பெயரால் எந்த படமும் ஜெயிக்காது நல்ல கதை இருக்க வேண்டும் ரஜினி இசை வெளியீட்டு விழாவில் K.ராஜன் பேச்சு..
வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் பெயரில் ஒரு அருமையான ஆக்சன் கமர்சியல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ரஜினி’ திரைப்படம். இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, இன்று இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா, நடிகை ஜெயச்சித்ரா, இசையமைப்பாளர் இமான், கல்விதந்தை AC சண்முகம், இயக்குநர் RV உதயகுமார், T. சிவா, , நடிகர் ஜீவன், அடி தடி முருகன், தீனா, ஜாகுவார் தங்கம், ஜான் மேக்ஸ், சக்தி சிதம்பரம், திருமலை, உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…
ரஜினி என்ற பெயரை கேட்டவுடனே வெற்றி உறுதியாகிவிட்டது, ஆம் ரஜினி என்ற பெயர் உலகம் முழுதும் ஓங்கி ஒலிக்க கூடிய பெயர், அவருக்கு இன்று திருமண நாள் இந்த இனிய நாளில் “ரஜினி” திரைப்படத்தின் இசை வெளியீடு நடப்பது சிறப்பு. தம்பி பழனிவேல் தொடர்ந்து திரைப்படங்கள் எடுக்கும் நல்ல பண்பாளர், இந்த பெயருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் படமெடுக்கும் திறமை பெற்றவர் இயக்குநர் A.வெங்கடேஷ். ரஜினி பெயரில் நடிக்கும் சிறப்பை பெற்றிருக்கிறார் தம்பி விஜய் சத்யா. இசையமைப்பாளர் அம்ரீஷ் கமர்ஷியல் இசை என பட்டம் சூட்டிய நிலையில் என்னால் மெலடி தர முடியும் என சித் ஶ்ரீராம் வைத்து அழகான பாடல் தந்துள்ளார். இப்படம் அருமையான வெற்றியை பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கல்விதந்தை AC சண்முகம் பேசியதாவது…
திரு வெங்கடேஷ் அவர்கள் இந்தப்படத்தினை நல்ல முறையில் கொண்டு வந்துள்ளார்கள். என் நண்பர் ரஜினி அவர்கள் திருமண நாளில் இந்தப்பட விழா நடக்கிறது. அவருடைய தாக்கம் இந்தப்படத்திலும் இருக்கும். நடிகர் விஜய் சத்யாவிடம் ஜெயம் ரவி சாயல் இருக்கிறது. அவர் சினிமாவில் கண்டிப்பாக நல்லதொரு இடத்தை அடைவார். ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அம்சம் அவரிடத்தில் தெரிகிறது. ஒரு தாயின் பிரசவம் போல் தான் ஒவ்வொரு படமும் இப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியிருக்கிறார்கள். இசை சேனல்களில் பாடலில் இசையமைப்பாளர், பாடகர் பெயர் போடுகிறார்கள் ஆனால் தயாரிப்பாளர் பெயர் போடப்படுவதில்லை இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் ஜீவன் பேசியதாவது…
இந்தப்படம் பெயர் ரஜினி அதை தவிர இந்தப்படத்திற்கு எந்த விளம்பரமும் தேவை இல்லை. அந்தப்பெயரே படம் பற்றி சொல்லிவிடும். இந்தப்பட ஹீரோ விஜய் சத்யா, நடிகை ஷெரீன் இருவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் வெங்கடேஷ் அவர்களுடன் படம் செய்ய ஆசை, நீண்ட காலமாக தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. அது விரைவில் நடக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..
