Friday, December 23, 2022

*பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்துகிறது.*


*பிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது; பொழுதுபோக்குதுறையிலுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் ஆழமாக ஊடுருவிச்சென்று காட்சிப்படுத்துகிறது.*

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த 9 வலிமைமிக்க பெண்கள்; பார்வதி திருவோத்து மற்றும் ரீமா கல்லிங்கல் போன்ற வெள்ளித்திரையில் மின்னும்  திறமையாளர்கள், மற்றும் இந்து VS, ரத்தீனா பிளாத்தோட்டத்தில், இலாஹேஹிப்தூலா, ஸ்ரேயா தேவ் துபே, நேஹா பார்திமதியானி போன்ற வெள்ளித் திரைக்கு அப்பாலான துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களிலிருந்து, தொடங்கி அபர்ணா புரோஹித் மற்றும் நெறியாளர் ஸ்மிருதி கிரண் போன்ற நிறுவனத் தலைவர்கள் வரை இதில் பங்குபெறுகிறார்கள்.  


இந்த ஆண்டு முடிவுக்கு வரும் இந்தத் தருணத்தில், இதன் பங்கேற்பாளர்கள் கடினமான கேள்விகளை எழுப்புகிறார்கள், மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் , அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் மற்றும் அவர்களின் திறமைகளை ஒப்புக்கொள்ளவும் தொழில்துறையை மென்மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்,.

பிரைம் வீடியோ, பொழுதுபோக்குத் துறையிலுள்ள பெண்கள் ஒருவரோடொருவர் இணையவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒத்துழைக்கவும் செய்வதை எளிதாக்கும் வகையில் மைத்ரிக்காக ஒரு தனிப்பட்ட பிரத்யேகமான சமூக அமைப்புப் பிரிவை அறிமுகப்படுத்துகிறது,  சமீபத்திய அமர்வின் நிகழ்வு சார்ந்த உள்ளடக்கத் தொகுப்பு  இப்போது மைத்ரியின் யூ ட்யூப் பக்கத்தில் https://bit.ly/3PPQj
கிடைக்கிறது.


மும்பை, இந்தியா – 23 டிசம்பர், 2022 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமான பிரைம் வீடியோ, மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ் இன் புதிய அமர்வை இன்று வெளியிட்டது. ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையிலிருக்கும் பெண்களுக்காக அவர்கள் தங்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதித்து ஒரு நேர்மறையான மாற்றத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்த அவர்களின் கண்ணோட்டம் மற்றும் ஆலோசனைகளை வழங்க அவர்களனைவரும் ஒன்று சேர உதவும் வகையில் அவர்களுக்கான .ஒரு சமூகத்தை உருவாக்கும் ஒரு பெரும் முயற்சிதான் இது .தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள், திறமையாளர்கள், மற்றும் கார்ப்பரேட் தலைவர்கள் உட்பட இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையில்  புகழ்பெற்ற ஒன்பது பெண் தொழில்முறை வல்லுநர்களின் பங்கேற்பால் இது மதிப்புப் பெற்றுள்ளது, இதன் சமீபத்திய அமர்வில் பெண்களுக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தத் தொழில்துறையை மேலும் உள்ளடக்குவதாக மாற்றுவது குறித்த விவாதங்கள் நடைபெறும் .

மைத்ரியின் உருவாக்குனரும் மற்றும் நிர்வகிப்பவருமான ஸ்மிருதி கிரண் நெறியாளராக செயல்பட, பிரைம் வீடியோவின் மைத்ரி&ஹெட் ஆஃப் இந்தியா ஒரிஜினல்ஸ்- படைப்பாளர் அபர்ணா புரோஹித்; எழுத்தாளர் மற்றும் இயக்குனர் இந்துVS; எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரத்தின பிளாத்தோட்டத்தில்; படைப்பாளர் &தயாரிப்பாளர் இலாஹிஹிப்தூலா,; நடிகர்&இயக்குநர் பார்வதி திருவோத்து,; நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மேடைக் கலைஞர் ரீமா கல்லிங்கல்,; திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா தேவ் துபே, மற்றும் ஒளிப்பதிவாளர் நேஹா பார்திமதியானி, ஆகியோர் பங்கேற்கின்றனர். .


உரையாடல்களைத் தூண்டுவதற்கும், அர்த்தமுள்ள கூட்டாண்மையை  வளர்த்தெடுப்பதற்கும் அதன் மூலம் பொழுதுபோக்குத் துறையில்  பெண்கள் தங்களது வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ளவும், சவால்களை மேலும் எளிதாக எதிர்கொண்டு தடை செய்யவும் மைத்ரிக்கு உதவும் வகையில் மேலும் ஒரு சமூக அமைப்புப் பிரிவை பிரைம் வீடியோ, அறிமுகப்படுத்தியது,. மைத்திரியின் சமூக அமைப்புப் பிரிவை இங்கே காணவும்: Instagram | Facebook | YouTube

மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்இன் சமீபத்திய அமர்வை இங்கே காணுங்கள் 

