Monday, January 3, 2022



ரோட்டரி இன்டர்நேஷனலின் ஒரு அங்கமாக *Rotary Club of Chennai Prestige (RCCP)*  மனிதாபிமான சேவையை வழங்கவும், உலகம் முழுவதும் நல்லெண்ணம் மற்றும் அமைதியை முன்னேற்றுவதற்கும், வணிக மற்றும் தொழில்முறை தலைவர்களை ஒன்றிணைப்பதையும்  நோக்கமாக கொண்டு நிறுவப்பட்டது.



 பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு அவர்களின் தேவையின் அடிப்படையில் ரோட்டரி பிரஸ்டிஜ் தொடர்ந்து பல்வேறு சமூக சேவைகளை வழங்கி வருகிறது.


ரோட்டரி பிரஸ்டிஜ் இன் சமூக சேவையின் ஒரு பகுதியாக, அதன் கெளரவ உறுப்பினர் *Rtn. PHF. ஸ்ரீராமன் அவர் மனைவி Ann அகிலா ஸ்ரீராமன்* அவர்களுடன் இணைந்து, தங்கள் சுய சேமிப்பு மூலம் *ராணுவ தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக* வழங்க மனதார ஒப்புக்கொண்டனர். 



இந்த நன்கொடையை வழங்கி கௌரவிப்பதற்காக  *Rtn PHF சுரேஷ்* இன் தலைமையில் நடத்தப்பட்ட மாபெரும் நிகழ்ச்சியில்.  ரோட்டரி மாவட்ட அதிகாரிகள் முன்னிலையில்,  ரோட்டரி பிரஸ்ட்டிஜ் உறுப்பினர்கள் குடும்பத்துடன்,  இராணுவ அதிகாரிகள், நண்பர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றுப்  பேசிய ரோட்டரி பிரெஸ்டிஜின்  காரியதரிசி Rtn விஸ்வநாதன், இது போன்ற தன்னலமற்ற பொது சேவையின் மகத்துவத்தையும், இது போன்ற நிகழ்ச்சிகளால் மேலும் பலரும் பொது சேவைகள் செய்ய முன்வர முனைவார்கள் என்று கூறினார்.


நிகழ்ச்சியில் தென் இந்தியாவின் இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் A.அருண், SM, YSM, VSM அவர்களிடம் *25 லட்ச ரூபாய்க்கு* ஒரு காசோலை முதல் தவணையாக வழங்கப்பட்டது.


காசோலையை வழங்கி பேசிய *Rtn. PHF. ஸ்ரீராமன்*, ஒவ்வொரு இந்திய குடிமகனும் காக்கும் இந்திய ராணவத்தின் பெருமைகளை விரிவாக பேசினார்.  இது போன்ற ஒரு நன்கொடை அளிக்க தூண்டுகோலாக இருந்த தம் மனைவி திருமதி அகிலா ஶ்ரீராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து மேலும் ரூ.75 லட்சம் வரும் 2022 ஜூலை மாதத்தில் வழங்க இருப்பதாகவும் கூறினார். 


இந்திய ராணுவத்தின் சார்பாக காசோலையை பெற்றுக் கொண்டு பேசிய தென் இந்திய இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் A.அருண், SM, YSM, VSM அவர்கள் தன்னலமற்ற தொண்டு என்பதற்கே முத்தாய்ப்பான நிகழ்வு இது என்று கூறினார். பொருட்செல்வம் அடைந்தோர் ஏராளமானபேர் இருந்தபோதிலும் அதில் ஒரு பகுதியை Rtn ஶ்ரீராமன் போன்ற ஒரு சிலர் இது போல் பொது சேவைக்கு கொடுப்பது மிகவும் உன்னதமான செயல் என்று பாராட்டி பேசினார்.


நிகழ்ச்சியில் ரோட்டரியின் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் Rtn நாசர், Rtn சந்திரமோகன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள். ரோட்டரி பிரஸ்டிஜ் முன்னாள் தலைவர் Rtn நந்தகுமார் நன்றியுரை கூறினார். 


தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...