முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி "
படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது " சிட்தி " இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி " என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராதே மணியின் மகனான ராஜ்குமார் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார் அவர் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - K V.மணி
கார்த்திக் ராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களையும் சினேகன் எழுதியிருக்கிறார்.
எடிட்டிங் - SP அஹமது.
கலை - தென்னரசு
ஸ்டண்ட் - S.சுரேஷ்
நடனம் - ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை - ஹக்கீம் சுலைமான்.
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - மகேஷ்வரன் நந்தகோபால்.
தயாரிப்பு நிறுவனம் - சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ்.
லைன் புரொடியுசர் - P.V. தமிழ்செல்வன் & வேலவன் தியாகு
கதை, திரைகக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - நவாஸ் அஹமது
படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது பகிர்ந்து கொண்டவை...
“நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி” நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இதுவரை தன்ஷிகா நடித்திராத கதாபாத்திரம் இந்த படத்தில். செண்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் இது.
படப்பிடிப்பு கம்பத்தில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment