Thursday, March 24, 2022

#ShareTheLoad விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரன்!

 

#ShareTheLoad விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரன்!



 

முக்கிய கேள்வியை எழுப்பும் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரன்! -  'ஆண்கள் மற்ற ஆண்களுடன் சுமையை பகிர்ந்து கொள்ள முடியும் என்றால், ஏன் அவர்களின் மனைவிகளுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது?'

 

சென்னை 24 மார்ச்  2022 : முன்னணி லாண்டரி பிராண்டான ஏரியல் சென்னையில்  நடத்திய  நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான சாந்தனு பாக்யராஜ் மற்றும் சிபி புவனா சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நில்கழ்வில் வீடுகளில் நிலவும் பாலின சமத்துவமின்மை சங்கிலியை உடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர், அதே நேரத்தில் ஆண்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஏரியலின் சமீபத்திய, ShareTheLoad காணொலியில், ``ஆண்கள் சுமையை மற்ற ஆண்களுடன் சமமாக பகிர்ந்து கொள்ள முடியும் என்றால், அவர்கள் ஏன் அதை தங்கள் மனைவிகளுடன் செய்யவில்லை?’’ என்னும் விஷயத்தை பிரதிபலிகிறது. ஏரியல் இந்தியா 2015 ஆம் ஆண்டு முதல், தங்கள் விருது பெற்ற இயக்கமான #ShareTheLoad என்னும் பிரச்சாரத்தின் மூலம் வீட்டில் பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்களை நடத்தி வருகிறது, மேலும் ஆண்களை வீட்டு வேலைகள் செய்வதில் சம பங்கு வகிக்கும்படி வலியுறுத்துகிறது. பெண்களை நாம் சமமாக பார்க்கும்போது, கண்டிப்பாக #ShareTheLoad சாத்தியமாகும்.

 

மிகவும் கலகலப்பான உற்சாகமான இந்த நிகழ்வில், ஆண்களின் சார்பு உணர்வைத் தூண்டுவதற்கு உதவும் உரையாடல்களைவெளிக் கொண்டு வர, நட்சத்திரங்கள் 'ShareTheLoad' சவாலை மேற்கொண்டனர், இது தாங்கள் எளிதாக வேலைகளைச் செய்து ஒருவருக்கொருவர் வேடிக்கையாகச் செய்யலாம் என்பதை நிரூபித்தது. வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய முன்வராததால், பெரும்பாலான திருமணங்களில் இந்த சுமையை பகிர்தல் என்னும் விஷயமே நடப்பதேயில்லை.

 

இந்த நிகழ்வில், இருவரும் தங்கள் சொந்த பெயர்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஏரியலின் லிமிட்டட் எடிஷன் நேம் சேஞ்ச் பேக்குகளையும் அறிமுகப்படுத்தினர் (Name-Change packs). இந்த சிறப்பு ஏரியல் பேக்குகள், நாட்டின் மிகவும் பொதுவான சில ஆண் பெயர்களுடன் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்னுதாரணமாக இருக்கும் மற்றும் வேலைகளின் கூட்டுப் பொறுப்பை ஏற்கும் ஆண்களுக்கு பேக் கொடுக்கப்படலாம் அல்லது வீட்டு வேலைகளை சமமாகப் பிரிப்பதற்கு வழி வகுக்கும் உரையாடலைத் தொடங்கும் வீட்டிற்குள் கொண்டு வரலாம். நகைச்சுவை நடிகை அனு மேனன் (லோலா குட்டி)  தொடங்கி வைத்த இந்த உரையாடலை, இந்தப் பேக்குகள் முன்னெடுத்துச் செல்கின்றன, அங்கு அவர் தனது பெயரை அனுவிலிருந்து தனது கணவரின் நெருங்கிய நண்பரின் பெயரான அனில் என்று மாற்ற பரிந்துரைத்தார், இது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் பற்றிய ஆண்களின் பார்வையை மாற்றும் முயற்சியாகும். பெண்களை சமமாகப் பார்க்கும்போது, வீட்டு வேலைகளை சமமாகப் பிரிப்பதற்கான பாதை உள்ளுணர்வாக உருவாக்கப்படுகிறது.

 

நடிகர் சாந்தனு பாக்யராஜ் இதுகுறித்துப் பேசுகையில், "ஆண்களாகிய எங்களுக்கு வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று தெரியும், ஆனால் பலர் இந்த பொறுப்பை வீட்டில் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படுகிறார்கள். தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும்போது அல்லது சகோதரர்களுடன் வளரும்போது, மற்ற ஆண்களுடன் வேலைகளைப் பிரிப்பது மேற்கொள்பவர்கள்,  மனைவிகளுடன் வேலையைப் பகிர்ந்துகொள்வதை ஏன் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.  நான் எப்போதும் என் துணையுடன் வேலைகளைப் பிரித்துக் கொள்ள முன்முயற்சி எடுத்து வருகிறேன், ஏனென்றால் எனக்கு நாங்கள் இருவருமே சமமானவர்களே.  என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு காரணமும் இருக்கிறது. என்னவென்றால், #ShareTheLoad  கேம்பைன் உடன் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பங்களுக்குள் சமத்துவமின்மைக்கு எதிராக குரல் எழுப்பும் ஏரியல் போன்ற பிராண்டுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து, நம் வீட்டு வேலைகளில் சமமான பொறுப்பை ஏற்போம்!" என்று கூறினார்.

