Saturday, October 22, 2022

*நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' அப்டேட்*


*நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' அப்டேட்*

*கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்*

‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  வாழ்த்து  தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.  ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள். 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாஸ் - 'ஆதி புருஷ்' படக் குழு.

நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...