கோவர்தனி மூவிஸ் சார்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வசனம் எழுதி, "வேலூர் வீரா" என்ற படத்தை பிரசாத் தயாரிக்கிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து, பிழைப்பு நடத்துவதற்காக கணவன், மனைவி இருவரும் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். ஒருகட்டத்தில் கர்ப்பிணியான அவள் கண்முன்னே கணவனை கொலை செய்கின்றனர் வில்லன் கோஷ்டி. இதைக் கண்ட ஹீரோ, அநியாயத்தை தட்டிக் கேட்கிறார். அதனால் பிரச்னைகள் வருகிறது. நிறை மாத கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவதில் ஏற்படும் சவால்களை ஆக்க்ஷனோடு விறுவிறுப்பாக கதை, திரைக்கதை எழுதி, என்.பிரசாந்த் ஆர் இயக்குகிறார்.
ஹீரோவாக என்.பி.ஆர் நடிக்கிறார். பாகுபலி பிரபாகர் வில்லனாக நடிக்கிறார். கர்ப்பிணி பெண்ணாக ஆதித்தி மைக்கேல் நடிக்கிறார். பிரபல பாடகர் எஸ்.பி.பி மைத்துனர் சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மீனா வாசு, ரவி பிரகாஷ், தயானந்த், கிரிதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
என்.சுப்பா ரெட்டி, மடக்கா அரவிந்த் இருவரும் நிர்வாக தயாரிப்பு செய்கிறார்கள். திருமதி.அருணா பிரசாத், தேஜோ இருவரும் இணைத் தயாரிப்பை மேற்கொள்கின்றனர். என்.எஸ்.பிரஷு இசையமைக்கிறார். வி.கே.ராமராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கேரி பி.ஹெச் எடிட்டிங்கை கவனிக்கிறார். வடிவமைப்பு வெங்கட் ஆர்.கே, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
வேலூர் பகுதிகளில் "வேலூர் வீரா" படபிடிப்பு வேகமாக நடைப்பெற்று வருகிறது!
No comments:
Post a Comment