*‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ பாதிப்பில் உருவானது தான் 'கிரீஷ்'- ஹிருத்திக் ரோஷன் அதிரடி பேச்சு*
*"எழுத்தாளர் டோல்கீன் என் ஆன்மாக்களில் ஒரு அங்கமாக இருக்கிறார்."= தயாரிப்பாளர் உருக்கமான பேச்சு*
*அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகும் 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்'*
அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘ தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் தொடரின் பிரிமியர் காட்சி செப்டம்பர் இரண்டாம் தேதியன்று வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் தொடரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பிரபலப்படுத்துவதற்காக, மும்பையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வில், இந்த தொடரில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை ஆகஸ்ட் 18.2022.. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்’ எனும் சாகசமும் வீரமும் நிறைந்த கற்பனைக் காவியத்தை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்விற்காக இந்த தொடரில் நடித்திருக்கும் கலைஞர்கள், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பலர் மும்பைக்கு வருகை தந்தனர். இதன் போது முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தமன்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக உடனிருந்தனர். இவர்களுக்கு பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த தொடரை ஆசிய பசிபிக் பிராந்தியப் பகுதியில் பிரீமியர் செய்வது குறித்து அமேசானின் தலைமை செயலாக்க நிர்வாகி ஆல்பர்ட் சாங் பேசுகையில், '' எங்களது நிறுவனம், இந்தியாவில் ஏராளமான புதிய வாடிக்கையாளர்களை கண்டறிந்திருக்கிறது. மேலும் ப்ரைம் வீடியோவில் பிரீமியரை ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியதும், புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. உலக அளவில் பிரைம் வீடியோ வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களில் ஒன்று. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒரிஜினல்ஸ் தொடருக்கு பெரும் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. புதிய வாடிக்கையாளர்களினல் ஐந்தில் ஒருவர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து, இந்திய தொடர்களை காண்பதற்காக வருகை தருகிறார். இதனால் உலகளவில் இந்திய ஒரிஜினல் படைப்புகளுக்கு ரசிகர்களின் ஆதரவு வட்டம் உருவாகி இருக்கிறது. உலகளவில் 70-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் அமெரிக்காவிற்கு வெளியே மிகப் பெரிய உள்ளூர் ஒரிஜினல்களை இந்தியா கொண்டிருக்கிறது. உலக பொழுதுபோக்கு தலைநகரங்களின் வரிசையில் லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் ஆகிய மாநகரங்களை தொடர்ந்து மும்பையும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே எங்களது முதல் ஆசிய பசிபிக் பிராந்திய அளவிலான பிரீமியரை நடத்துவதற்காக மும்பையைத் தேர்வு செய்திருக்கிறோம்.” என்றார்.
பிரைம் வீடியோவின் இந்திய தலைவர் கௌரவ் காந்தி பேசுகையில், '' எழுத்தாளர் டோல்கீன் தான் பல நவீன கற்பனைகளுக்கு வித்திட்டவர். அவரது கதைகள் காலகட்டத்திற்கு அப்பாற்பட்டவை. அவருடைய எழுத்துக்கள் என்றும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் கற்பனையை தூண்டும் வகையிலும் அமைந்திருக்கிறது. அதனால் தான் மக்கள் அவரது எழுத்துக்களை மீண்டும் மீண்டும் நேசித்து வாசித்து வருகிறார்கள். இந்தத் தொடரின் மூலம் எங்களுடைய பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத புதிய வடிவிலான காவிய உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த தொடரின் லட்சியம், உலகளாவிய கருப்பொருள் ஆகியவை பார்வையாளர்களாக நம்மை உற்சாகப்படுத்துகின்றன. இந்த தொடர் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகும் என்பதையும், இந்தியாவில் உள்ள சந்தாதாரர்களுக்காக இந்தி, தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.” என்றார்
பிரைம் வீடியோ இந்தியாவின் வணிக பிரிவு தலைவர் சுஸாந்த் ஸ்ரீராம் பேசுகையில், '' உலகில் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு இடமாகவும், உலகளவிலான பொழுதுபோக்கு மையமாகவும் இந்தியா இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள எங்களது சந்தாதாரர்களின் பொழுதுபோக்கு அம்சத்தைப் பூர்த்தி செய்வதற்காக, எங்களுடைய தாரக மந்திரமான ‘சூப்பர் சேவை’யைத் தொடர்ந்து வழங்க முயற்சிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்கிறோம். இதன் மூலம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள 99 சதவீத வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் சேவையை பயன்படுத்துகிறார்கள். 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள், இந்திய கதைகளை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். அதே தருணத்தில் இந்திய அளவிலான பார்வையாளர்களும், உலகம் முழுவதும் உள்ள பிரபலமான கதைகளை காண்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பரிச்சயமான கதைகளிலிருந்து வெளியேறி, அழுத்தமான மற்றும் நுட்பமான விவரிப்புகளுடன் கூடிய கதைகளை தேடி அவர்களுடைய பயணம் இருக்கிறது”. என்றார்.
