பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் வாகன பேரணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரை இருவரும் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோ வாகனத்தில் பசுமைப் பயணம் மேற்கொண்டனர்
M Auto Electric Mobility ஏற்பாடு செய்த அமீர் மஹாலுக்குச்செல்லும் மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்காண பாரம்பரிய சுற்றுலா பயண நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுடன் அமீர் மகாலுக்கு எலக்ட்ரிக் வாகனத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர் அவருடன் M Auto எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனர் யாஸ்மின் ஜவஹர் அலி உடன் இருந்தார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு செல்லும் மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கு பாரம்பரிய சுற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் இருவரும் இணைந்து எலக்ட்ரிக் வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு பாரம்பரிய சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் M Auto Electric Mobility நிறுவனர் யாசின் ஜவஹர் அலி, இணை இயக்குனர் மன்சூர் அலி கான்,23 மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகள்,பிரபலங்கள் என ஏராளமானோர் மின்சார ஆட்டோ பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை m auto எலக்ட்ரிக் மொபைலிட்டி தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது
மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கான இந்த பாரம்பரிய சுற்றுப்பயணம் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரையிலான ஐந்து கிலோமீட்டர் பயணத்தை 25 எலக்ட்ரிக் வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அமீர் மகாலுக்கு சென்றனர். இவர்களுக்கு ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி இரவு விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொழில்துறை தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய சந்தையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் வணிக வாய்ப்புகளை ஈர்க்கவும் சுற்றுலா, பயணம்,உயர்கல்வி மற்றும் வணிக முதலீட்டிற்கான இடமாக இந்தியாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
மேலும் இந்தப் பாரம்பரிய சுற்றுலா பயணம் எலெக்ட்ரிக் வாகனத்தில் ஏற்பாடு செய்ததன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் தூய்மையான, நிலையான போக்குவரத்து மாற்றங்களின் அவசியத்தையும் இந்த நிகழ்வு வலியுறுத்தியது.
நிகழ்ச்சிக்கு பின்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்துள்ள அமைச்சர் மற்றும் அவரது குழுவுடன் சேர்ந்து தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரை பசுமைப் பயணம் எலக்ட்ரிக் ஆட்டோ வாகனத்தில் மேற்கொண்டதாகவும் இதன் மூலம் வாகன போக்குவரத்தின் போது சுற்றுச்சூழல் மாசு படுவதில் இருந்து விடுபடும் நோக்கமாகவும், பசுமை மறுசுழற்சி ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தப் பயணம் அமைவதாகவும் மேலும் பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி பசுமை ஆற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பயணம் அமைவதாக கூறினார்.
No comments:
Post a Comment