இயக்குநர் வெங்கடேஷ், மற்றும் தயாரிப்பாளர் பழனிவேல் இருவருக்காக தான் இங்கு வந்தேன். இந்தப்படம் பற்றி சொன்னபோது ஏதோ சின்ன படம் எடுக்கிறார்கள் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்தப்பட இன்விடேசன் பார்த்த போது பிரமிப்பாக பிரமாண்டமாக இருந்தது. இங்கு வந்து பார்த்த போது ஏய் பகவதி போல் பிரமாண்டமாக தெரிகிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். தயாரிப்பாளர் படமெடுப்பது இன்றைய சூழலில் கடினமாக இருக்கிறது. நாயகன் பார்க்க அப்படியே ஜெயம் ரவி போல் இருக்கிறார். டிரெய்லர் காட்சிகள் எல்லாம் அருமையாக இருந்தது, தனுஷிடன் நடித்தவர்கள் அம்மாவாக கூட நடிக்க முடியாமல் இருக்கும் போது அவருடன் நடித்த நடிகை ஷெரீன் புதுமுக நாயகி போல் அழகாக இருக்கிறார். மிக நல்ல கலைஞர்கள் இணைந்து மிக பிரமாண்ட படைப்பாக இப்படம் செய்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது…
சினிமாவில் மாவீரன், மகா தைரியசாலி தயாரிப்பாளர் பழனிவேல் தான். கொரோனா கடின காலத்திலும் இரண்டு படங்கள் எடுக்கிறார். இயக்குநர் A.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குநர், மக்கள் விரும்பி பார்க்ககூடிய படங்களை கமர்ஷியலாக தரக்கூடியவர் இருவரும் இணைந்து ஒரு நல்ல படம் தருகிறார்கள். ரஜினி என பெயர் வைத்ததால் இந்தப்படம் ஜெயிக்கும் என்கிறார்கள் இல்ல பெயரால் எந்தப்படமும் ஜெயிக்காது கதை இல்லாவிட்டால் எந்த பெரிய நடிகர் படமும் ஜெயிக்காது. கதை தான் முக்கியம். A.வெங்கடேஷ் கண்டிப்பாக கதை வைத்திருப்பார். நாயகனுக்கு உண்டான் எல்லா அம்சமும் விஜய் சத்யாவிடம் இருக்கிறது. அந்த தம்பியை பார்க்கும் போதே ஒழுக்கம் நிறைந்தவர் என தெரிகிறது. தயாரிப்பாளரை மறக்காமல் இருந்தால் தான் நீங்கள் வளர்வீர்கள், எல்லோரும் நல்லா வர வேண்டும் அதே நேரம் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காணாமல் போன ஷெரீன் சேலை கட்டி வந்திருக்கிறார். சேலை கட்டிய தமிழ் பெண்ணாக மாறுங்கள் தமிழ் சினிமா உங்களை வாழவைக்கும்.இப்போது கதை இல்லாமல் சமீபத்தில் வந்த பிரமாண்ட படமெல்லா ஹீரோ காலி. ஆனால் A.வெங்கடேஷ் கதை இல்லாமல் படமெடுக்க மாட்டார். இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் அம்மா T. சிவா பேசியதாவது…
இது ஒரு மகிழ்ச்சியான குடும்ப விழா, இயக்குநர் வெங்கடேஷ் அவர்களின் தீவிர ரசிகன். கமர்ஷியலாக நிறைய படங்கள் எடுத்து தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என பலரை வாழவைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமைய வேண்டும், நண்பர் பழனிவேல் பலமுறை வீழ்ந்தாலும் மீண்டும் படமெடுப்பவர், அவர் மாதிரி ஒரு சிலரால் தான் சினிமா உயிரோடு இருக்கின்றது. அவரது முயற்சிக்கும், உழைப்புக்கும் இந்தப்படம் ஒரு பெரிய வெற்றியை தரவேண்டும். நாய்கன் நல்ல ஸ்மார்ட்டாக இருக்கிறார். விழா நாயகன் இசையமைபபாளர் அம்ரீஷ் அவருடன் இணைந்து நான் வேலை செய்யும் போது நல்ல பாடல்கள் வரும். அவர் கடினமான உழைப்பாளி, அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு வரவேண்டும். இங்கு இருக்கும் இசையமைப்பாளர் இமானை பார்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக்கொள்ளுங்கள், அவருக்கு வாழ்த்துக்கள். இந்தப்படம் நல்ல வசூல் பெற்று பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் RV உதயகுமார் பேசியதாவது…
ஒரு அழகான மேடை வர்ணனையாளரிலிருந்து நாயகன் நாயகி வரை அனைவரும் அழகாக இருக்கிறார்கள். இந்தப்படம் சூப்பர்ஸ்டார் படம் மாதிரி மிகப்பெரிய வெற்றி பெறும், சினிமாவில் ரஜினி வேறு வெற்றி வேறு இல்லை. அந்த பெயரை பிடித்து வைத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மும்பையில் இன்னொரு படமும் எடுத்துகொண்டிருக்கிறார்.
