Monday, April 3, 2023

*தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு*


*தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு*

*இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர்.*

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' பட குழுவினர் இன்ப அதிர்ச்சியுடன் இந்த போட்டியை காண வருகை தந்தனர். தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டினர்.

எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக 'எல். ஜி. எம்'  எனும் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.  இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரில் கண்டு ரசித்த 'எல். ஜி. எம்' பட குழுவினருடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவரான விகாஸ் ஹசிஜா மற்றும் கற்பனை திறன்மிகு படைப்பின் தலைவரான பிரியான்சு சோப்ரா உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

மறைந்த  இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!!   மீ...