Thursday, March 10, 2022

தர்மபுரியில் விறு விருப்பான படப்பிடிப்பில்

 தர்மபுரியில் விறு விருப்பான படப்பிடிப்பில்






அஜீத்  நாயக் - பிரஜன்  நடிக்கும் அரசியல் கலந்த திரில்லர் படம்.


ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் A.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் - கென்னடி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கதாநாயகர்களாக  ஆஜீத் நாயக், பிரஜன் இருவரும்   நடிக்கிறார்கள். அஜித் நாயக் மாடல் துறையில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 ரஷ்மி, பிரகயா நயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் மற்றும் இன்னும் எராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு - வினோத் குமார்

இசை - விஜய் யாட்லீ ( இவர் இசையமைப்பாளர் A.R.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர். கன்னடத்தில் 7 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம்  தமிழில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.


பாடல்கள் - கென்னடி

மக்கள் தொடர்பு - மணவை புவன்.

இணை தயாரிப்பு - சித்தார்தா 

தயாரிப்பு - A.V.சூரியகாந்த்


கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்கள் -  ஷங்கர்   மற்றும்  கென்னடி இருவரும்.


படம் பற்றி  இயக்குனர்கள் ஷங்கர் மற்றும்  கென்னடி கூறியதாவது..

அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதை இது.

 தவறான அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால்  சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம்.

இணை பிரியா இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல்  வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் இறுதியில் அவர்களது நட்பு என்னவானது எப்பது படத்தின் திரைக்கதை.

நட்பின் ஆழத்தை இதுவரை யாரும் சொல்லிறாத ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்கிறோம்.

நிச்சயம் இந்த படம் வெளியான பிறகு படம் பார்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு இப்படியொரு நட்பு கிடைக்கவில்லையே என்று  நிச்சயம் ஏங்குவார்கள் என்கிறார்கள் இயக்குனர்கள் ஷங்கர் மற்றும்  கென்னடி.

படப்பிடிப்பு தர்மபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...