Monday, May 23, 2022

விக்ரம் பிரபு நடிப்பில் “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது!




 விக்ரம் பிரபு நடிப்பில்  “இரத்தமும் சதையும்” திரைப்பட டைட்டில் லுக் வெளியானது! 

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். 

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான  நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விகரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித்  தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. 

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...