Saturday, June 4, 2022

*நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்*

 *நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்*


*நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் ‘பி எக்ஸ் எஸ் லைன் ’*


*விட்டமின் எஃப் குறித்து ஸ்ருதிஹாசன் எழுப்பும் கேள்வி*


*விட்டமின் எஃப் அடங்கிய தோல் பராமரிப்பு தயாரிப்புகளான பி எக்ஸ் எஸ் லைன்*


நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை  PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். 


பல்ப் எக்ஸ் ஸ்ருதி என்ற பெயரில் தோல் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை தொழிலதிபர்கள் கௌதம் உப்பலூரி மற்றும் தீப்தி அலபதி ஆகியோர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மேலும் அவர்கள் பேசுகையில், '' பல்ப் எக்ஸ் ஸ்ருதி வரிசைக்காக நடிகை ஸ்ருதிஹாசனுடான எங்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கிறது. இதன் பின்னணியில் எளிய குறிக்கோள் ஒன்று தான் அமைந்திருக்கிறது. அவை தோல் பராமரிப்பு என்றால் என்ன? என்பதையும், அதனை பாரம்பரிய தரநிலைகளுடன் தோல் பராமரிப்பிற்கான தயாரிப்புகளை உருவாக்குவதுதான். எங்களுடைய தயாரிப்புகள்= உங்களுடைய சருமம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றியதல்ல. ஒரு பிரபலத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியதும் அல்ல. உங்களுடைய உண்மையான தோல் மீது நீங்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதை பற்றியது. நடிகை ஸ்ருதிஹாசன் உடனான எங்களுடைய இந்த ஒத்துழைப்பு வழக்கத்திற்கு மாறான மற்றும் அனைத்து தருணத்திலும் தங்கள் மீது தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி.


தோல் தொடர்பாக மக்களுக்குத் தெரிந்திருக்கும் விசயங்களையும்,, அதன் மீதான நம்பகத் தன்மையையும்  நாங்கள் எப்போதும் கொண்டாட விரும்புகிறோம். நடிகை ஸ்ருதிஹாசன், ஸ்டைல் ஐகான், ராக்ஸ்டார், பெண்ணியவாதி மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர் என பன்முக தன்மையுடன் வலம் வருவதுடன் தொடக்கத்திலிருந்தே பல எதிர்பார்ப்புகளை மீறி செயல்படுபவர். சமூகத்தின் பார்வையில் மற்றவர்களுடன் பொருந்திக் கொள்வதற்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதை கண்டறிந்தவர்களுக்கு, இவர் எப்போதும் ஒரு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரியாக இருப்பவர். அத்துடன் அச்சமின்றி, துணிச்சலுடன் இயங்கி வருபவர்களின் அடையாளமாகவும் இவரைக் குறிப்பிடலாம். 


எங்களுடைய பல்ப் நிறுவனம், தோல் பராமரிப்பு துறையில் முற்போக்கான சிந்தனை மற்றும் தனித்துவமான அடையாளம் ஆகியவற்றின் காரணமாக ஸ்ருதிஹாசனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, இணைந்து பணியாற்றுகிறது. இந்த ஒப்பந்தம், நம்முடைய நிலங்களின் அடியில் ஏற்படும் கோதிக் என்ற பிரத்யேக நிலவியல் அலைவரிசையின் அதிர்வை போல் பிரத்யேகமானது. 


பல்ப் எக்ஸ் ஸ்ருதி, மூன்று சீரம்கள், ஒரு டோனர் மற்றும் ஒரு ஃபேசியல் மிஸ்ட் என ஐந்து தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. எங்களுடைய இந்த தயாரிப்புகள் அனைத்திலும் ‘விட்டமின் எஃப்’ என்ற மூலப்பொருளை சேர்த்திருக்கிறோம். 




எங்களுடைய தயாரிப்புகளின் சிறப்பம்சமான இதனை, விளம்பரப்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ‘நீங்கள் எதைப்பற்றி எஃப் கொடுக்கிறீர்கள்?’எனும் கேள்வியாக விளம்பர உத்தியை முன்னெடுத்திருக்கிறோம். இத்தகைய பாணியைப் பரப்புவதற்கு நாங்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறோம். நடிகை ஸ்ருதிஹாசன் தோல் பராமரிப்பு ஆர்வலராக இருப்பதால், இந்த விளம்பர உத்தியை உருவாக்குவதில் எங்களுடன் இணைந்து விரிவாக பணியாற்றியிருக்கிறார். இதன் மூலம் எங்களுடைய தயாரிப்பு தரமானது என்பதை அனைவராலும் எளிதாக உணர இயலும்.


எங்களுடைய கூட்டுப் பணி , கடந்த ஓராண்டு காலமாக செயல்பாட்டில் இருக்கிறது. தொற்றுநோய் காலகட்டத்திலும், எங்களுடைய தயாரிப்புகளை மேம்படுத்துவது குறித்தும், அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வெளியிடுவதிலும் மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம். இது ரசிகர்களுக்கும் சென்றடையும் என நாங்கள் நினைக்கின்றோம்.'' என்றனர்.


இதுதொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' பல்ப் உடனான என்னுடைய ஒத்துழைப்பின் மூலம் நான் யார்? நான் என்ன விரும்புகிறேன்? நான் எதை நம்புகிறேன்? என்பதை பிரதிபலிக்கிறது. இந்த தயாரிப்புகளின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாக கையாளவும், வடிவமைக்கவும் பல்பு குழுவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதை உருவாக்க எனக்கு நேரம் கிடைத்தது. மேலும் இந்த தயாரிப்புகள் அனைத்தையும் நீங்கள் விரும்புவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.


இதனிடையே நடிகர் பிரபாஸ் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ படப்புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சலார்’ படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154 வது படத்திலும்,, பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...