Saturday, April 15, 2023

யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான " சைத்ரா " படத்தின் டிரைலர் வெளியானது


யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் ஹாரர் படமான " சைத்ரா " படத்தின் டிரைலர் வெளியானது 

24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் " சைத்ரா " 


மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ்  ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம்  " சைத்ரா " 

இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்,  மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது வரிகளுக்கு பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
பொட்டு படத்திற்கு எடிட்டிங் செய்த எலிஷா இந்த படத்திற்கும் பணியாற்றியுள்ளார். 

மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை - தேக்கமலை பாலாஜி.
இணை தயாரிப்பு - T. கண்ணன்
தயாரிப்பு - K. மனோகரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி M. ஜெனித்குமார் இயக்கியுள்ளார் . இவர் பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

 24 மணிநேரத்தில் நடக்கும் கதை இது.    இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 
⏯️  https://youtu.be/-JXTj4BcXhM

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...