Monday, June 6, 2022

3rd Eye Cine Creations தயாரிப்பில் சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்”






 3rd Eye Cine Creations தயாரிப்பில்

சதீஷ் G.குமார் இயக்கும்

“சூரகன்”


3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.


க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.


தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:


தயாரிப்பு - 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன்

எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் - சதீஷ் G.குமார்

ஒளிப்பதிவு – ஜேசன் வில்லயம்ஸ்

இசை – அச்சு ராஜாமணி

ஸ்டண்ட் – டேஞ்சர் மணி

நடனம் - ஶ்ரீதர்

மேக்கப் – பிரின்ஸ் பிரேம்

காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன்

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...