Sunday, December 19, 2021

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்  



டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு பட தயாரிப்பாளர்


டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி


தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி (டிச15-18) சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் நடைபெற்றது. 


இதன் இறுதிப்போட்டியில் சபீர் தன்கோட்டை 395-362 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஹபீபுர் ரஹ்மான்.


முன்னதாக இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்னல் என்கிற அடிப்படையில் முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது 


இதில் முதல் அரையிறுதி போட்டியில். முதலிடத்தில் இருந்த ஜே.பார்த்திபன் நான்காவது இடத்தில் இருந்த ஹபீபுர் ரஹ்மானுடன் மோதி 69 பின்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்..


இருப்பினும் இந்த போட்டித்தொடர் முழுவதுமாக 18 போட்டிகள் விளையாடிய ஜே.பார்த்திபன் 214.6 புள்ளிகள் (3863 பின்பால்) பெற்றதுடன் இரண்டு சிறப்பு பரிசுகளையும் பெற்றார். 


இரண்டாவது அரையிறுதி போட்டியில் 2-வது இடத்தில் இருந்த அக்ரமுல்லா பெய்க்கும் 3வது இடத்தில் இருந்த சபீர் தன்கோட்டும் மோதியதில் சபீர் தன்கோட் 122 பின்கள் என்கிற மாபெரும் வித்தியாசத்தில் (548-426) அக்ரமுல்லா பெய்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தார். 


தொடர்ந்து இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்னல் என்கிற அடிப்படையில் இறுதிப்போட்டி நடைபெற்றது. 


இதில் முதல் போட்டியில் ஹபீபுர் ரஹ்மான் 15 பின்கள் வித்தியாசத்தில் (196-181) ஷபீரை தோற்கடித்தார். இரண்டாவது போட்டியிலும் தனது விறுவிறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹபீபுர் ரஹ்மான் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, 10வது பிரேமில் மூன்றுமுறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்ற ஷபீருக்கு எதிராக தனது வெற்றியை உறுதி செய்தார்..   


இந்த இரண்டாவது போட்டியில் 181 பின்கள் எடுத்த ஷபீர் தன்கோட்டுக்கு எதிராக 15 பின்கள் வித்தியாசத்தில் 199 பின்கள் எடுத்த ஹபீபுர் ரஹ்மான், மொத்த புள்களின் அடிப்படையில் 33 பின்கள் வித்தியாசத்தில் (395-362) அவரை தோற்கடித்தார்.


6 போட்டிகள் கொண்ட பிரிவில் அதிகபட்ச சராசரியாக 216 புள்ளிகளும் 18 போட்டிகள் கொண்ட பிரிவில் அதிகபட்ச சராசரியாக 214.6 புள்ளிகளும் பெற்று இரண்டு சிறப்பு பரிசுகளையுமே ஜே.பார்த்திபன் கைப்பற்றினார்.


சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

No comments:

Post a Comment

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை, ஸ்ட்ரீம் செய்து வருகிறது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த  "சூக்ஷ்மதர்ஷினி"  எனும் அட்டகாசமான ஃபேமிலி டிராமா திரில்லரை,...