Monday, April 25, 2022

இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால் அமைக்கப்பட்டுள்ளது.

 இன்டெல்லி ஸ்டுடியோஸ் - இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய 13000 சதுர அடியில் பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் டிபி புரொடக்சன்ஸின் திரு.வெங்கடகிருஷ்ணன் மற்றும் திரு.ரவி ஆகியோரால்  அமைக்கப்பட்டுள்ளது.  



டிபி புரொடக்‌ஷன்ஸ் (DB Productions) நிறுவனம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில் பணியாற்றி வரக்கூடிய மிகுந்த அனுபவம் கொண்ட நிறுவனமாகும். 100க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்கள், 30 ஹாலிவுட் படங்கள், 1000க்கும் அதிகமான விளம்பர படங்களில் டிபி புரொடக்ஷன்ஸ் பணியாற்றியுள்ளது. மேலும் கேமிங் துறையிலும் பல புதிய ஆப்களை உருவாக்கி இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ். அமெரிக்காவின் விசுவல் எபெக்ட் சொசைட்டியில் உறுப்பினராக இருக்கிறது டிபி புரொடக்ஷன்ஸ்.

இந்நிலையில் டிபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான இண்டெலி ஸ்டுடியோஸ் ( Intelli studios) தனது அடுத்த முயற்சியாக சென்னை பூந்தமல்லியில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 13000 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த அரங்கில் 60 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்ட அதிநவீன மெய்நிகர் திரை அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நிரந்தர மெய்நிகர் திரை  கட்டமைப்புடன் கூடிய படப்பிடிப்பு அரங்கு அமைந்துள்ளது இந்தியாவில் இங்கு மட்டும் தான். இந்த அரங்கு வணிக பயன்பாட்டிற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம். இந்த மெய் நிகர் அரங்கில் படப்பிடிப்பை நடத்துவதன் மூலம் படத்தின் பட்ஜெட் பெருமளவு குறையும். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களை கூட இந்த அரங்கில் மிக குறைந்த செலவில் அதே தரத்தில் படமாக்கி விடலாம். உலகின் எந்த மூலையில் இருக்கும் இடங்களையும் இந்த மெய்நிகர் திரையில் கொண்டுவரமுடியும். எனவே நேரடியாக சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பெரும்பகுதி பொருட் செலவை குறைக்க முடியும். கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் காட்சிகளை சில லட்சங்களில் எடுத்துவிட முடியும். அதேபோல் இந்த அரங்கில் எடுக்கப்படும் காட்சிகளை CGI (Computer graphics interference) செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலமும் பெரும்பகுதி பொருட்செலவும், நேரமும் குறைகிறது. அதேபோல் தட்பவெட்ப நிலைகளாலும் படப்பிடிப்பு எந்த சூழலிலும் தடைபடாமல் நடத்த முடியும். அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த படப்பிடிப்பு அரங்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்று சொன்னாள் அது மிகையல்ல. சரியான திட்டமிடலுடன் ஒளிப்பதிவாளர், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தினால் பணம் நேரம் உழைப்பு எல்லாமே பெருமளவு குறையும்.

இந்த படப்பிடிப்பு அரங்கு குறித்து டிபி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர் ரவி கூறுகையில், " இப்படி ஒரு பிரம்மாண்டமான நிரந்தர வர்ச்சுவல் படப்பிடிப்பு அரங்கில் இந்தியாவின் அமைக்கப் படுவது இதுவே முதல் முறையாகும். பெரிய பெரிய அரங்குகளை அமைத்து பெரும் பொருட்செலவில் படங்களை உருவாக்குவது தவிர்த்து குறைந்த செலவில் லைவ் லொகேஷனில் எடுப்பது போன்ற காட்சிகளை எடுக்க முடியும். எங்களுடைய குழுவினர் பல காட்சிகளுக்கு தகுந்தாற்போல் டிஜிட்டல் செட்டை உருவாக்கி தருவார்கள். அதைக் கொண்டு காட்சிகளை எளிதாக படமாக்கலாம். ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் எடுக்கவேண்டிய காட்சிகளை கூட இங்கு ஒரே நேரத்தில் படமாக்க முடியும். அதாவது பத்து பதினைந்து நாட்கள் வெவ்வேறு தளங்களுக்கு சென்று எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை எங்கு ஒரே நாளில் எடுத்துவிட முடியும். அதேபோல் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை கூட இங்கு படமாக்க முடியும். ஒளிப்பதிவாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான கேமராக்கள், லென்ஸ்கள், ஒளிப்பதிவு கருவிகளை இந்த அரங்கில் பயன்படுத்த முடியும்" என்றார்.

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...