இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ [sounds right] என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெருவில் அமைந்துள்ளது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்ற ’சவுண்ட்ஸ் ரைட்’ நேற்று புதனன்று திரையுலக பிரபலங்களின் பூங்கொத்து வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தது. அந்நிகழ்வில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ்,ஹரி சரண்,தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் ஏ.எல்.விஜய் சூப்பர் சிங்கர்ஸ் பிரபலங்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா,, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
’சவுண்ட்ஸ் ரைட்’ ஸ்டுடியோ குறித்துப் பேசிய பாடகி சைந்தவி,” இந்த ரெகார்டிங் ஸ்டுடியோவைத் துவக்கவேண்டும் என்பது எனது சில ஆண்டுகால கனவு என்றுதான் சொல்லவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்க முயன்றபோது, ஒரு பொல்லாத பூனையைப்போல் ,கொரோனா குறுக்கே வந்துவிட்டது. இறுதியில், ஒருவழியாக அந்தக் கனவு இன்று நிஜத்திற்குள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.
இந்த ஸ்டுடியோவில் ஏ’ பிரிவில் டால்ஃபி அட்மாஸ் HE, ஸ்டேட் ஆஃப் த ஆர்ட் ரெகார்டிங் வசதியும் மற்றும் பல்வேறு நவீன வடிவ மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் வசதி உள்ளது.
ஸ்டுடியோ பி’ பிரிவில் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஸ்டீரியோ ரெக்கார்டிங் மற்றும் ஏடிஆர் வசதிகள் (டப்பிங்) ஜாம் பேட் - செட் அப்பில் ஒரே நேரத்தில் 16 இசைக்கலைஞர்கள் / பாடகர்கள் இயங்கும் சுதந்திரமான வெளியும் உள்ளது.
’செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்ற வள்ளுவனின் வாக்குக்குக்கேற்ப, இசைப்பணிகளுக்கு நடுவே சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள ஸ்டியோவின் ஒரு பகுதியில் லவுஞ்ச் ஒன்றும் உள்ளது” என்கிறார் சைந்தவி.
No comments:
Post a Comment