடித்துள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

ரேகா பிலிம்ஸ் சக்ரவர்த்தி பேசியதாவது… 
மெய்யப்பட செய் படம் பார்க்க அனைத்துமே நன்றாக உள்ளது, ஒளிப்பதிவு இயக்கம் எல்லாம் அருமையாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தப்படத்தை பற்றி உங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தால் அது படக்குழுவினருக்கு உறுதுணையாக இருக்கும் அதை செய்யுங்கள் நன்றி 


நாயகி மதுநிக்கா பேசியதாவது…
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இது எனது முதல் படம். செல்வம் சார் அவர்கள் தான் இந்தப்படத்தை இங்கு கொண்டு வர கஷ்டப்பட்டார். வேலன் சார் எல்லாத்தையும் பொறுமையாக சொல்லி தருவார். அவருக்கு நன்றி. ஆதவ் பாலாஜி சார் ஹீரோ, மிக நன்றாக நடித்துள்ளார். பரணி சார் இசை மிக அருமையாக வந்துள்ளது. பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. ஃபைட் மாஸ்டர்ஸ் ரொம்ப அருமையாக எடுத்துள்ளார்கள் நான் நிறைய அடி வாங்கியிருக்கிறேன். என்னை எல்லோரும் நன்றாக பார்த்து கொண்டார்கள் எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் பரணி பேசியதாவது… 
ஒரு மியூசிக் டைரக்டர் ஆசை என்னவாக இருக்கும் கம்பேக் தரவேண்டும், அவ்வளவு தான் இப்படத்தில் மிக உண்மையாக உழைத்துள்ளோம்  ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் ராஜ்கபூர் பேசியதாவது….
இந்தப்படத்த மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார் இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப்படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். கேஜிஎஃப் ஓடுச்சு, ஆர் ஆர் ஆர் ஓடுச்சு என்கிறார்கள் ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும்  படத்தில் கதை கேளுங்கள் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது அது மாதிரி இந்தப்படமும் வெற்றி பெறும். வாழ்த்துக்கள். 


நாயகன் ஆதவ் பாலாஜி கூறியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி.  நடன இயக்குனர், இசையமைப்பாளர், படதொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி. இது எனது முதல் படம், இந்த படம் புது ஹீரோ என்பதால் பலர் குறை சொன்னார்கள். என்னால் இந்த படம் தோற்க கூடாது என்று நினைத்தேன். இந்த படம் ஜெயித்தால், இன்னும் பல புதுமுகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி 


இயக்குனர் வேலன் கூறியாதாவது..,
இந்த கதை எப்படி ஜெயிக்குமா என்ற சந்தேகம் வந்த போது, தயாரிப்பாளர் என்னை முழுதாய் நம்பினார். இது என்னை விட இயக்குநருக்கு முக்கியமான படம்  இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று நம்பினார். இசையமைப்பாளர் பரணி சார் வேகமாக பணியாற்றினார். இசையமைப்பாளர் பரணி அவர்களுடைய பார்வை ஒன்றே போதுமே, படம் பார்த்த பின்னர் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைத்தேன். அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் வேல் அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். நான் கேட்பதை அப்படியே கொடுத்தார் ஆக்‌ஷன் இயக்குனர். நடன இயக்குனரும் எனக்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்.  நடிகர், நடிகையர் நன்றாக நடித்துள்ளனர். ராஜ்கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கபட்டது அல்ல. எல்லோருக்கும் நன்றி


தயாரிப்பாளர்  கே ராஜன் பேசியதாவது…

இயக்குனர் ராஜ்கபூர் தயாரிப்பாளர் நலனுக்காக படம் எடுத்தவர். ஆர் வி உதயகுமார் நல்ல படங்களாக எடுத்தவர்.  இப்படத்தில் இசை மற்றும் பாடல்வரிகள் அற்புதமாக இருந்தது. அதிக சம்பளம் வாங்கி கெடுப்பவர்கள், அதிகம் செலவு செய்பவர்கள் தான் கீழே போக வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், தமிழ் படங்கள் ஜெயிக்க வேண்டும். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் ஜெயிக்க வேண்டும். இப்படத்தில் ஹீரோயின் அழகாக இருக்கிறார் இப்பொதெல்லாம் நாயகியகள் ஆடியோ விழாவிற்கு வருவதில்லை.   நயன்தாரா ஆடியோ லாஞ்ச் வருவதில்லை. அவர்கள் வந்து  படம் ஓடாவிட்டால் அவர்களுக்கு கெட்ட பெயராம்.. அதற்காகவா  ஆறு கோடி வாங்குகிறார்.  நடிகர், நடிகையர்களை தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள் தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்கு செலவு செய்வதற்கு பதில், கதைக்கு செலவழிக்க வேண்டும். தயாரிப்பாளருக்காக படம் பண்ண வேண்டும். பிரபாஸ், ராம்சரண். போயபட்டி ஶ்ரீனு பட போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் குறைவான சம்பளத்திற்கு நடித்தனர். நடிகர்கள் போனிகபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ் தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை. இந்த படத்தின் பாடல்கள் அருமையாக உள்ளது. இம்மாதிரி சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி


இயக்குநர் பேரரசு பேசியதாவது…
ராஜன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும் இந்த வயதிலும் சளைக்காமல் வந்து அனைவரையும் பாராட்டுவது பெரிய விசயம் நலிந்த தயாரிப்பாளர்களின் வலியால் தான் இவ்வாறு பேசுகிறார் அது எனக்கு தெரியும். இப்படத்தில் பரணி மிக அருமையாக இசையமைத்துள்ளார். மெய்ப்பட செய் தயாரிப்பாளருக்கு முதல் படம் இப்படம் வெற்றி பெற்று அவருக்கு லாபம் தர வேண்டும். படத்தில் ஒரு முக்கியமான விசயத்தை சொல்ல வந்துள்ளார்கள் என்பது தெரிகிறது. இயக்குநர் வேலன் வெற்றிவேலனாக வர வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 



இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.


‘பார்வை ஒன்றே போதும்’ புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அற்புத இசையில் உமாதேவி, பரணி, வேலன் ஆகியோரின் வரிகளில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் பிரமிக்க செய்யும் வகையில் மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். ‘மிருதன்’ பட புகழ் கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...