Wednesday, August 3, 2022

*ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்*

 *ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்*



தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக  வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.  சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 


ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய  திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற,  நடிகை ஹன்ஷிகா மோத்வானி,  சிம்பு நடித்த,  “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம்  நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு விரைவில் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம் ஆஹா ஒரிஜினலாக வெளியாகிறது. ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஜீவி 2 படம், விரைவில் நேரடி வெளியீடாக ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. மேலும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, வெறும் ₹ 99 ரூபாயில் 3 மாதங்கள் ஆஹா ஓடிடி தளத்தை பார்க்கலாம் எனும் அறிவிப்பையும் ஆஹா தளம்  வெளியிட்டு அசத்தியுள்ளது.  




மேலும் பல பிரபல இயக்குநர்கள் மற்றும் நட்சத்திரங்களின் படைப்புகள் ஆஹாவில் வெளியாக காத்திருக்கிறது. ஆஹா ஓடிடி தளத்தின் அடுதடுத்த இந்த அதிரடி அறிவிப்புகளால்,  ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 


இன்றே உங்கள் கணக்கை பதிவு செய்து, ஆஹா ஓடிடி தளத்தில் சிறந்த படைப்புகளை கண்டுகளியுங்கள்.

No comments:

Post a Comment

Zee Studios & Parallel Universe Pictures’ “Kingston” Teaser Release - Actor Dhanush unveils G.V. Prakash Kumar’s ‘Kingston’ Teaser. Kingston Worldwide Theatrical Release on March 7, 2025

The much-awaited teaser of ‘Kingston’, featuring Tamil film industry’s leading music director and actor G.V. Prakash Kumar, has been unveile...