Sunday, October 23, 2022

*நடிகர் பிரபாஸின் 'புராஜெக்ட் கே' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.*


*நடிகர் பிரபாஸின் 'புராஜெக்ட் கே' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.*

*நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ' புராஜெக்ட் கே' படக்குழு*

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ' புரொஜெக்ட் கே'. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் 'நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்' என்ற வாசகத்தை இடம்பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளுக்கு அவர் நடித்து வரும் ' புராஜெக்ட் கே' படக்குழு வெளியிட்டிருக்கும் அர்த்தமுள்ள போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...