இயக்குநர் வெங்கடேஷ் அழகாக படமெடுத்துள்ளார். முதல் படத்திலேயே சிக்ஸ் பேக்குடன் வந்துள்ளார் நாயகன் விஜய் அவருக்கும் படத்தில் உழைத்துள்ள அனைவர்க்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
நடிகை ஷெரீன் பேசியதாவது…
படத்தில் விஷிவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேற்றியிருக்கிறேன். உண்மையில் அவர் மிக மிக அழகாக இருக்கிறார். எங்க டைரக்டர் அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். சூப்பரான இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம் தியேட்டரில் வந்து படம் பாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது…
ரஜினி தலைவர் டைட்டில் எங்களுக்கு கிடைத்தது சந்தோசம், அவரது திருமண நாளில் இந்த விழா நடப்பது மகிழ்ச்சி. தலைவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் பயிற்சி எடுத்து உடலை அட்டகாசமாக வைத்துள்ளார். நான் வெங்கடேஷ் சாரின் ரசிகன். மாஸ் கமர்ஷியல் இசையமைப்பாளர் என சொல்கிறார்கள் ஆனால் இந்தப்படத்தில் ஒரு மெலடி பாடல் தந்தார் சித்ஶ்ரீராமை பாடவைத்துள்ளோம், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். என் அம்மாவிற்கு நன்றி. இப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. நாயகி ஷெரீன் மிக அழகாக இருக்கிறார். அவரை வைத்த எடுத்த பாடலுக்கு ஷீட்டிங்கு என்னை கூப்பிடவில்லை, இனிமேல் என்னையும் கூப்பிடுங்கள். படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், எல்லோருக்கும் நன்றி
நாயகன் விஜய் சத்யா பேசியதாவது…
இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த அண்ணன் பழனிவேல் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுத்தவர், என்னை வைத்து படமெடுப்பாரா என நினைத்தேன், என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. இசையமைப்பாளர் அம்ரீஷ் உடைய அழகான பாடலுக்கு நன்றி. இப்போது தான் பயணம் ஆரம்பித்துள்ளது வெற்றிப்பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் A. வெங்கடேஷ் பேசியதாவது..
இந்தப்படத்தின் கதையை தயாரிப்பாளர் தரப்பில் ரெடி செய்து வைத்திருந்தார்கள், நாயகன் விஜய் சத்யா தான் என்னிடம் இந்தக்கதையை சொன்னார். கதை சொன்னவுடன் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ரஜினி டைட்டில் இந்த படத்திற்கு பொருத்தமாக ஈர்ப்புடன் இருந்தது. பழனிவேல் சார் தான் இந்த வாய்ப்பு தந்தார். எல்லாவற்றையும் இயக்குநர் முடிவுக்கு விட்டுவிடுவார். அவருக்கு வாத்தியார் எனும் படம் செய்தேன். அந்த படம் போல் இந்தப்படம்ஜ்ம் அவருக்கு பெரிய அளவில் லாபம் சம்பாதித்து தரும், இமான் சார் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. வாத்தியார் படத்திற்கு அவர் தான் இசை அன்று எப்படியோ இன்றும் அப்படியே பழகுகிறார். வெற்றி வந்தால் எல்லோரும் மறந்து விடுவார்கள், என் வாழ்க்கையில் அது நடந்துள்ளது அப்படி இல்லாமல் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ஷெரீன் மிக சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். ஒளிப்பதிவு, எடிட்டிங் அபாரமாக செய்துள்ளார்கள். 30 நாளில் இந்தப்படத்தின் ஷீட்டிங்கை முடித்துள்ளேன். அம்ரீஷ் அருமையான இசையை தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
இத்திரைப்படம் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில், ஆக்சன், காமெடி, கலந்த குடும்ப திரைப்படமாக, திரையரங்கில் ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடும் படமாக வரவுள்ளது.
No comments:
Post a Comment