Thursday, December 1, 2022

*'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு*


*'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு*

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் தான் இப்போது ஊரெல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் உலகமெங்கும் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது. முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலாக 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' காட்சிப்படுத்தப்பட்டது. ஆசியாவின் பிரம்மாண்ட திரை விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'வதந்தி' வெப் சீரிஸுக்கு அரங்கம் அதிரும் வரவேற்பு கிட்டியது. ஆண்ட்ரூ லூயிஸ் எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வதந்தி' ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ப்ரைம் வீடியோவும் வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து இந்த சீரிஸின் சிறப்புத் திரையிடலை நண்பர்களுக்காக ஒருங்கிணைத்துள்ளது. சீரிஸ் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியுள்ளது. சீரிஸின் நடிகர்களும் மற்ற படைப்பாளிகளும் திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். 'வதந்தி' வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர்.

'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், '96' இயக்குநர் பிரேம் குமார், 'டான்' இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நடிகைகள் வசுந்தரா, கலை ராணி ஆகியோரும் சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டனர்.

'வதந்தி' என்ற சொல்லின் அர்த்தம் போலவே இந்த சீரிஸ் ஒரு இளம் பெண் அதுவும் அழகான பெண் வெலோனியின் வதந்திகள் நிறைந்த உலகுக்குள் உங்களை அழைத்துச் செல்லும். வெலோனியாக அறிமுக நடிகை சஞ்சனா நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா எப்படியாவது இந்த வழக்கின் மர்மத்தை உடைக்க படாதபாடுபடுகிறார்.

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர், காயத்ரி இந்த சீரிஸை தயாரித்துள்ளனர். இதனை இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இந்த சீரிஸ் மூலம் நடிகை லைலா ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்திற்கு வந்துள்ளார். அதேபோல் சஞ்சனா என்பவர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் நாசர், விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன், ஸ்ம்ருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். 8 எபிஸோட்கள் கொண்ட தமிழ் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் இந்தியா உள்பட 240 நாடுகளில் டிசம்பவர் 2ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள, கன்னடம் என பல மொழிகளிலும் ஸ்ட்ரீம் ஆகவிருக்கிறது.

No comments:

Post a Comment

*A Legendary Director C.S.Rao Centinary Celebrations NGL Trust conferred Lifetime Achievement Award to Music Scholar Sri. V. A. K. Ranga Rao.*

C S RAO 100  marks a day to celebrate the 100th Birth Anniversary of a doyen in Indian Cinema, a famous Director, actor and scri...