நடிகை தமன்னா பேசுகையில், '' லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ அதன் சினிமா பாணியிலான கவர்ச்சியை கொண்டிருக்கிறது. இந்த காவிய உலகின் மீதான எமது காதல் தொடர்ந்து அதிகரிப்பதால் மீண்டும் மீண்டும் அந்த உலகை நோக்கி பயணிக்கிறேன். ஏனெனில் அது புதிதாக தோன்றுகிறது. இந்த திரைப்படம் வியக்கத்தக்க வகையில் காட்சிகளின் ஊடாக கதையை சொல்கிறது. புத்தகம் அல்லது தகவல்களாக இருந்தாலும் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ்: த ரிங்ஸ் ஆஃப் பவர் நான் பார்த்த படைப்புகளில் வசீகரிக்கும் படைப்பாகவும், மயக்கும் திரைப்படமாகவும் உணர்கிறேன்.” என்றார்.
நட்சத்திர நடிகர் ஹிருத்திக் ரோஷன் பேசுகையில், '' தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எனும் காவிய உலகில் ஒரு ரசிகனாக இதனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். செப்டம்பர் இரண்டாம் தேதி அன்று பிரைம் வீடியோவில் இதை என்னால் பார்க்க முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸுக்கும் இடையே சிறிய தொடர்பு இருக்கிறது. இது பலருக்கு தெரியாது. இந்த தொடரின் முழு தொகுப்பையும் பார்த்துவிட்டு என் தந்தை என்னை அழைத்தார். இந்த உலகத்தால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். நாங்கள் ஏற்கனவே உருவாக்கிய ஒன்றை உருவாக்க முடியும் என்று என் தந்தை உணர்ந்தார். எனவே நாங்கள் ‘கொய் மில் கயா’வை உருவாக்கினோம். இதன் மூலமாகவே ‘கிரீஷ்’ பிறந்தார். எனவே இது ஆசிரியருக்கும், த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்க்கும் என்னுடைய சிறிய அளவிலான நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர்களின் ஒருவரான ஜே.டி.பெய்ன் பேசுகையில், '' இயக்குநர் பீட்டர் ஜாக்சன் இயக்கிய படத்தை பார்த்து, அதன் மூலமாக டோல்கீனைப் பார்த்தேன். அப்போது நான் என்னுடைய இளமைகளில் இருந்தேன். உண்மையில் என் இதயத்தை வருடிய சில படங்களில் அவையும் ஒன்று. அந்த படைப்பு உருவாக்கப்பட்ட விதம் என்னை ஆழமாக மூழ்கடித்து, யோசிக்க வைத்தது. அத்துடன் டோல்கீனின் அனைத்து புத்தகத்தையும் வாசிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தேன். தற்போது இந்த புத்தகங்கள் என் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்துள்ளன. நான் அதைப்பற்றி பேசாத நாட்கள் குறைவு. என் வாழ்க்கையில் ஏதேனும் நடந்தால், ‘ஃபரோடா மோதிரத்தை எடுத்துச் செல்வது போல் உணர்கிறேன்’ என்று சொல்வேன். நான் கலந்து கொள்ளும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் என அனைத்திலும் இந்த மேற்கோள்களைப் புகழஞ்சலிக்காகவும், உரைக்காகவும் குறிப்பிடுகிறேன். எனவே டோல்கீன் இப்போது என் ஆன்மாவின் ஒரு அங்கமாக இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்களை பற்றி அவர் தொடர்ந்து பேசுகையில், '' நாங்கள் ஒரு அற்புதமான கதையை சொல்வதால், அதற்கேற்ற வகையில் நடிகர்கள் பொருத்தமாக இருக்க வேண்டும் என நானும், பேட்ரிக்கும் தீர்மானித்தோம். இது டோல்கீனால் சொல்லப்படாத இரண்டாம் யுகத்தின் கதை. எனவே நாங்கள் சக்தி வளையங்களின் மோசடியை கதையைச் சொல்கிறோம்.
நடிப்பிற்காக எங்களிடம் இரண்டு வகையான அளவுகோல்கள் இருந்தன. நடிகர்கள் சிறந்த நடிகர்களாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் மத்திய பூமியுடன் தொடர்பில் இருப்பவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் அவர்களை திரையில் பார்க்கும்போது அவர்கள் உண்மையில் மத்திய பூமியிலிருந்து நம் உலகத்திற்கு கொண்டு வரப்பட்டவர்களாக நீங்கள் உணர வேண்டும். ஓராண்டிற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், நூற்றுக்கணக்கான கலைஞர்களை கண்டுபிடித்து, அவர்களை ஆடிசன் செய்து தேர்ந்தெடுத்தோம். அதாவது ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ படத்திற்காக ஒரு பெரிய வைக்கோலில் 22 ஊசிகளை கண்டுபிடித்தோம்.” என்றார்.
