தீ இவன் படத்திற்கு நான்கு சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்திய நவரச நாயகன் கார்த்திக்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில்" தீ இவன் " நவரச நாயகன் கார்த்திக், சுகன்யா, ராதா ரவி, சுமன்.j, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த T. M. ஜெயமுருகன் இப் படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு மொகமத் இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலி மிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு டப்பிங் பேசி முடித்த பிறகு படத்தை பற்றி நவரச நாயகன் கார்த்திக் நம்மிடம் பகிர்ந்தவை....
ஜெயமுருகன் .T. M அவர்கள் " தீ இவன் " கதையை சொன்ன போதே கதையில் உள்ள ஆழத்தை நான் உணர்ந்தேன். தமிழ் கலாசாரத்தின் நமது வாழ்வியலை அழகாக வடிவமைத்து இருந்தார். அதேபோல் படப்பிடிப்பு சமயத்தில் எந்த காம்பர்மைஸ்சும் இல்லாமல் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கினார். கொரானாவின் நெருக்கடியான நேரத்திலும் அனைத்து தேவைகளையும் எனக்குமட்டுமல்ல அனைவருக்கும் செய்து கொடுத்து படப்பிடிடப்பை அழகாக நிறைவு செய்துள்ளார். நான் இப்படத்தின் டப்பிங் பேசியபோது, காட்சி அமைப்புகளையும் உறையாடல்களையும் பார்த்து ரொம்பவும் ரசித்தேன். கதையின் உணர்வுகளை சொல்லும் விதமான பாடல் வரிகள் என்னை நெகிழ வைத்தது. ராதா ரவி அவர்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பு, அவர் அந்தக் காட்சியில் வாழ்ந்திருப்பதாகவே உணர்த்தியது. அதோடு ஜான் விஜய்யின் சேட்டையும், சிங்கம்புலி, சரவணசக்தியோடு நான் நடித்த காமடிக்காட்சிகளும் மிக அழகாக படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டி மிக அழகாக உருவாகியிருக்கிறது. நான்கு சண்டைகாட்சிகளில் நான் நடித்துள்ளேன். ரோஜா மலரே, அடடா என்ன அழகு படத்திற்கு பிறகு ஜெயமுருகன். T. M அவர்களுக்கு "தீ இவன் "படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதேபோல் எனக்கும் சிறு இடைவெளிக்கு பிறகு இப் படம் என் பட வரிசையில் தரமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
மணவை புவன்.
No comments:
Post a Comment