Saturday, June 18, 2022

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.





 

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை விளம்பரப்படுத்துவதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நீர்நிலையில் காட்சிப்படுத்தி வியக்க வைத்த படக்குழுவினர்.


அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குறித்த 3 டி தொழில்நுட்பத்துடன் கூடிய பிரத்யேக காட்சிகள், சென்னை சேத்துப்பட்டில் உள்ள சூழலியல் பூங்காவில் அமைந்துள்ள நீர் நிலையில் திரையிடப்பட்டது. இதனை அங்குள்ள பார்வையாளர்கள் கண்டுகளித்து உற்சாகமாக கொண்டாடினர்.


இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் .எம் இயக்கத்தில் தயாரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரஞ்சு ( பெர்ஸியன்), ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.


சென்னை ஜூன் 17 2022 :  அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடராகவும், நீண்ட வடிவத்தில் திரைக்கதை அமைக்கப்பட்ட அசல் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’  வெளியாகியிருக்கிறது. தமிழில் உருவான இந்த தொடரை சென்னையில் பொதுமக்களும், பார்வையாளர்களும் குழுமியிருக்கும் பகுதியில் பிரபலப்படுத்த படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலா பயணிகளின் முதன்மையான விருப்பமாகவும் உள்ள சேத்துப்பட்டு சூழலியல் பூங்காவில் உள்ள பிரம்மாண்டமான ஏரியில், வாட்டர் ஸ்கிரீன் தொழில்நுட்பம் என்ற நவீன திரையிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரின் சில பிரத்யேக காட்சிகள் திரையிடப்பட்டன. இது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. முப்பரிமாண தொழில்நுட்பம், பல அடுக்குகளைக் கொண்ட லேசர் தொழில்நுட்பம் மற்றும் தொடரின் மைய கரு ஆகியவற்றை ஒருங்கிணைந்த இந்த திரையிடல், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வியப்பை ஏற்படுத்தியது.


இந்த தொடரின் முன்னுரையை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காட்சிகளை நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ஷெட்டி, நடிகர் கதிர், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம், படைப்பாளிகள் புஷ்கர் & காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டனர். இதுவரை இத்தகைய 3டி வாட்டர் ஸ்கிரீன் புரொஜக்சன் தொழில்நுட்பம் வேறு எந்த தொடருக்கும் மேற்கொள்ளாததால், இதனை இரவு நேரத்தில், ஏரியில் அமைதியாக இருந்த தண்ணீருக்குள் இந்தத் தொடரின் காட்சிகள் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்கள் முற்றிலும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.


‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் என்பது எட்டு அத்தியாயங்களைக் கொண்ட கற்பனையான புலனாய்வு நாடகம் மற்றும் கிரைம் திரில்லராகும். இது ஒரு இளம் பெண் காணாமல் போவதை மையமாக கொண்டது. இதன் காரணமாக தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் கட்டமைப்பு சீர்குலைகிறது. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜூன் 17ஆம் தேதி முதல் 'சுழல் தி வோர்டெக்ஸ்' தொடர், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரஞ்சு ( பெர்ஸியன்), ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் வசனங்களுடன் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.


‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் பிரைம் வீடியோ பட்டியலில் சேரும். இதில் இந்திய தயாரிப்பான அமேசான் ஒரிஜினல் தொடர் மாடர்ன் லவ் மும்பை, மும்பை டைரிஸ், தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பண்டிஷ் பேண்டிட்ஸ், பாடல் லோக், தாண்டவ், மிர்சாபூர் சீசன் 1 & 2, தி ஃபார்காட்டன் ஆர்மி - ஆசாதிகேலியே, சன்ஸ் ஆஃப் த ஸாய்ல், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைட் எட்ஜ், கூலி நம்பர் 1, குலாபோ சிதாபோ, துர்கமதி, சாலாங், சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், பிரெஞ்ச் பிரியாணி, சட்டம், சூஃபியும் சுஜாதாயும், பெங்குயின், பெங்குயின், நிசப்தம், மாறா, வி, சியூ சூன், சூரரைப் போற்று, பீம சேனால மகாராஜா, த்ரிஷ்யம் 2, ஹலால் காதல் கதை, மிடில் கிளாஸ் மெலடிகள், புத்தம்புதுகாளை, அன்பாஸ்டு இவை நீங்கலாக மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட போரட்ம் ஸப்ஸ்க்யூயண்ட் பிலிம், போரட்ம் போன்ற உலகளாவிய அமேசான் ஒரிஜினல்ஸ் சப்சிக்வல்கள் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தலைப்புகள் உள்ளன.


பிரைம் உறுப்பினர்கள், ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்கள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ பயன்பாட்டில் எங்கும் எந்த நேரத்திலும் தொடரைப் பார்க்க முடியும். பிரைம் வீடியோ பயன்பாட்டில், பிரைம் உறுப்பினர்கள் எபிசோடுகளைப் பதிவிறக்கலாம். அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் எங்கும் ஆஃப் லைனில் பார்க்கலாம். பிரைம் வீடியோ இந்தியாவில் கூடுதல் கட்டணமின்றி பிரைம் மெம்பர்ஷிப்புடன் ஆண்டுக்கு ரூ1499 அல்லது மாதந்தோறும் ரூ179க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime இல் மேலும் பல தகவல்களை அறியலாம். 30 நாள் இலவச சோதனைக்கும் பிரத்யேகமான குழுவில் சேரலாம்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...