நடிகர் நசானின் போனியாடி பேசுகையில், '' என்னுடைய கதாபாத்திரம் ஒரு ஹீலர். புரட்சிகரமான ஒற்றைத் தாய்க்கு பிறந்த மகன். சவுத்லேண்டராக நடிக்கிறேன். இவர்களின் முன்னோர்கள் நன்மையை விட தீயவற்றை தேர்ந்தெடுத்தனர். அவள் அதை மீட்டெடுக்க முயற்சிக்கிறாள். நான் அவளைப் பற்றி விரும்புவது என்னவென்றால், அவள் மிகவும் உறுதியானவள். வலிமையானவள் மற்றும் அதே பாணியில் வளர்பவள். ஆனால் தனது மக்களை மீட்பதற்கும், அவர்களை விடுவிப்பதற்கும் அவள் எடுத்த உறுதிப்பாடு, எனது நாடான ஈரானில் சிறிது காலம் செயல்பாட்டாளராக இருந்த ஒருவராக என்னுடன் பயணிக்கிறது. உலகின் பல இடங்களில் உள்ள பெண்கள் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளனர். அதனால் தான் நான் என் உத்வேகத்தை பெற்றேன்.” என்றார்.
தியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் தைரோ முஹாபித்தின் பேசுகையில், '' அனைத்து நடிகர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக நஸானின், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். அதிலும் தயாரிப்பாளர் ஜேடி பெயின், வெயின் சேயிப் மற்றும் சார்லோட் ப்ரான்ச் ஆகியோரும் உடனிருக்கும் போது அதிகமாக பதட்டப்பட்டேன். நான் பணிபுரிந்த தருணங்களில் இவர்கள் என்னை இயல்பாக்கினார்கள். அது மிக முக்கியமானது. இந்த அழகான மனிதர்கள் அனைவருக்காகவும் நான் பெர்த்திலிருந்து மும்பைக்கு வருகை தந்திருக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.” என்றார்.
இந்தியாவிற்கு வருகை தந்தது குறித்தும், தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகர் லாயிட் ஓவன்ஸ் பேசுகையில்,'' இந்தியாவிற்கு மீண்டும் வருகை தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த காலத்தில் இங்கு பணிபுரிந்த அழகான அனுபவம் எனக்கு இருந்தது. எனது கதாபாத்திரம் ஒரு கடல் கேப்டன். அது ஒரு பழம்பெரும் கதாபாத்திரம். லார்ட் ஆஃப் ரிங்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகன். ஏனெனில் அவரது தியாகம் பேசப்படும். நற்குணத்தின் உச்சம். சுதந்திரமாகவும், விசுவாசத்துடனும் தனது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சிக்கும் தலைவர். இதனால் நான் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன்.
எனது அனுபவம் உண்மையில் அசாதாரணமானது. நாங்கள் திரைப்படத்திற்காக நியூமெனர் எனும் தலைநகரை கட்டினோம். அதைக் கட்ட ஆறு மாதங்கள் ஆனது. ஒவ்வொரு துறையிலும் உள்ள திறமைசாலிகளும். புத்திசாலிகளும் இதற்காகத் தேவைப்பட்டனர். அவர்கள் நகரத்தை தரையிலிருந்து அதனை சுற்றியுள்ள நிலப்பரப்பிற்கு மாறிவரும் கட்டத்தை உருவாக்கினர். தயாரிப்பாளர் ஜே பெய்னுடன் நான் நியூ மெனரின் புவியியலை பார்த்தேன். உற்சாகமாக இருந்தேன்.
கற்பனையின் ரசிகராக இந்நிகழ்ச்சியில் பணியாற்றுவது நம்ப முடியாத அனுபவம். இதைத் தவிர்த்து இது ஒரு முழுமையான கனவு பணி. இந்த அற்புதமான நடிகர்களுடன் இந்தியாவில் இருப்பதை நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கற்பனையை விரும்புவராக இது எனது தொழில் வாழ்க்கையில் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும்.” என்றார்.
பிரைம் வீடியோவில், ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் இரண்டு அத்தியாயங்கள் செப்டம்பர் இரண்டாம் தேதியன்று வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வாரம் தோறும் வெளியாகி, அக்டோபர் 14ஆம் தேதியன்று இந்த தொடர் முடிவடையும்.
பிரேம் வீடியோவின் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ மத்திய பூமியின் வரலாற்றின் இரண்டாம் யுகத்தில் கட்டுக் கதையின் வீரம் செறிந்த புனைவுகளை முதன்முறையாக திரைக்கு கொண்டு வருகிறது. இந்த காவிய நாடகம் ஜே ஆர் ஆரின் நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. டோல்கீனின் ‘தி ஹாபிட்’ மற்றும் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ மற்றும் கற்பனையுடன் தயாராகியிருக்கிறது. டோல்கீனின் பேனாவிலிருந்து பாய்ந்த வில்லன் உலகம் முழுவதையும் இருளில் மூழ்கடித்து விடுவேன் என்று மிரட்ட, ஒப்பிட்டளவில் அமைதியான காலத்தில் தொடங்கிய இந்தத் தொடர், மத்திய பூமிக்கு தீமை மீண்டும் தோன்றுவதை கண்டு, புதிய கதாபாத்திரங்களின் குழுவினர், அதன் பின்னணியையும், இருளை எதிர்த்து தீரமுடன் போராடுவதையும் குறிக்கிறது.
No comments:
Post a Comment