‘முதல் நீ முடியும் நீ’ உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாகமுறையாக, ஜீ தமிழில் உங்கள் பள்ளி நினைவுகளை மீட்டெடுக்க தயாராகுங்கள்
சென்னை,
26 மே 2022: கோடைகால பொனான்ஸாவின் போது பிரபலமான தமிழ்த் திரைப்படங்களின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர்களை பார்வையாளர்களுக்கு வழங்கிய பிறகு, ஜீ தமிழ் இப்பொழுது உலக தொலைக்காட்சியில்
முதல் முறையாக ‘முதல் நீ முடியும் நீ’ மே 29,
ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு
ஒளிபரப்ப தயாராக உள்ளது.
‘முதல் நீ முடியும் நீ’ உங்கள் பள்ளி நினைவுகளை மீட்டெடுக்கவும், திரைப்பட ஆர்வலர்களை நினைவுப் பாதையில் பயணிக்கவும் வைக்கும். 1990களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம். கண்டிப்பான கத்தோலிக்க பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கதையைச் சொல்கிறது. இது நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் நோக்கத்தை கொண்ட
கதையாகும். அன்றைய டீன் ஏஜ் வயதினரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. கிஷேன் தாஸ் மற்றும் மீத்தா ரகுநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் அறிமுக இயக்குனர் தர்புகா சிவா இயக்கிய ‘முதல் நீ முடியும் நீ’ நிச்சயமாக அனைவரையும் அவர்களின் தொலைக்காட்சி திரைகளில் இணைந்திருக்க வைக்கும்!
நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? மே 29,
ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00
மணிக்கு ஜீ தமிழில் மட்டும் ‘முதல் நீ முடியும் நீ’ என்ற உலகத் தொலைக்காட்சியின் முதல் காட்சியுடன் பள்ளி நினைவுப் பாதையில் பயணிக்கவும்.
No comments:
Post a Comment