சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக்

சந்தானம் நடிக்கும் புதிய படம் #கிக் 

பெங்களூர் முதல் பாங்காக் வரை படபிடிப்பு ! 

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் அறிமுகம். 


சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு #கிக் என்று பெயரிட்டுள்ளார்கள். 
இதன் படபிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் ஆரம்பமானது. தொடர்ந்து ஒரே கட்டமாக சென்னையில் நடந்து இதன் படபிடிப்பு பாங்காங்கில் 15 நாட்கள் நடந்து படபிடிப்பு முடிவடைந்தது. 

இப்படத்தை,
ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். 

 இப்படமூலம், கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி ஸ்டார் டைரக்டராக உள்ளார். 


இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு' ஹிட் படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கிக் தான். விளம்பர நிறுவனத்தில் வேலை செய்யும் கதாநாயகனின் ஒவ்வொரு செயலிலும் கிக்க்காக செய்ய நினைப்பவன். வேறு விளம்பர நிறுவனத்தில்  வேலை செய்யும் நாயகியுடன் தொழில் முறை போட்டியில் கிக்காக எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை முழு நீள நகைச்சுவையுடன்  'சந்தானம்' பாணியில் டைரக்டர் உருவாக்கி இருக்கிறார். 


இரண்டு பாடல்களுக்காக 12 வித விதமான செட் அமைத்து அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளார்கள். 


இது ஒரு சந்தானம் அக்மார்க் திரைப்படம். குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது. 

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) 

இசை: அர்ஜூன் ஜன்யா ( Arjun Janya ) 

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ் ( Sudhakar Raj ) 

கலை: மோகன் பி.கேர் ( ( Mohan B.Kere ) 

எடிட்டிங்: நாகூரா ராமசந்த்ரா ( 'DON' fame Nagoorah Ramachandrah ) 

ஸ்டண்ட்: Dr.ரவி வர்மா ( Dr.Ravi Varma ), 
                 டேவிட் காஸ்டில்லோ ( David Castillo )
 
நடனம்: குலபுஷா, சந்தோஷ் சேகர் ( Kulabhushah, santhosh Shekar ) 

Pro: ஜான்சன் ( Johnson )

தயாரிப்பு: நவீன் ராஜ் ( Naveen Raj ) .

Comments

Popular posts from this blog

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்*

Maasoom Shankar- The Anastasia Steele of south cinema

உணர்ச்சிகரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட் '