Sunday, January 1, 2023

சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர்!


சட்டம் ஒரு இருட்டறை முதல் நான் கடவுள் இல்லை வரை: எஸ்.ஏ. சந்திரசேகர்!

அதிரடி ஆக்ஷனில் சாக்ஷிஅகர்வால்!

டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் நடித்த சாக்ஷி அகர்வால்!

சாக்கி அகர்வால் நடித்த சண்டைக் காட்சி: கனல் கண்ணன் வியப்பு!

எஸ். ஏ .சந்திரசேகர் பாராட்டைப் பெற்ற இளம் நடிகர்!

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் அதாவது ஜிம்மில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார்.அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில்  நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார்.

இந்தப் படத்தை முழுவதுமாக படப்பிடிப்பு முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள்  மட்டும்  எடுக்கப்படாமல் வைத்து கடைசியாகப்  படம்  ஆக்கி  இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன்  நடிக்கிறார்.  ராணுவ வீரராக நடிக்கும் இவர் இப்படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த ஆக்சன் ஹீரோவாக பேசப்படுவார் என்று இயக்குநர் எஸ் எஸ் சந்திரசேகர் கூறுகிறார். ஏனென்றால் அவர் இரண்டு சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட  அழகான தாயாகவும். பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார். மற்றும் டயானா ஸ்ரீ என்கிற இளம் பெண், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் .'சட்டம் ஒரு இருட்டறை' படத்திலிருந்து தனது பரபரப்பைத் தொடங்கியவர் பல படங்களில் சட்டத்தை விளையாட வைத்தவர், இப்போது 'நான் கடவுள் இல்லை' படத்திலும் தொடர்கிறார் .அவரிடம் வந்த அந்த சக்தி இன்னும் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தப் படம் சாட்சியாக இருக்கும்.

இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக்கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும்.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...