Friday, June 17, 2022

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் 'சுழல் தி வோர்டெக்ஸ்'

 திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் 'சுழல் தி வோர்டெக்ஸ்'



ராணா டகுபதி, ஹன்சிகா மோத்வானி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் வியந்து பாராட்டிய 'சுழல் தி வோர்டெக்ஸ்'


சமூக வலைதளங்களில் சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பாராட்டி. கொண்டாடும் திரையுலகப் பிரபலங்கள்



ஜுன் 17 ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும்  எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், '' சுழல் தி வோர்டெக்ஸ்= குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய அன்பான தோழி ஸ்ரேயா ரெட்டி அவர்களை திரையில் பார்க்கிறேன். அவருக்கும், சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என பதிவிட்டிருக்கிறார்.


தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி தனது சமூக வலைதள பக்கத்தில், ''  சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் சூப்பர். அசாதாரணமான முயற்சி. தனித்துவமானது. இந்த தொடரை பார்த்தபின் எமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்க என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. புஷ்கர் & காயத்ரியின் திரைக்கதை நேர்த்தியாக இருந்தது. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரன் எங்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தொடரில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், பார்த்திபன் உள்ளிட்ட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ரெஜினா என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடைய அற்புதமான நடிப்பை பாராட்ட போதுமான வார்த்தைகள் இல்லை. அவர் அந்த கதாபாத்திரத்தை யதார்த்தமாக சித்தரித்துள்ளார். கடினமாக உழைத்த குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.'' என பதிவிட்டிருக்கிறார்.


பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ். ஜே. சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், '' தமிழின் முதல் ஒரிஜினல் வலைதள தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை கண்டு ரசித்தேன். இதில் முதல் மற்றும் இரண்டாவது அத்தியாயம் அருமை. மூன்று மற்றும் நான்காவது அத்தியாயம் அற்புதம். மீதமுள்ள நான்கு அத்தியாயங்களையும் விரைவில் கண்டு ரசித்து, அதுதொடர்பான எமது எண்ணத்தை விரைவில் பகிர்ந்து கொள்வேன். நண்பர்களே! சர்வதேச அளவில் வெளியாகியிருக்கும் முதல் அசல் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் இந்த வலைதள தொடரை காணத்தவறாதீர்கள்.” என பதிவிட்டிருக்கிறார். 


படைப்பாளிகள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் உருவாக்கத்தில் தயாரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில், 240 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இன்று முதல் வெளியாகிறது.


https://instagram.com/stories/ranadaggubati/2861882847877427701?utm_source=ig_story_item_share&igshid=YmMyMTA2M2Y=


https://instagram.com/ihansika?igshid=YmMyMTA2M2Y=



https://twitter.com/iam_sjsuryah/status/1537372704956993542?s=21&t=n-IaRb9HtuL3y29WjVPwzg

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...