தங்களின் மிக ஆழமான தனிப்பட்ட கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதன் மூலம், பங்கேற்பாளர்கள் தாங்கள் இதுவரை அடைந்த முன்னேற்றம் மற்றும் தொழில்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவை  திரைப்படங்கள், ஸ்ட்ரீமிங் அல்லது தொலைக்காட்சி–எதுவாக இருந்தாலும் அதிலுள்ள உணர்வார்ந்த மற்றும் உணர்வற்ற பாகுபாடு,  பாலின ஒற்றைத்தன்மையாக்குதல், பாதுகாப்பு மற்றும் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கிய சவால்களை மதிப்பாய்வு செய்தனர், மேலும், பங்கேற்பாளர்கள் தங்களின்  எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை கையாள்வதில் தங்கள் கற்றல்கள்  ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களிடையே வெளிப்பட்ட  பரஸ்பர தோழமை உணர்வு இந்த அமர்வுக்கு ஒரு தனிப்பட்ட தொனியை அளித்தது. நவீன கதை சொல்லல் என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம் ஒரு சமச்சீரான பெண் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுள்ள தீர்வுகளைக் கண்டறிய ஒன்றிணைந்து செயல்பட இந்த ஒருமித்த கூட்டு மற்றும் ஒன்றிணைந்த செயல்பாடுகளுக்கான தங்களது உறுதிப்பாட்டை பங்கேற்பாளர்கள் தங்கள் உரையாடல்களின் வழியாக மீண்டும் வலியுறுத்தினர். 

.பெண்கள் அதிகளவில் பணியமர்த்தப்படுவது, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அடிப்படைத் தேவைகள்  கவனமாக பராமரிக்கப்படுவது, மற்றும் விளைவுகள் சமச்சீராகவும் சமத்துவமாகவும் இருப்பது போன்றவற்றை   உறுதிசெய்ய பெண்கள் அதற்கான முடிவெடுக்கக் கூடிய பதவிகளில் பங்கேற்கவேண்டியது அவசியம் என்பதை மன்றம் ஏற்றுக்கொண்டது.


"மைத்ரியின் புதிய அமர்வின் மூலம், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கல், ஆகியவை தொடர்பானவற்றில் நம் முன் உள்ள சவால்களைப் புரிந்துகொண்டு சரியான தீர்வுகளைக் கண்டறிவதற்கு ஒத்துழைக்க விரும்புவதில் நம் நிலைப்பாட்டை  ஆராய்வதை கருத்தில் கொண்டு செயல்பட விரும்பினோம். " என்று இந்தியாவின் பிரைம் வீடியோ தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.“மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்க்கு இதுவரை எங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் ஆதரவில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளோம், இது முன்னேற்றத்திற்கான ஒரு படிப்படியான பயணமாக இருந்தாலும், ஏற்கனவே சில மாற்றங்கள் உருவாகி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். படைப்பாளிகளுடனான உரையாடல்களில், 'எங்கள் எழுத்தாளர்களின் அறைகளில் பெண் எழுத்தாளர்கள் உள்ளனர்' அல்லது 'எங்கள் பெண் கதாபாத்திரங்களுக்கு ஏஜென்சி உள்ளது' மற்றும் 'எங்கள் உள்ளடக்கம் நிச்சயமாக பெக்டெல் சோதனையில் தேர்ச்சி பெறும்' போன்ற விஷயங்களைக் கேட்பது, என்னைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய படிநிலையாகும். பிரைம் வீடியோவில், (DEI) குறித்து நாங்கள் ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம். அடுத்த கட்டமாக, எங்களின் அனைத்து தயாரிப்புகளிலும் குறைந்தது 30% பெண் HOD களை வைத்திருப்பதற்கு முயற்சி செய்ய விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மைத்ரிஇன் படைப்பாளர் மற்றும் நிர்வகிப்பவரான, ஸ்மிருதி கிரண், கூறினார், “மைத்ரி என்பது நாம் அனைவரும் விரும்பிய ஆனால் இல்லாத ஒரு வெளி.  பரந்த மற்றும் மாறுபட்ட இந்தியத் திரையுலகில் பணிபுரியும் பெண்களை ஒன்றிணைக்கவும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி நேர்மையான உரையாடல்களை மேற்கொள்ளவும், அந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கான  தீர்வு காணவும், பிரதிநிதித்துவப்படுத்துவதில் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தும் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும் வாய்ப்புகளுக்கு இட்டுச்செல்லவும் இது உருவாக்கப்பட்டது. இது மிகப்பெரிய விரைந்த முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று ஒருவருவருக்கு நம்பிக்கையளிக்கும் முதல் படிநிலையாகும்” .

பிரைம் வீடியோ அதன் உள்ளடக்கம் மற்றும் தயாரிப்புகள் மற்றும் படைப்பாளிகளின் சமூகத்தைச் சேர்ந்த அதன் கூட்டாளிகளுடன் சேர்ந்து 
பன்முகத்தன்மை, சம பங்கு மற்றும் உள்ளடக்குதல் ஆகியவற்றை  (DEI) மேம்படுத்துவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது. மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’உடன், பொழுதுபோக்கு துறையில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை பிரைம் வீடியோ தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து "கேக்கணும் குருவே" என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் உலகம் முழுவதும் வெளிய...