*நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது* -*நடிகர் அசோக் செல்வன் வியப்பு*

*நித்தம் ஒரு வானம் படத்தின் படபிடிப்பின் போது பனி அதிசய சம்பவங்கள் நடைபெற்றது* - *நடிகர் அசோக் செல்வன் வியப்பு* *நித்தம் ஒரு வானம் படம் பார்த்தப்பிறகு , பார்வையாளர்களிடத்தில் நேர்நிலையான தாக்கம் ஏற்படும்* - *இயக்குநர் ரா. கார்த்திக் நம்பிக்கை* வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்ன...