பட புரோமோசனுக்கு வராமல் டிமிக்கி கொடுத்துவரும் கதாநாயகி சுபிக்ஷா படக்குழுவினர் வேதனை.
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை " என்று பெயர் வைத்துள்ளனர்.
நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது அக்ரிமெண்டில் பட புரோமோஷன்களுக்கு வருவோம் என்று கையெழுத்து போட்டாலும் பெரும்பாலும் அதை கடைபிடிப்பதில்லை அந்த வகையில் கடுகு படத்தில் நாயகியாக நடித்த சுபிக்ஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெயியீட்டிற்கு வருமாறு, தயாரிப்பாளரும், இயக்குனரும், நானும் மாறி மாறி அழைத்தும் வரவில்லை, நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று ஏமாற்றுகிறார். இதற்கிடையே இசை வெளியீடு முடிந்து தற்போது படம் வருகின்ற 31 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன்களில் கலந்து கொண்டு படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டும் வர மறுக்கிறார். அவருக்கு எந்தவொரு சம்பள பாக்கியும் இதுவரை வைக்கவில்லை இருந்தும் இதுபோல் நடந்து கொள்கிறார். என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இது சம்மந்தமாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க போகிறோம். இந்த படத்தை உருவாக்க நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம் அதன் பலனாக 8 விருதுகளும் வாங்கியுள்ளது எங்களது படம் என்கிறார் மனவேதனையுடன் நாயகன் ருத்ரா.
ஒளிப்பதிவு - பிஜு விஸ்வநாத்
இசை - ராஜேஷ் அப்புகுட்டன் - ருத்ரா
பாடல்கள் - கட்டளை ஜெயா
எடிட்டிங். - சுதாகர்
கலை இயக்கம் - மகேஷ் ஸ்ரீதர்
நடனம் - ராபர்ட், ரேகா
ஸ்டண்ட் - விஜய்
வசனம் மற்றும் இணை இயக்கம் - L.கணபதி
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை - அன்பு
தயாரிப்பு - நுபாயஸ் ரகுமான்
THREE FACE Creations Release
கதை, திரைக்கதை, இயக்கம் - மகேஷ் பத்மநாபன்.
No comments:
Post a Comment