Monday, December 12, 2022

தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும்குறும்பட போட்டி .


தமிழ் மாநில கலை மற்றும்  கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும்
குறும்பட போட்டி .
பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் மாநில கலை மற்றும் 
கலாச்சார பிரிவின் சார்பில் தமிழ் தாய் விருதுகள் என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தவிருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் ஐந்து முதல் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் குழந்தை பெண்களின் முன்னேற்றம் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சிறந்த மூன்று குறும்படங்கள் ,சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ,சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற  விருதுகளும் 

பொது பிரிவில் சிறந்த மூன்று குறும்படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிக்கு நடுவர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ், இயக்குனர் யார் கண்ணன், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

வெற்றி பெறும் அனைவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும்.

போட்டியாளரகள் tamizhthaivirudhu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.

பதிவு செய்ய வேண்டிய  கடைசி தேதி 30 டிசம்பர் 2022 மாலை 6 மணிக்குள்.

வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கும் விழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கான அறிவிப்பை  பாஜக தமிழ் மாநில தலைவர் திரு அண்ணாமலை இன்று வெளியிட்டார்.

மேலும் தகவல்களுக்கு - 7904915281

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...