Thursday, June 15, 2023

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான படம் " கடத்தல் "  ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. 
ஒரு உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் படம் " கடத்தல் " ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது


கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " கடத்தல் "
ஜூலை மாதம் வெளியாகிறது.


D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க 
சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், 
 தயாரித்துள்ள  படம் “கடத்தல்”  

கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம்,  க.சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன்,  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்செல்வா  
இசை – M.ஸ்ரீகாந்த்    
பாடல்கள் – பாவலர் எழில் வாணன்,இலக்கியன்,  சக்தி பெருமாள்.  
எடிட்டிங் – AL.ரமேஷ்    
சண்டை பயிற்சி –  குங்ஃபூ சந்துரு 
நடனம் – ரோஷன் ரமணா   
தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி  மாதவன்.
மக்கள் தொடர்பு –  மணவை புவன்  நிழற்படம் – தஞ்சை ரமேஷ் 
டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்  இணை தயாரிப்பு – M.R. தாமோதரன்- ரமேஷ் விஜயசேகர்.
தயாரிப்பு - செங்கோடன் துரைசாமி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிருக்கிறார் - சலங்கை துரை.

படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை கூறியதாவது…

ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது. இன்றைய இளைய தலை முறையினருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.

படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

படம்  ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் சலங்கை துரை.

No comments:

Post a Comment

*“Kudumbasthan has a relatable story for audiences” - Actor Manikandan*

https://youtu.be/uqJspATafVk?si=5mVBojkOVsIZslBW It often becomes a normalised situation, where an actor with a commendable movi...