*‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு*
மெகா ஸ்டார் சிரஞ்சீவி - மாஸ் மகாராஜா ரவிதேஜா - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வால்டேர் வீரய்யா' எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் 'மெகா 154' என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், 'வால்டேர் வீரய்யா'வை வார்த்தைகளால் கேலி செய்கிறார். பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அந்தக் கப்பலுக்குள் வருகை தந்து, உரிய பதிலடியை அவரது பாணியில் அளிக்கிறார். சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் பழைய உற்சாகத்திற்கு வந்துவிட்டார் என்றேச் சொல்லலாம். ஏனெனில் அவரது தோற்றம், நடை உடல் மொழி, கதாபாத்திர படைப்பு.. ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விசயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை காண முடியாவிட்டாலும் , படத்தின் வெளியிட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். 'வால்டேர் வீரய்யா' அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் மாஸ் மகாராஜா ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, 'ராக்ஸ்டார்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
ஜி. கே. மோகன் மற்றும் எம் பிரவீண் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றும் இந்த படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார். இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை நிரஞ்சன் தேவராமனே கவனிக்க, ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தின் டைட்டிலுக்கான டீசர், வெளியான இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
https://youtu.be/PlS6KkFfMOM
No comments:
Post a Comment