 

நடிகர் சிபி புவனா சந்திரா நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, “  வீட்டில் பாலின சமத்துவமின்மை பிரச்சினையை ஏரியல் தீவிரமாக எடுத்துக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூக மாற்றத்தை உண்மையாக நம்பும் ஒரு பிராண்ட் ஒரு படத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ நின்றுவிடாது. நானும் அவர்களுடன் இணைந்து செய்தியை மேலும் பரப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  சிந்திக்கத் தூண்டும் படமாக இருந்தாலும் சரி, அனு மேனனின் கவனத்தை ஈர்க்கும் நையாண்டியாக இருந்தாலும் சரி, அல்லது புதுமையான தனிப்பயனாக்கப்பட்ட டிரெண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி, இவையனைத்தும் நம் சொந்த சார்புகளைக் கேள்வி கேட்க வைக்கின்றன - வேலைகளின் பொறுப்பை மற்ற ஆண்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் ஏன் மிகவும் வசதியாக இருக்கிறோம். அதுவே,  மனைவிகளுடன் பகிர்ந்துகொள்வதில் கனவர்களுக்கு என்ன பிரச்னை ?  தீப்பொறியை இறக்க விடமாட்டோம் என்பதை உறுதி செய்வோம், அதற்கு பதிலாக நம் சொந்த சிந்தனைக்கு சவால் விடலாம் மற்றும் பெண்களை நமக்கு சமமாக பார்க்கலாம். பகிர்தல் என்றென்றைக்கும் நல்லதே.  ஏனென்றால் நாம் #SeeEquial என நோக்கும்போது, ஏரியலின் #ShareTheLoad வசப்படும்” என்றார்.

 

ஏரியல் ஒரு மாதத்திற்கு முன்பு #ShareTheLoad இன் 5வது எடிசனை அறிமுகப்படுத்தியது. தவிர, அதற்கான பிரத்யோக வீடியோவானது 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது!  கடந்த சில ஆண்டுகளாக உரையாடலை மேம்படுத்திவந்த நிலையில், இந்த ஆண்டு இயக்கமானது, ஆண்களை சமமாக எடுத்துக்கொள்வதற்கும், வீட்டு வேலைகளில் சேருவதற்கும் உள்ள உள்ளார்ந்த சுயநினைவற்ற சார்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது.  ஒரு சுயாதீன மூன்றாம் தரப்பினரின் சமீபத்திய ஆய்வில், திடுக்கிடும் தகவலாக 73% ஆண்கள் அவர்கள் மற்ற ஆண்களுடன் அல்லது ரூம்மேட்களுடன் தங்கியிருக்கும் போது வீட்டு வேலைகளில் தங்கள் பங்கைச் செய்ததாக ஒப்புக்கொண்டனர், ஆனால் தங்கள் மனைவிகளுடன் வாழும்போது பின்வாங்குகிறார்கள், அதே நேரத்தில் 80% பெண்கள் தங்கள் கூட்டாளிகளை நம்புகிறார்கள். வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று தெரியும் ஆனால் அதை செய்ய வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள். ஆக, 83% பெண்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் பெண்களை சமமாக பார்ப்பதில்லை என்று கருதுகின்றனர். சமீபத்திய See Equal வீடியோவின் மூலம், Ariel ஆண்களுக்கு ஒரு பொருத்தமான கேள்வியை எழுப்புகிறது - 'ஆண்கள் மற்ற ஆண்களுடன் சுமையை பகிர்ந்து கொள்ளும்போது, ​​ஏன் அவர்களின் மனைவிகளுடன் பகிர்ந்துகொள்ள தயங்குகிறது?. சிறப்பு எடிஷன் பேக்குகள் மூலம், பிராண்ட் உரையாடலை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது . அதன்படி, ஆண்கள்  சுமைகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க அவர்களுக்கு மற்றொரு நினைவூட்டலாக இந்த கேம்பைன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  யார் சலவை செய்தாலும், சலவை செய்வது ஒரு சுலபமான வேலையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

Ariel #SeeEqual #ShareTheLoad film - https://www.youtube.com/watch?v=DA64FF7MR58

 

அனு மேனனின் வீடியோ லிங்க்https://www.youtube.com/watch?v=5GE2wnCFr6I

 

ப்ராக்டர் & கேம்பிள் இந்தியா பற்றி :

 

Vicks ®, Ariel®, Tide®, Whisper®, Olay®, Gillette®, AmbiPur®, Pampers®, Pantene®, Oral-B®, Head & Shoulders® மற்றும் Old Spice® உள்ளிட்ட நம்பகமான, தரமான, தலைமைத்துவ பிராண்டுகளின் வலுவான போர்ட்ஃபோலியோக்களைக் கொண்டிருக்கும் P&G இந்தியாவில் உள்ள நுகர்வோருக்கு சேவையாற்றிவருகிறது.  P&G இந்தியாவில் 3 நிறுவனங்கள் மூலம் செயல்படுகிறது, அவற்றில் NSE & BSE என இரண்டிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.  பட்டியலிடப்பட்ட பி&ஜி நிறுவனங்கள்: 'ப்ராக்டர் & கேம்பிள் ஹைஜீன் & ஹெல்த் கேர் லிமிடெட்' மற்றும் 'ஜில்லட் இந்தியா லிமிடெட்', அதேசமயம் பட்டியலிடப்படாத நிறுவனம் (இது அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்தின் 100% துணை நிறுவனம்) 'ப்ராக்டர் & கேம்பிள் ஹோம் ப்ராடெக்ட் லிமிடெட்' என்ற பெயரில் செயல்படுகிறது.  P&G இந்தியா மற்றும் அதன் பிராண்டுகள் பற்றிய சமீபத்திய செய்திகள் மற்றும் ஆழமான தகவல்களுக்கு http://www.pg-India.com ஐப் பார்வையிடவும்.

 

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...