Thursday, May 19, 2022

டைம் டிராவ்லர் படம்!




டைம் டிராவ்லர் படம்! 

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படத்தில் 

சிவனாக நடிக்கும் யோகிபாபு படம்

'பெரியாண்டவர்'

----------------


ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார்.  


இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்

 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளை செய்துவருகிறார். 


இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவ்லர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம், யோகிபாபு நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா பட வரிசையில் இப்படம் அமைந்திருக்கும். 

நாயகியாக முன்னணி நடிகை தேர்வு மற்றும் உள்ள நட்சத்திர தேர்வு நடைபெறுகிறது. 

இதன் படபிடிப்பு சம்மர் முடிந்ததும் ஆரம்பமாகிறது. 


யோகிபாபு சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் செட் ஒன்று ECR  ரோட்டில் ரூபாய் 50 லட்சம் செலவில் பிரமாண்டமாக அமைக்கிறார்கள். 


வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இப்படத்தில் பாடல்கள் எழுதி  வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார்.

சிவன் கதையோடு டைம் டிராவ்லர் கதை என்பதால், சி.ஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிக்காக மும்பை பெரிய நிறுவத்துடன் பேசி வருகிறார்கள். 

மசாலா பிக்ஸ் நிறுவனம் 9வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது. 


camera: chelladhurai ( thiruttu payale2, rowdibaby ) 

Lyrics & Dialogue: Kabilan Vairamuthu 

editor: suriya 

art: rajkumar 

stunt: stunt silva 

PRO : Johnson.

No comments:

Post a Comment

Capture Every Live Moment: OPPO Reno13 Series Launched in India with New MediaTek Dimensity 8350 Chipset and AI-Ready Cameras

Capture Every Live Moment: OPPO Reno13 Series  Launched in India with New MediaTek Dimensity  8350 Chipset and AI-Ready Cameras -         ...