ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம் தமிழில் இம்மாதம் வெளியாகிறது!
எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத் இணைந்து நடித்தால் எப்படி பரபரப்பாக இருக்குமோ, அப்படி பரபரப்பாக இருக்கும் ஜாக்கி சான் - அர்னால்ட் நடித்த "அயர்ன் மாஸ்க்" படம். இருவரும் வித்யாசமான தோற்றத்தில் நடிக்கிறார்கள்!
சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த இப்படம் தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க வருகிறது!
வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.!
டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை!
இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள்!
ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது!
PRO_கோவிந்தராஜ்
No comments:
Post a Comment